India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்குப்பதிவை முன்னிட்டு டாஸ்மாக் கடைகள் ஏப்ரல் 17 முதல் ஏப்ரல் 19ஆம் தேதி வரை மூடப்படுகிறது. அதேபோல் வாக்கு எண்ணிக்கை நாளான ஜூன் 4ஆம் தேதியும் டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பரமக்குடி தாலுகா காந்தி நகர் தெற்கு தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். விவசாய கூலி தொழிலாளியான இவர் வாரிசு சான்று வேண்டி இ-சேவை மையம் மூலம் விண்ணப்பித்தார். இது தொடர்பாக எமனேஸ்வரம் விஏஓ பூமிநாதனை அணுகினார். அவரது மனுவை மேலதிகாரிக்கு பரிந்துரைக்க ரூ.2000 லஞ்சம் கேட்டார். இதையடுத்து சந்திரசேகரிடம் ரூ.2000 லஞ்சம் பெற்ற பூமிநாதனை ராமநாதபுரம் ஊழல் தடுப்பு போலீசார் நேற்று கைது செய்தனர்.
சாயல்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக வரும் பெண்களுக்கு டீயில் மயக்க மருந்து கலந்து கொடுத்து அவர்களிடம் நகைகளை திருடி செல்வதாக புகார் வந்தது. இதன்படி வழக்குப்பதிவு செய்து குற்றவாளியை பிடிக்க ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் தனிப்படை அமைத்தார். தீவிர விசாரணையில் திருச்சி தெற்கு மலைக்கோட்டையை சேர்ந்த முருகேஸ்வரியை நேற்று கைதுசெய்து அவரிடமிருந்து 24 பவுன் நகைகளை மீட்டனர்.
கடலில் கலக்கும் பிளாஸ்டிக் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசுபடுவது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக இலங்கை தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 30 கிமீ தூரத்தை 9 வயது சிறுமி தாரகை ஆராதனா, 7 வயது சிறுவன் நிஷ்விக் ஆகியோர் இடைவிடாமல் நீந்திக் கடந்தனர். சாதனை புரிந்த இருவரையும் ராமநாதபுரம் எஸ்பி சந்தீஷ் இன்று பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாளை ஆதரித்து திரைப்பட நடிகர் வையாபுரி மண்டபம் ஒன்றியத்திற்குட்பட்ட உச்சிப்புளியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். மாநில எம்ஜிஆர் மன்ற துணை செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், மாவட்ட இணை செயலாளர் கவிதா, மண்டபம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் வேட்பாளராக போட்டியிடும் நவாஸ்கனியை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் பரப்புரை மேற்கொள்ள ராமநாதபுரம் மாவட்டத்திற்கு வருகை தந்த
முக்குலத்தோர் புலிப்படை தலைவர் நடிகர் கருணாஸை ராமநாதபுரம் மாவட்ட திமுக செயலாளர் காதர் பாட்சா முத்துராமலிங்கம் எம்எல்ஏ வரவேற்றார்.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், பள்ளியில் ‘மாணவர் மனசு’ பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்சோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது.
ராமநாதபுரம் தொகுதியில் பாஜக கூட்டணி வேட்பாளர் ஓ.பன்னீர்செல்வம், நேற்றிரவு திருவாடானை அருகே உள்ள எஸ்.பி.பட்டினத்தில் பிரச்சாரத்தில் பேசுகையில், இந்த தொகுதியில் 5 பேர் என் பெயரிலேயே போட்டியிட்டு குழப்ப பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் வெறும் ‘ஒ’பிஎஸ்-கள்தான். நான் ஜெ. அடையாளம் காட்டிய ‘ஓ’பிஎஸ் (ஓ-வை குறிப்பிடுகையில் ஓ….. என நீளமாக இழுத்துச் சொன்னார்) என்றார். இது அங்கு சிரிப்பலையை ஏற்படுத்தியது.
ராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 தொகுதிகளில் AVSC (85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள்) சுமார் 1722 நபர்கள், AVPD (மாற்றுதிறனாளி வாக்காளர்கள்) 1844 நபர்கள் ஆக மொத்தம் சுமார் 3566 நபர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு வழங்கும் குழு ஏப்ரல் 5 முதல் 9 முடிய இல்லம் தேடிவருவர். அப்போது தங்களது தபால் வாக்கினை செலுத்தலாம் என கலெக்டர் விஷ்ணு சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடும் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ் கனியின் தேர்தல் பிரச்சாரத்திற்கு பள்ளி மாணவர்களை பயன்படுத்தியதாக சமூக வலைதளத்தில் வெளிவந்த செய்தியின் அடிப்படையில் அதன் உண்மைத் தன்மையினை கீழக்கரையில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், போலீசார் விசாரணை மேற்கொண்டுவருகிறார்கள். விசாரணையின் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென மாவட்டத் தேர்தல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.