India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக உள்ள நிலையில், தமிழகத்தின் அநேக பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இந்நிலையில் நாளை காலை 9 மணி வரை ராமநாதபுரம் மாவட்டத்தில் மிக கனமழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் சற்றுமுன் ராமநாதபுரத்தில் அதிகனமழைக்காக ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
பரமக்குடியில் 9 ஆம் வகுப்பு மாணவி கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நகர்மன்ற உறுப்பினர் சிகாமணி
உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் சிகாமணி சிறையில் உள்ளார். இந்நிலையில் 5 பேரும் திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜராகினர். குற்றம் சாட்டப்பட்ட 5 பேரும் நவ.27 ல் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.
டில்லியில் தேசிய குழந்தைகள் தின கலை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதனை மத்திய கல்வி இயக்குனர் முக்தா அகர்வால் துவக்கி வைத்தார். தமிழக அரசு, மதுரை கலை பண்பாட்டு மையம் ராமநாதபுரம் ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில் சிலம்பம் ஆசிரியர் லோக ஆகாஷ் தலைமையில் 4 மாணவர்கள் பங்கேற்றனர். பிரகுல் ரிங்பால் கிஷோர் இரட்டைகம்பு, ஹரி பிரித்திவிராஜ் ஒற்றைக்கம்பு, புகழ்மதி சுருள்வாழ் ஆட்டம் மூலம் பார்வையாளர்களை கவர்ந்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஜவகர்லால் நேரு பிறந்த நாள் பேச்சுப்போட்டி நவ.29இல் நடைபெற உள்ளது. மாவட்ட இப்போட்டியில் பங்கேற்று முதல் 3 இடம் பெறுவோருக்கு பரிசு, அரசு பள்ளி மாணவர் இருவருக்கு சிறப்பு பரிசு வழங்கப்பட உள்ளது. பள்ளிக்கு ஒருவர், கல்லூரிக்கு இருவர் இப்போட்டியில் பங்கேற்கலாம். 04567-232130 என்ற எண்ணில் என ஆட்சியர் சிம்ரன் ஜீத் சிங் காலோன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசின் புதிய முடிவு ராமேஸ்வரம் மீனவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுதியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படை பயன்படுத்திகொள்ள அந்நாட்டு அரசு ஒப்புதல் அளித்து, மன்னாரில் இருந்து 5 படகுகள், யாழ்பாணத்தில் இருந்து 8 படகுகள் என மொத்தம் 13 படகுகள் கடற்படையிடம் கொடுக்கப்பட்டுள்ளன. இலங்கையின் இந்த அறிவிப்பால் ராமேஸ்வரம் உள்ளிட்ட தமிழக மீனவர்கள் பெரும் சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இராமநாதபுரம் உட்பட 13 மாவட்டங்களில் மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட கிழக்கு பருவமழை தொடங்கியது முதல் தென் மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. தொடர் மழையால் இன்று(நவ.,20) இதுவரை 5 மாவட்டங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் வெளியில் செல்லும் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் செல்ல அறிவுறுத்தப்படுகின்றனர்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் இன்று(நவ.,20) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி, நெல்லை, தென்காசி மாவட்டங்களை தொடர்ந்து இராமநாதபுரம் மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT.
படகோட்டி உரிமம் பெற மீனவர்களுக்கு தமிழக அரசு திறன் மேம்பாட்டு கழகம் சார்பில் தேவையான பயிற்சி வழங்கப்பட உள்ளது. தகுதியான மீனவர்கள்,மீனவ இளைஞர்கள், நாட்டுப்படகு, விசைப்படகு ஓட்டுநர்கள் மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் அலுவலகம் மூலம் விண்ணப்பம் பெற்று இணையத்தில் பதிவேற்றம் செய்து பயிற்சியில் பங்கேற்கலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
இராமநாதபுரம் மாவட்டத்தில் 2024-25 ஆம் ஆண்டுக்கு பிரதான மந்திரி பயிர் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நெற்பயிருக்கு ஏக்கர் 1-க்கு பிரீமியம் தொகை ரூ.352 ஆகும். இந்நிலையில் இராமநாதபுரம் மாவட்டத்தில் 15.11.2024 வரை 128080 ஹெக்டேருக்கு 125648 விவசாயிகள் நெற்பயிருக்கு பிரதான மந்திரி பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் விவசாயிகள் பதிவு செய்து உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனுக்கு ரூ.3 கோடியில் மணிமண்டபம் அமைக்க கடந்த ஆண்டு முதல்வர் அறித்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மெட்ராஸ் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த நிலையில் அரசின் கொள்கை முடிவிற்கு தலையிட முடியாது எனக் கூறி மணிமண்டபம் கட்டும் அரசாணைக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.