India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழக கடலில் 61 நாள் மீன்பிடி தடைக்காலம் இன்று (ஏப்.15) துவங்கியது. இதையடுத்து அனைத்து விசைப்படகுகளும், சம்பந்தப்பட்ட தங்குதளம் செல்ல பாம்பன் தூக்கு பாலம் இன்று மதியம் 12 மணியளவில் திறக்கப்படுகிறது. அப்போது, மண்டபம் தென் கடல் பகுதியில் உள்ள விசைப்படகுகள் மண்டபம் வடக்கு கடல் பகுதிக்கு கொண்டு செல்லலாம் என மண்டபம் மீன்வளம், மீனவர் நலத்துறை உதவி இயக்குநர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழ் புத்தாண்டு பிறப்பையொட்டி, வாலாந்தரவை அருகே குயவன்குடி வெக்காளியம்மன் கோயிலில் குத்துவிளக்கு பூஜை நேற்றிரவு நடந்தது. இதில்
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதி தேர்தலில் போட்டியிடும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
பலாப்பழம் சின்னத்தில் வெற்றி பெற வேண்டி பாஜகவினர் சிறப்பு வழிபாடு செய்தனர்.
ராமநாதபுரத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், ராமநாதபுரத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.ராம்நாடு, பரமக்குடி, கடலாடி, தேவிபட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும், ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியில் கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் பா.ஜெயபெருமாளுக்கு தமிழ்நாடு கால்நடை வளர்ப்போர் பாதுகாப்புச் சங்கத்தின் மாநில தலைவர் சத்தியம் C.சரவணன் சாயல்குடி தனியார் திருமண மஹாலில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்தார்.
ராமநாதபுரம் வசந்த நகரில் உள்ள ரோஸ் நகர் பகுதியில் வசிப்பவர் செல்வரெத்தினம் (68) மனநிலை சரியில்லாமல் இருந்த இவர் நேற்று இரவு வீட்டிற்கு வெளியே சாலையில் தூங்கி கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் இவர் மீது மோதியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலியானார். இவரது மனைவி ராஜேஸ்வரி புகாரில் கேணிக்கரை இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று தமிழ் புத்தாண்டையொட்டி கிருஷ்ணன் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவருடன் தர்மர் எம்பி, மாநில பாஜக செயற்குழு உறுப்பினர் GPS. நாகேந்திரன், உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
இந்திய அரசியல் சாசன மேதை அம்பேத்கரின் 134 வது பிறந்த நாளையொட்டி மத்திய, மாநில எஸ்சி, எஸ்டி அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் ராமநாதபுரத்தில்
அம்பேத்கரின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து இன்று மரியாதை செலுத்தப்பட்டது. மாவட்ட தலைவர் கர்ணன், மாவட்ட செயலர் சேக்கிழார், மாநில துணை தலைவர் பாலச்சந்திரன், மாநில கொள்கை பரப்பு செயலர் மரியம் ஜேம்ஸ், மதிமுக துணைத்தலைவர் மல்லை சத்யா உள்பட பலர் பங்கேற்றனர்
ராமநாதபுரம் தீயணைப்பு படை அலுவலகத்தில் நீத்தார் நினைவு தினம் அனுசரிப்பு நிகழ்ச்சி இன்று (ஏப்ரல் 14) தீயணைப்பு படை அலுவலக வளாகத்தில் நடந்தது. இதில் வீரச்செயல் புரிந்து உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. மாவட்ட தீயணைப்பு படை அலுவலர் அப்பாஸ் தலைமையில் நடந்த இந்நிகழ்வில் ஏராளமான வீரர்கள் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் அதாவது காலை 10 மணிக்குள் மழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இப்பகுதியில் கடந்த சில நாட்களாக வாட்டி வந்த வெயிலால், தற்போது பெய்யும் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ராமநாதபுரத்தில் லயன்ஸ் கிளப் ஆப் இண்டர்நேஷனல் சார்பில் மன்னர் சேதுபதி மண்டல மாநாடு அதன் தலைவர் சீனிவாசலு தலைமையில் தனியார் மகாலில் நடந்தது. இம்மாநாட்டில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கிய சாதனையாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது. அதன்படி செய்யதம்மாள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் செந்தில்குமார்க்கு சிறந்த ஆசிரியருக்கான சான்றிதழ் வழங்கினர்.
Sorry, no posts matched your criteria.