India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழ்ப்புத்தாண்டை முன்னிட்டு நேற்று புதுக்கோட்டை திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில், புதுக்கோட்டை சாந்தநாத சுவாமி கோயில், தெற்கு 4-ஆம் வீதி ஆஞ்சனேயர் கோயில், மேலராஜ வீதியிலுள்ள தண்டாயுதபாணி சுவாமி கோயில், குமரமலை பாலதண்டாயுதபாணி கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அலங்காரம், ஆராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
சிவகங்கை நாடாளுமன்ற இந்தியா கூட்டணியின் கட்சியின் வேட்பாளர் கார்த்தி ப.சிதம்பரம் அவா்களுக்கு கை சின்னத்தில் வாக்குகள் கேட்டு இன்று ஆலங்குடி புனித அதிசய அன்னை ஆலயத்தில் வாக்குகள் சேகரித்தனர். நிகழ்ச்சியில் திருவரங்குளம் ஒன்றிய கழகச் செயலாளர் தங்கமணி, ஆலங்குடி நகர கழக செயலாளர் பழனிக்குமார், பேரூராட்சித் தலைவர் ராசி முருகானந்தம் கலந்து கொண்டனா்.
காவேரி கூட்டு குடிநீர் திட்டத்தின் பிரதான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் அதை சரி செய்யும் பணி இன்று நடைபெற உள்ளது. எனவே இலுப்பூர் பேரூராட்சியில் இன்று (14.04.2024) குடிநீர் வினியோகம் இருக்காது என் அதிகாரிகள் தெரிவித்துள்ளது. மேலும், பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்திக் கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
செம்பட்டிவிடுதி ஊராட்சி பூண்டியை சேர்ந்தவர் கோவிந்தன். இவர் நேற்று ஜல்லிக்கட்டு காளையை தோட்டத்தில் மேய்ச்சலுக்காக கட்டிப்போட்டார். அப்போது
எதிர்பாராதவிதமாக காளை கோவிந்தனை குத்தியது. இதில், பலத்த காயம் அடைந்த அவரை அப்பகுதிமக்கள் மீட்டு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று மாலை மழை பெய்தது. நேற்று மாலை வானம் கருமேகம் சூழ்ந்து சற்று நேரத்தில் மழை கொட்ட தொடங்கியது. கோடை நேரத்தில் பெய்த மழையால் குளிர்ந்த சூழல் நிலவியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். தெருக்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிதமான மழை பெய்து வந்தது. அந்த வகையில் தமிழகத்தில் புதுக்கோட்டை மாவட்டம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு இன்று மாலை 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் ஊராட்சி கண்மாயில் நேற்று மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. இதில் கேசராபட்டி, உலகம்பட்டி, க.புதுப்பட்டி, கண்டியாநத்தம், ஆலவயல் ஊர்களை சேர்ந்த கிராம மக்கள் ஊத்தா, வலை, பரி, கச்சா ஆகியவற்றை கொண்டு விரால், ஜிலேபி, அயிரை வகை மீன்களை பிடித்து சென்றனர். இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை உள்ளிட்ட பல மாவட்டங்களில் இன்று காலை 10 மணி வரைக்கும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மழையால் சில இடங்களில் தண்ணீர் தேங்கும், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று தேர்தல் பிரச்சாரத்துக்காக மதுரை வந்தார். முன்னதாக அவர் மதுரையிலிருந்து புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் வந்து இங்குள்ள கோட்டை காலபைரவர் கோயில், சத்தியவாகீஸ்வரர் கோயில்களில் சுவாமி தரிசனம் செய்வதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் நேற்று மாலை திருமயம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக மத்திய அமைச்சர் அமித்ஷாவின் திருமயம் வருகை ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டது.
சோடியூரை சேர்ந்தவர் கணேசன் மகன் பாலாஜி (19). இவர் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் கல்லூரி விழாவில் பங்கேற்க நேற்று ஒத்திகையில் ஈடுபட்டபோது மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
Sorry, no posts matched your criteria.