India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 39 தொகுதிகளிலும் 72.09 சதவீத
வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 எம்பி தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம்- திருச்சி 71.20 சதவீதமும், சிவகங்கை 71.05 சதவீதமும், கரூர் 74.05 சதவீதமும், ராமநாதபுரத்தில் 71.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா தேக்காட்டூர் ஊராட்சியில் சிவபுரம்,கீழ,,மேலத்தேமுத்துப்பட்டி,இளங்குடிப்பட்டி,சத்திரம், மழுக்கன்பட்டி ஆகிய கிராமங்களை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். அனைத்து கட்சிகள், கிராம மக்கள் முடிவுசெய்து ஓட்டுப்போட 4 பேரைத்தவிர யாரும் வராததால் வெறிச்சோடி கிடந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து புதுகை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும்படை, நிலையான மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் துவார் ஊராட்சிக்கு உட்பட்ட கெண்டையன்பட்டியில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஜாதி அடிப்படையில் மாற்று கட்சியினர் இருப்பதனால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அதிகாரிகள் உடனுக்குடன் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். 800க்கும் மேற்பட்ட வாக்குகள் இருக்கும் நிலையில் தற்போது 40 வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை மகாவீர் ஜெயந்தியை தினத்தை முன்னிட்டு வரும் 21ஆம் தேதி புதுகை மாவட்டத்தில் உள்ள டாஸ்மார்க் நிறுவனத்தின் இந்திய தயாரிப்பு அந்நிய மதுபான சில்லறை விற்பனை கடைகள், மதுபான கடைகள், மதுபானக்கூடங்கள், மதுபான உரிமை கடைகள், பார்கள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்படுகிறது இந்த நாளில் மது விற்பனை செய்யக்கூடாது என்று கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் நாளை ஏப்ரல் 19 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்கள் வாக்குப் செலுத்தப்பட உள்ளனர். இந்நிலையில் பொன்னமராவதி சேர்ந்த காவல்துறையினர் வாக்குச்சாவடி மையங்களில் நடக்கும் அசம்பாவிதங்களை தடுக்கும் விதமாக அரசு மற்றும் காவல்துறையினர் தபால் வாக்குகள் செலுத்தப்பட்டது. அதில் காவல் துறையினர் தபால் ஓட்டு மூலம் வாக்குகளை செலுத்தி ஜனநாயக கடமையை நிறைவேற்றினர்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றுமுதல் தொடர்ந்து 3 நாட்கள் புதுக்கோட்டை மாவட்டத்திலும் 129 டாஸ்மாக் கடைகள் விடுமுறை விடப்பட்டு மேலும் டாஸ்மாக் கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.இதேபோல ஓட்டல் பார்களும் இயங்கவில்லை. இந்த நிலையில தொடர் விடுமுறையின் காரணமாக மதுப்பிரியர்கள் பலர் தங்களுக்கு தேவையான மதுபானங்களை மொத்தமாக வாங்கி சென்றனர். நேற்று ஒரே நாளில் ரூ.3 கோடி வரைக்கும் மதுபானங்கள் விற்பனையானது.
புதுக்கோட்டை அருகே சிப்காட் தீயணைப்பு நிலையம் சார்பில் தீ தொண்டு நாள் வார விழாவையொட்டி விழிப்புணர்வு துண்டு பிரசுரம் வினியோகம் செய்யும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. விழாவில் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் அப்துல்ரகுமான் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் பொதுமக்களுக்கு தீ பாதுகாப்பிற்கான விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வினியோகம் செய்து விழிப்புணர்வு வழங்கினர்.
புதுக்கோட்டைக்கென தனியே தொகுதி இல்லாததால், முக்கியத் தலைவா்களின் பிரசாரம் இன்றி, குறிப்பிட்ட சில தலைவா்களின் பிரசாரத்துடன் புதன்கிழமை மாலையுடன் தோ்தல் பிரசாரம் நிறைவடைகிறது.
திருச்சி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் ‘இந்தியா’ கூட்டணியின் மதிமுக வேட்பாளா் துரை வைகோவுக்காக அவரது தந்தையும் மதிமுக பொதுச் செயலருமான வைகோ கந்தா்வகோட்டை மற்றும் புதுக்கோட்டையில் பிரசாரம் மேற்கொண்டாா்.
Sorry, no posts matched your criteria.