Pudukkottai

News September 14, 2024

குரூப் 2 தேர்வு பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்

image

தமிழ்நாடு தேர்வு ஆணையத்தால் நடத்தப்படும் குரூப் 2 தேர்வு புதுக்கோட்டை மன்னர் கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. இதில் ஏராளமான பேர் எழுதினார்கள் மாவட்ட ஆட்சியர் அருணா நேரில் சென்று தேர்வு எழுதும் ஒவ்வொரு அறையையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா துணை ஆட்சியர் கௌதம் தாசில்தார் பரணி ஆகியோர் உடன் இருந்தனர்.

News September 14, 2024

புதுக்கோட்டையில் தேர்வு எழுத வந்த மாணவர்கள் வருத்தம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 31 மையங்களில் 15,387 விண்ணப்பதாரர்கள் தேர்வு எழுதுகின்றனர். இன்று காலை காலை 9.30 – 12.30 வரை நேரம் ஒதுக்கப்பட்ட நிலையில் தேர்வு எழுத வந்த மாணவ மாணவிகளை தாமதமாக வந்ததால், காவல்துறை அதிகாரிகள் கேட்டிலேயே நுழைய விடாமல் தடுத்தி நிறுத்தினர். மேலும் நேரமாகி விட்டது நீங்கள் திரும்பிச் செல்லுமாறு அறிவுரை கூறினார். இதனால் சில மாணவ மாணவிகள் வருத்தத்துடன் சென்றனர்.

News September 14, 2024

புதுக்கோட்டை அருகே பாம்பு கடித்து இளைஞர் உயிரிழப்பு

image

கீரமங்கலம் அடுத்த பாண்டிக்குடி கிராமத்தை சேர்ந்த செல்லத்துரை மகன் அஜித் இன்ஜினியரிங் படித்துள்ளார். அவர் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும் போது துரதிஷ்டவசமாக பாம்பு கடித்ததில் இறந்து போனார். இது குறித்து தந்தை அளித்த புகாரின் பேரில் கீரமங்கலம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 24 வயது இளைஞன் பாம்பு கடித்து இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

News September 14, 2024

புதுக்கோட்டையில் ஒரே நாளில் 3 பேர் தற்கொலை

image

புதுக்கோட்டை அடுத்த சீனமங்கலம் மாரியம்மாள் கணவருடன் ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். வடகாடு பள்ளத்து விடுதியை சேர்ந்த உமா நீண்ட காலமாக வயிற்று வலியால் பூச்சிக்கொல்லி மருந்தை சாப்பிட்டு உயிரிழந்தார். அறந்தாங்கியை சேர்ந்த குமார் மோனோகுரோட்டாபஸ் குடித்து உயிரிழந்தார். நேற்று மட்டும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News September 13, 2024

வர்த்தக சங்க பொன்விழா மாவட்ட ஆட்சியருக்கு அழைப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக சங்கம் சார்பில் வருகின்ற 29ஆம் தேதி பொன்விழா ஆண்டு புதுக்கோட்டையில் நடைபெற உள்ளது. வர்த்தக சங்க தலைவர் சாகுல் ஹமீது தலைமையில் பொன்விழா ஆண்டிற்கு மாவட்ட ஆட்சியர் கலந்து கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து அவருக்கு சால்வை வழங்கி மரியாதை செலுத்தினார்கள். வர்த்த சங்க செயலாளர் பொருளாளர் நிர்வாகிகள் உடன் இருந்தன.

News September 13, 2024

மணமேல்குடியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் மாவட்ட ஆட்சியர்

image

அறந்தாங்கி கோட்டம், மணமேல்குடி வட்டத்தில் எதிர்வரும் 18.09.2024 புதன்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை 18.09.2024 பிற்பகல் 2.30 மணிக்கு மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கலாம்

News September 13, 2024

உதயநிதி ஸ்டாலினுடன் புதுக்கோட்டை அமைச்சர்

image

தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நடைபெற்று முடிந்த சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் நைட் ரேஸை வெற்றிகரமாக நடத்துவதற்கு அயராது உழைத்த அனைவரையும் கௌரவிக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

News September 13, 2024

புதுக்கோட்டையில் தேமுதிக துணை பொதுச்செயலாளர் சுற்றுப்பயண விவரம்

image

தேமுதிக துணை பொதுச்செயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினருமான L.K.சுதீஷ் புதுக்கோட்டையில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் விவரம் வெளியீடு. அதன்படி
காலை 10.00 மணிக்கு களமாவூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு, காலை 10.30 மணிக்கு கட்டியாவயல் புறவழிச்சாலையில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றிவைத்தல், மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.

News September 13, 2024

முதல்வன் பட பாணியில் புதுக்கோட்டை எம்‌.எல். ஏ.

image

புதுக்கோட்டை மாநகரில் எம்எல்ஏ முத்துராஜா மூன்று வார்டுகளில் நேற்று ஆய்வு செய்தார். அவர் வீடு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கண்டறிந்தார். இந்த காட்சியை பார்க்கிற பொழுது முதல் படத்தில் அர்ஜுன் எப்படி செயல்படுகின்றார். அதேபோல் இவரும் செயல்படுகிறார் என மகிழ்ச்சியும் தெரிவித்தனர்‌. மேலும் முத்துராஜா முதலமைச்சர் ஸ்டாலினை போல் துள்ளியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

News September 13, 2024

அறந்தாங்கி அருகே தம்பி படுகொலை செய்த அண்ணன்

image

அறந்தாங்கி அடுத்த மருதங்குடி கிராமத்தில் அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி படுகொலை. இந்நிலையில் தம்பி வீரசேகர் என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் ரமேஷ் என்பவர் மருதங்குடி பிள்ளையார் கோவில் அருகில் அடித்தது கொலை செய்துள்ளார். இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. அண்ணன் ரமேஷ் உடன் அவரது பங்காளிகள் சேர்ந்து அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!