India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
ஆலங்குடி அருகே வெண்ணாவல்குடி மயிலாடிகாடு கிராமத்தைச் சேர்ந்த ராஜாகண்ணு என்பவரது மகன் அஸ்வின்ராஜ் வயது (17). இவர் வெண்ணாவல்குடி அரசு பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று மாலை பள்ளிமுடிந்து சூத்தியன்காடு செல்லும் சாலையில் முன்விரோதம் காரணமாக மர்ம நபர்கள் சிலர் அஸ்வின்ராஜை உருட்டு கட்டையால் கொடூரமாக தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன் மருத்துவமனையில்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆவுடையார்கோவிலை சேர்ந்தவர் மாரிமுத்து. இவர், நேற்று மைசூருக்கு சென்று விட்டு ஆலங்குடி செல்லும் வழியில் பாத்தம்பட்டி அருகே வந்த போது மயில் ஒன்று பறந்தது. இதனால், நிலை தடுமாறிய அவர் மோட்டார் சைக்கிளில் திடீரென பிரேக் போட்டபோது, அவரது மகள் வீரலட்சுமி (28) தூக்கி வீசப்பட்ட நிலையில், தலையில் பலத்த காயத்துடன் உயிரிழந்தார். இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தியது.
புதுக்கோட்டை மாவட்டம் பெருங்களூரில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பிள்ளையார் கோவில் கட்டி வழிபாடு செய்து வந்தனர். இந்நிலையில், கல்லூரி கோவிலுக்குள் இருந்த பிள்ளையார் சிலையை காணவில்லை என்றும், பிள்ளையாரை கண்டுபிடித்து தர கோரி கல்லூரி நிர்வாகத்தினர் ஆதனக்கோட்டை போலீசாரிடம் இன்று புகார் மனு அளித்துள்ளனர்
திருச்சி முதல் மீமிசல் வரை முதலமைச்சர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 2023-2024ஆம் ஆண்டில் இருவழி சாலை இருந்து 4 வழி சாலையாக அகலப்படுத்தி வலுப்படுத்தும் பணியினை புதுகை அசோக்நகர் பகுதியில் நடைபெற்று வருகிறது. அந்த பணியினை திருச்சிராப்பள்ளி கண்காணிப்பு பொறியாளர் செந்தில், புதுகை கோட்ட பொறியாளர் தமிழகன், ஆலங்குடி உதவி கோட்ட பொறியாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் தலைமையில், புதுக்கோட்டை மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள அனைத்து துறை அரசு அலுவலர்களும் கலந்து கொண்டு துறை ரீதியாக மாவட்ட வளர்ச்சி குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து தெரிவிக்க உள்ளனர்.
திருவரங்குளம் அடுத்த கோவில்பட்டி அரசு ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் கட்டப்பட்டுள்ள இரண்டு வகுப்பறையுடன் கூடிய புதிய கட்டிடத்தை திறந்து வைக்க அமைச்சர் மெய்யநாதன் இன்று வருகை புரிந்தார். அப்போது நிகழ்ச்சியில் தன்னை ஆரத்தி எடுத்து வரவேற்ற மாணவர்களை அழைத்து திறந்து வைக்குமாறு கூறினார். பொதுமக்கள் மத்தியில் இந்த செயல் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.
சென்னையில் நடிகர் பிரபுவை புதுக்கோட்டை முன்னாள் எம்.பி. திருநாவுக்கரசர் இன்று நேரில் சந்தித்தார். அப்போது தன்னுடைய மகன் இல்ல திருமண விழாவிற்கான அழைப்பிதழை வழங்கினார். மேலும் பிரபு வருவதாக உறுதியளித்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, பொன்னமராவதி, கீரனூர், திருமயம், அரிமளம் உள்ளிட்ட பகுதிகளில் சம்பா சாகுபடி செய்வதற்கு விவசாயிகள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் விவசாயிகளுக்கு வழங்கும் விதை நெல் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விதை நெல் விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பயிலும் மாணாக்கர்களுக்கு வழங்கப்படும் சத்துணவின் தரம் குறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித் தலைவர் அருணா இன்று (20/08/2024) நேரில் சென்று ஆய்வு செய்தார். இந்த நிகழ்வில் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) அப்துல் ரசூல் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
புதுகை ஆட்சியரக வளாகத்தில் நேற்று நடந்த மக்கள் குறைதீர் கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் மு.அருணா தலைமை வகித்தார். கூட்டத்தில் 13 ஒன்றியங்களில் உள்ள பொதுமக்களிடமிருந்து 660 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டன. இதில், மாவட்ட வருவாய் அலுவலர் ரம்யாதேவி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.