India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தமிழகத்தில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள 20 டிஎஸ்பிக்கள் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி புதுக்கோட்டை மாவட்ட குற்ற புலனாய்வு துறை டிஎஸ்பி கல்யாணகுமார் கரூர் மாவட்டத்திற்கும், குற்றப்பிரிவு துறை டிஎஸ்பி செல்வம் திருப்பூருக்கும், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு டிஎஸ்பி கந்தசாமி விழுப்புரத்திற்கும் மாற்றம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் இன்று உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை டவுன் டிஎஸ்பியாக பணிபுரிந்து வந்தவர் ராகவி இவர் சென்னை சிட்டி டிஎஸ்பியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். புதுக்கோட்டையில் பணியில் இருந்த போது பல்வேறு குற்றவாளிகளையும் பல்வேறு குற்ற சம்பவங்களையும் திறம்பட கையாண்டு பல்வேறு பாராட்டுகளை பெற்றுள்ளார். தற்போது அவர் சென்னை சிட்டி டிஎஸ்பியாக மாற்றப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆவுடையார் கோவில் அடுத்த உப்பளம் பகுதியில் 3 சுவாமி சிலைகள் இருப்பதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற வருவாய் துறையினர், மூன்று கல்லால் ஆன சுவாமி சிலைகளை மீட்டனர். அதற்கு யாரும் உரிமை கூறாததால், மூன்று சிலைகளும் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
திருமயம் அருகே உள்ள பனங்குடி கிராமத்தில் அமைந்துள்ள பிள்ளை பெருமாள் அய்யனார் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. இந்நிலையில் இன்று இந்த கோவிலில் சிவகங்கை எம்.பி. கார்த்தி சிதம்பரம் சாமி தரிசனம் செய்தார். இந்த நிகழ்ச்சியில் காரைக்குடி எம்.எல்.ஏ. மாங்குடி, வடக்கு வட்டார தலைவர் அர்ஜுனன், ஒன்றிய கவுன்சிலர் கணேஷ் பிரபு உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
கறம்பக்குடி ஒன்றிய அலுவலகம் அருகே அரசால் தடை செய்யப்பட்ட மூணாம் நம்பர் லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் வெங்கடேசன், வினோத் பாரி, சக்திவேல் ,சபரி வாசன், ஆகிய நான்கு பேரையும் கைது செய்து, அவர்களிடமிருந்து ரூ.27,370 ஆண்ட்ராய்டு போன் 5, ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை நகர டிஎஸ்பியாக பணியாற்றி வந்த ராகவி பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதனைதொடர்ந்து, புதுக்கோட்டை நகர டிஎஸ்பியாக அப்துல் ரகுமான் இன்று பொறுப்பேற்றார். இவர், ஏற்கனவே புதுக்கோட்டை பகுதியில் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக நகர டிஎஸ்பியாக பொறுப்பேற்றுள்ள அப்துல் ரஹ்மானுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை 10:30 மணிக்கு விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற உள்ளது. விவசாயிகள் தங்களுக்கு என்ன தேவையோ அதனை மனுவாக அளித்து நிவாரணம் பெறலாம் என ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார். மேலும் விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகளை எடுத்து கூறினால் அதனை உடனே நிவர்த்தி செய்யப்படும் என அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்கள் மொத்தம் 4 நபர்களுக்கு இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
புதுக்கோட்டை காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும் குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரி மற்றும் ஆளினர்கள் மொத்தம் 4 நபர்களுக்கு இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டி நற்சான்றிதழ் வழங்கினார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சிவகங்கை பாராளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம், மாவட்ட ஆட்சித்தலைவர் அருணா, முன்னிலையில், மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களை இன்று வழங்கினார். இதில் கூடுதல் ஆட்சியர் அப்தாப் ரசூல், கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. சின்னத்துரை ஆகியோர் உடன் இருந்தனர்.
Sorry, no posts matched your criteria.