Pudukkottai

News May 13, 2024

புதுக்கோட்டையில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா!

image

புதுக்கோட்டையில் ஸ்ரீ
சங்கர மடத்தில் ஆதிசங்கரர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி கடந்த மே 8 ஆம் தேதி முதல் மே 11 ஆம் தேதிவரை திருவிடைமருதூர் பாடசாலாவின் வித்யார்த்திகள் நடத்திய வேதபாராயணம் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று ஹோம நிகழ்ச்சிகள், பாராயண பூர்த்தி ஆகியன நடைபெற்றன. அதனை தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேக, ஆராதனையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

News May 12, 2024

புதுக்கோட்டை: பால் வேன் ஓட்டுனர் மர்ம சாவு

image

கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டியில் பட்டுக்கோட்டை- கந்தர்வகோட்டை சாலையில், நேற்று பால் வேன் ஒன்று காலை முதலே நின்று கொண்டிருந்த நிலையில், மாலையில் அந்தவழியே சென்றவர்கள் அருகே சென்று பார்த்தபோது உள்ளே இளைஞர் ஒருவர் சடலமாக கிடந்துள்ளார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலீஸார் நடத்திய விசாரணையில் இறந்து கிடந்தது புதுகை காந்தி நகரைச் சேர்ந்த தனியார் பால் வேன் ஓட்டுனர் குமரன்(25) எனத் தெரியவந்தது.

News May 12, 2024

புதுக்கோட்டை அருகே குளிக்க சென்றவர் நீரில் மூழ்கி பலி!

image

விராலிமலை அருகே, குடுமியான்மலையைச் சேர்ந்தவர் வெங்கடாச்சலம் என்பவரது மகன் ராஜபாண்டியன் (40).திருமணமாகி 3 வயதில் குழந்தை உள்ளது. சென்னையில் பணிபுரிந்து விடுமுறையில் வந்த இவர் நெல்லிகுளத்தில் குளிக்க சென்று நீரில்ழூழ்கி உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த அன்னவாசல் போலிஸார் நேற்று ராஜபாண்டியன் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

News May 11, 2024

அறந்தாங்கி: புதருக்கு தீ வைத்தவர் தீயில் கருகி பலி

image

அறந்தாங்கி, நற்பவளகுடியில் வசிப்பவர் சேவுகன்(65). இவர்
நேற்று தனது வீட்டின் அருகே புல், புதர்களை சுத்தம் செய்து
எரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராவிதமாக அவர்மீதும் தீப்பற்றியது. புதுகை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அறந்தாங்கி போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.

News May 11, 2024

புதுகை: மாதாந்திர கலந்தாய்வு கூட்டம்

image

புதுக்கோட்டை 108 ஆம்புலன்ஸ் தொழிலாளர் சங்கத்தின் மே மாத மாதாந்திர கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.இதில் அனைத்து பகுதிகளிலும் 24×7 நேரமும் ஆம்புலன்ஸ் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் 108 தொழிலாளர்களுக்கு 30% ஊதிய உயர்வை வழங்க வேண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையில் பணிபுரியும் பெண் தொழிலாளர்களுக்கு மகப்பேறு விடுப்பில் செல்ல மாற்று தொழிலாளர்களை நிர்ணயிக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

News May 11, 2024

புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.11) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நண்பகல் 1 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. கோடையின் தாக்கம் அதிகம் இருந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 11, 2024

ஜூலை 2இல் துணைத் தேர்வு?

image

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று வெளியானது. இந்நிலையில், தேர்வில் தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத மாணவர்களின் எதிர்கால நலன் கருதி 10ஆம் வகுப்பு துணைத் தேர்வை ஜூலை 2ஆம் தேதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் தேர்ச்சி பெறுபவர்கள் இந்தக் கல்வியாண்டிலேயே உயர் கல்வி பயிலத் தகுதியுடையோராவார். இதற்கான தேர்வு அட்டவணை இன்று (மே 11) வெளியிடப்படும் எனத் தெரிகிறது.

News May 10, 2024

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: மாநில அளவில் 23 ம் இடம்!

image

புதுகை மாவட்டத்தில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வில் 21,856 பேர் தேர்வெழுதிய நிலையில் 20,073 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர்கள் 88.78 சதவீதமும், மாணவிகள் 94.81 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது மொத்த அளவில் 91.84 சதவீதமாகும். அதன்படி புதுகை மாவட்டம் மாநில அளவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தேர்ச்சியில் 23 வது இடத்தை பெற்றுள்ளது.

News May 10, 2024

புதுகையில் மழைக்கு வாய்ப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (மே.10) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, இரவு 7 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஆங்காங்கு மழை பெய்து வருவது குறிப்பிடத்தக்கது.

News May 10, 2024

புதுகை அருகே 12 ஆண்டுகளாக 100% தேர்ச்சி

image

மதியநல்லூர் அரசு உயர் நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 % தேர்ச்சி பெற்றது. இப்பள்ளியானது தொடர்ந்து 12 ஆண்டுகளாக 100% சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளியின் மாணவன் பவிக்சாத் 464 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடம் பெற்றார். இப்பள்ளியின் தொடர் வெற்றியை பாராட்டி இன்று பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இராமசாமி ஆசிரியர், மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.