India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
சித்தன்னவாசல் எதிரே உள்ள மலையடி பள்ளத்தில் இன்று காலை (60) வயது மதிக்கதக்க ஒரு ஆண் சடலம் மிதப்பதாக அப்பகுதி மக்கள் அன்னவாசல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அன்னவாசல் போலீசார், தீயணைப்புதுறை உதவியுடன் சடலத்தை மீட்டனர். பின்னர், இறந்தவர் யார், எந்த ஊர், தண்ணீரில் மூழ்கி இறந்தாரா, தற்கொலையா என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.
இந்திய தேர்தல் ஆணையத்தால் நடைபெறும் வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிக்காக அந்தந்த பகுதி பாக அலுவலர்கள் வீடு வீடாக அக்.18ஆம் தேதி வரை வருவார்கள். அதைத் தொடர்ந்து அக்.29 ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். அதில் உள்ள திருத்தங்கள் தொடர்பாக வாக்காளர்கள் உரிய படிவங்கள் மூலம் நவ.24 வரை விண்ணப்பிக்கலாம். என மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ரயில் பாதையில் நமணசமுத்திரம் ரயில்வே கேட் இன்று மூடப்படுகிறது. பராமரிப்பு பணி காரணமாக இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை ரயில்வே கேட் மூடப்படுகிறது. எனவே, மதுரை, காரைக்குடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு புறவழிச்சாலை மூலம் செல்ல ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இணையவழி ஆபாச தாக்குதல் நடத்துவோர் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பெண்களை ஆபாசமாக இழிவுபடுத்துவதும், அறுவறுக்கத்தக்க முறையில் பிரச்சாரம் செய்வதும் எந்த சூழலிலும் ஏற்றுக்கொள்ளமுடியாத இழிச்செயல்” என திமுக எம்.பி கனிமொழி X-தளத்தில் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.
2024-25 ஆண்டிற்கான திருக்குறள் முற்றோதல் நிகழ்ச்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 1333 திருக்குறள்களையும் எவ்வித தடங்கள் இல்லாமல் மாணவ மாணவியர் முற்றோதல் வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் பெற்று 30-ஆம் தேதிக்குள் ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். இது வெற்றி பெறுவோருக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் வம்பன் விதைப்பெருக்கப் பண்ணையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்து கொண்டு ரூபாய் 77.00 இலட்சம் மதிப்பீட்டில் 250 மெட்ரிக் டன் விதை சேமிப்புக் கிடங்குடன் கூடிய நவீன மயமாக்கப்பட்ட விதை பதப்படுத்தும் மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிகளை அடிக்கல் நாட்டி தொடக்கி வைத்தார்.
அறந்தாங்கி கண்டிச்சங்காடு கிராமத்தை சேர்ந்தவர் சிவமுருகையா (65). இவரது சகோதரர் சிவரத்தினம் (52). இருவருக்கும் இடையே சொத்து பிரச்னை இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று சிவமுருகையா பொது இடத்தை உழுததை கண்ட சிவரத்தினம் தடுத்துள்ளார். அப்போது, சிவமுருகையா, அவரது மருமகன் பசுபதி ஆகிய இருவரும் சேர்ந்து சிவரத்தினத்தை கத்தியால் கழுத்தில் குத்தியுள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
பொன்னமராவதி ஜெ.ஜெ நகரில் வசித்து வருபவர் அழகுமணி. இவரது மனைவி நல்லம்மாள். பலகாரக்கடை நடத்தி வருகிறார். இவர்களுக்கு பூபதி (13), கார்த்திகேயன் (11) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். சகோதரர்கள் 2 பேரும் நேற்று சண்டையிட்டு கொண்டனர். இந்நிலையில் கடையின் உள்ளே சிறுவன் பூபதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்த பொன்னமராவதி போலீசார் சிறுவனின் உடலை மீட்டு விசாரணை மேற்கொண்டன்
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களை அவதூறாக விமர்சித்த பாரதிய ஜனதா கட்சி மாநில தலைவர் அண்ணாமலை கண்டித்து விராலிமலை செக் போஸ்டில் இன்று காலை 8.30 மணிக்கு அதிமுகவினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளனர். இதில் கழக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமான கலந்து கொள்ளும்படி விராலிமலை சட்டமன்ற தொகுதி உறுப்பினர் முன்னாள் அமைச்சர் டாக்டர் சி விஜயபாஸ்கர் அழைப்பு விடுத்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் உள்ளோர் நல சங்கத்தில் எச்ஐவி தொற்று உள்ள மக்களுக்கு ஆல் தி சில்ட்ரன் தொண்டு நிறுவனம் மூலம் சத்தான உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. இதில் சிறப்பு விருந்தினர்களாக விஸ்வநாதன், மரம் நண்பர்கள் ரியாஸ்கான் குருதி கூடு அமைப்பில் செந்தில், ஆலங்குடி சக்தி கணேஷ், காமராஜபுரம் தயாநிதி ஊடகத்துறை சார்ந்த பழனியப்பன் மற்றும் சத்யபிரியா ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.