India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
விராலிமலையை அருகே உள்ள சின்னகோனார் பட்டியை சேர்ந்தவர் சாமிக்கண்ணு. இவரது மகள் மகாலெட்சுமி (20). இவர் இலுப்பூரில் உள்ள தனியார் கல்லூரியில் இஞ்சினியரிங் 3-ஆம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று வழக்கம் போல் கல்லூரிக்கு சென்ற அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதுகுறித்து மாணவியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் விராலிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருமயம் அருகே உள்ள பில்லமங்கலத்தை சேர்ந்தவர் மஞ்சுநாதன். விவசாயி. இவரது மகன் காளிமுத்து (18). இவர் கீழச்சிவல்பட்டியில் பிளஸ்.2 . படித்துவந்தார். இவர் நேற்று பெற்றோருடன் ஏற்பட்ட பிரச்னையில் மனமுடைந்து வீட்டருகே உள்ள மரத்தில் தூக்குப்போட்டு இறந்தார்.இந்த குறித்து திருமயம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
பொன்னமராவதி VVHSS பள்ளியில் நாளை 9:15 மணிக்கும், ஆலவயல் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10 மணிக்கும், சடையம்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் 10.45 மணிக்கும் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மாணவர்களுக்கு வழங்க உள்ளார். இதில் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 71-வது பிறந்தநாள் அன்று எம்எல்ஏவின் திட்டம் 71 என்னும் சிறப்பு திட்டத்தை தொடங்கி புதுகை எம்எல்ஏ செயல்படுத்தி வருகிறார்.இந்நிலையில் புதுக்கோட்டை எம்எல்ஏ டாகடர்.வை.முத்துராஜா செய்தியாளர்களிடம் கூறியதில் வாட்ஸாப் எண் 86087 17171 மூலமாக எம்எல்ஏவின் திட்டம் 71-ல் மூலம் பெறப்படும் புகார்களுக்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என தெரிவித்தார்.
ஆரியூரை சேர்ந்தவர் ரமேஷ் (வயது-65) இவருக்கு அடிக்கடி நெஞ்சுவலி இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதற்காக மருத்துவனையில் காண்பித்து மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்த நிலையில் வலி அதிகமானதால் வீட்டில் இருந்த பூச்சி மருந்தை குடித்து மயங்கினார். பின்னர் அவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அன்னவாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுகை மின்சார வாரிய மேற்பார்வை பொறியாளர் அசோக் குமார் இன்று மழைக்காலம் என்பதால் மின்கம்பங்களில் கால்நடைகளை கட்டவோ துணிகளை காய வைக்கவோ, சிறுவர்களை விளையாட அனுமதிக்கக் கூடாது என்றும், மழைக்காலங்களில் மரத்திற்கு கீழ் நிற்கக் கூடாது என்றும், மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். மேலும், மின்சார கம்மி அறுந்து விழுந்தால் விசாரணை செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
ஆலங்குடி அரசமரம் பஸ் ஸ்டாப் பகுதியில் கடந்த ஜூன் 30ஆம் தேதி முகமூடி அணிந்தவாறு திரிந்த 2 மர்ம நபர்கள், கையில் அரிவாளை வைத்தபடி அருகில் கடை வீதியில் வங்கியின் ஏடிஎம் கண்ணாடி உள்ளிட்டவற்றை தாக்கி உடைத்ததோடு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையில் சுற்றித்திரிந்தனர். விசாரணையில் ரகளையில் ஈடுபட்ட கல்லாலங்குடி பாவா புதுகை சேர்ந்த தயாநிதி ஆகிய இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். கல்வித்துறை உத்தரவுக்கு கீழ்படியாதது, பள்ளிக்கு சரியாக வராதது உள்ளிட்ட காரணங்களால் தலைமை ஆசிரியர் ஆண்டனி ராஜை தற்காலிக பணி நீக்கம் செய்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் செந்தில் உத்தரவிட்டுள்ளார்.
புதுக்கோட்டை கணேஷ்நகர் காவல் நிலையத்தில் சிறப்பு ஆய்வாளராகப் பணியாற்றி வரும் ஆறுமுகம் நேற்று விஷப்பொருள் அருந்தி தற்கொலைக்கு முயன்றதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், புதுகையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் காரையூர் அருகே உள்ள இரணிகால அய்யனார், பெரியகருப்பர், சின்னகருப்பர் கோயிலில் கிடாவெட்டு பூஜை நடத்துவதில் இருதரப்பினரிடையே பல ஆண்டுகளாக பிரச்னை நிலவி வந்தது. இந்நிலையில், இலுப்பூர் ஆர்டிஓ பேச்சுவார்த்தைக்கு பின்னர், ஒரு தரப்பினர் நேற்று கிடாவெட்டு பூஜை நடத்தினர். அப்போது மற்றொரு தரப்பினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் 50 பேர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்பட்டது.
Sorry, no posts matched your criteria.