India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (18.10.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100-ஐ அழைக்கலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரங்களில் ஏதேனும் அசாதாரண சம்பவங்கள் நடைபெற்றால் இந்த எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம். மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது.
பொது விநியோகத் திட்டத்தின் காணப்படும் குறைபாடுகளை களைவதற்கு புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து வருவாய் வட்டங்களிலும் ரேஷன் கடைகள் தொடர்பான குறைகள் தீர்க்கும் முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் ஒரு மணி வரை அந்தந்த தாசில்தார் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. இதில், பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெற கலெக்டர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
புதுக்கோட்டை சிப்காட், முக்கணாமலைப்பட்டி, கீரனூர், அன்னவாாசல் ஆகிய துணை மின் நிலையத்தில் நாளை (அக்.19) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால், சிப்காட் நகர், பாலன் நகர், தைலா நகர், சிட்கோ, காயாம்பட்டி, அன்னவாசல், கீீரனூர், முக்கணாமலைப்பட்டி, வீரப்பட்டி உள்ளிட்ட பிற பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகைக்கு புதுக்கோட்டை வழியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்படுமா என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர். எனவே இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு புதுக்கோட்டை வழியாக சென்னை தென் மாவட்டங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்க பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். இதுபோல் மக்கள் பிரதிநிதிகளும் ரயில்வே நிர்வாகத்திலும் வலியுறுத்தி வேண்டுகோள் விடுத்துள்ளன.
கறம்பக்குடி, ரெகுநாதபுரம், நெடுவாசல் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை (அக்.18) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. இதனால், கறம்பக்குடி நகர், தீத்தான்விடுதி, கறம்பவிடுதி, பிலாவிடுதி, திருமணஞ்சேரி, காடம்பட்டி, பட்டத்திக்காடு, திருவோணம் நெய்வேலி உள்ளிட்ட பிற பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளர் குமரவேல் தெரிவித்துள்ளார்.
புதுகை சமஸ்தானத்தில் திவானாக சேஷய்யா சாஸ்திரி 1878-1894 வரை பணியாற்றினார் அப்பொழுது அரசு அலுவலர் ஒருவர் அவர் செய்த குற்றத்திற்காக வேலை நீக்கம் செய்யப்பட்டார் ஆனால் அவர் பல வழிகளில் முயன்றும் மீண்டும் வேலை கிடைக்கவில்லை, பின்னர் தனது குடும்பத்தை பற்றி விரிவாக விண்ணப்பித்தார் இதனை படித்த சேஷையா சாஸ்திரி அந்த விண்ணப்பத்தில்”வருத்தக் கொள் முளைக்குமோ”(மா) என்று எழுதி ஆணை பிறப்பித்தார்.
காரையூரை சேர்ந்த 15 வயது சிறுமியின் பெற்றோர் கூலி வேலை பார்த்து வந்துள்ளனர். இந்தநிலையில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக 15 வயது சிறுமியை அதே பகுதியை சேர்ந்த 29 வயது இளைஞருக்கு திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அந்த சிறுமி 5 மாதா கர்ப்பிணியாக உள்ளார். இதுகுறித்து அந்த சிறுமி இலுப்பூர் மகளீர் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் 5 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
புதுக்கோட்டையில் பீன்ஸ் விலை மழையின் காரணமாக மற்றும் வரத்து குறைவு காரணமாகவும் கிடுகிடுவென உயர்ந்து காணப்படுகிறது. புதுக்கோட்டை உழவர் சந்தையில் கடந்த மாதம் பீன்ஸ் விலை கிலோ ரூ.80 க்கு விற்ற நிலையில் தற்போது விலை உயர்ந்து 1 கிலோ ரூ.180 க்கு விற்பனையாகிறது. தற்போது மழைக்காலம் மற்றும் பீன்ஸ் வரத்து குறைவு என்பதால் பீன்ஸ் விலை இன்னும் அதிகரிக்கலாம் என கூறப்படுகிறது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால், புதுகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் தங்கள் வீட்டு கால்நடைகளை மின்சார கம்பிகளில் கட்டக்கூடாது என்றும், ஏதேனும் மின் கம்பிகள் அறுந்து கிடந்தால் உடனடியாக அருகில் உள்ள மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர். மழை நேரங்களில் மரத்திற்கு கீழ் நிற்கவோ, செல்போனில் பேசவோ கூடாது என்றும் தெரிவித்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினம், கோட்டைப்பட்டினம், மணமேல்குடி உள்ளிட்ட பகுதியில் உள்ள மீனவர்கள் வடகிழக்கு பருவமழை காரணமாக, கடலில் அதிக காற்று வீசுவதால் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறை அறிவித்துள்ளது. மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லாமல் படகுகளை கடற்கரையில் நிறுத்தி வைத்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.