India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
அறந்தாங்கி கோட்டம், மணமேல்குடி வட்டத்தில் எதிர்வரும் 18.09.2024 புதன்கிழமை அன்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் “உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் கள ஆய்வு மேற்கொள்ளப்பட உள்ளது. பொதுமக்கள் தங்கள் கோரிக்கை தொடர்பாக மனுக்களை 18.09.2024 பிற்பகல் 2.30 மணிக்கு மணமேல்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஆட்சித் தலைவரிடம் வழங்கலாம்
தமிழ்நாடு முதலமைச்சர் வழிகாட்டுதலின்படி நடைபெற்று முடிந்த சென்னை ஃபார்முலா 4 ரேசிங் சர்க்யூட் நைட் ரேஸை வெற்றிகரமாக நடத்துவதற்கு அயராது உழைத்த அனைவரையும் கௌரவிக்கும் வகையில், சென்னை கலைவாணர் அரங்கில் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் புதுக்கோட்டை சேர்ந்த அமைச்சர் மெய்யநாதன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
தேமுதிக துணை பொதுச்செயலாளரும், உயர்மட்ட குழு உறுப்பினருமான L.K.சுதீஷ் புதுக்கோட்டையில் நாளை சுற்றுப்பயணம் செய்யும் விவரம் வெளியீடு. அதன்படி
காலை 10.00 மணிக்கு களமாவூர் சுங்கச்சாவடியில் வரவேற்பு, காலை 10.30 மணிக்கு கட்டியாவயல் புறவழிச்சாலையில் 60 அடி உயர கொடிக்கம்பத்தில் கழக கொடி ஏற்றிவைத்தல், மாலையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்கிறார்.
புதுக்கோட்டை மாநகரில் எம்எல்ஏ முத்துராஜா மூன்று வார்டுகளில் நேற்று ஆய்வு செய்தார். அவர் வீடு வீடாக சென்று மக்களிடம் குறைகளை கண்டறிந்தார். இந்த காட்சியை பார்க்கிற பொழுது முதல் படத்தில் அர்ஜுன் எப்படி செயல்படுகின்றார். அதேபோல் இவரும் செயல்படுகிறார் என மகிழ்ச்சியும் தெரிவித்தனர். மேலும் முத்துராஜா முதலமைச்சர் ஸ்டாலினை போல் துள்ளியது அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
அறந்தாங்கி அடுத்த மருதங்குடி கிராமத்தில் அண்ணன், தம்பி இடையே ஏற்பட்ட தகராறில் தம்பி படுகொலை. இந்நிலையில் தம்பி வீரசேகர் என்பவரை குடும்ப பிரச்சினை காரணமாக அண்ணன் ரமேஷ் என்பவர் மருதங்குடி பிள்ளையார் கோவில் அருகில் அடித்தது கொலை செய்துள்ளார். இதுவரை யாரும் புகார் கொடுக்கவில்லை. அண்ணன் ரமேஷ் உடன் அவரது பங்காளிகள் சேர்ந்து அடித்து கொன்றதாக கூறப்படுகிறது.
புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் முத்துராஜா புதுக்கோட்டை மாநகராட்சிக்குட்பட்ட வார்டு 10க்கு உட்பட்ட பகுதிகளில் “வாக்கிங்_வித்_MLA” என்ற நிகழ்வில் வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கேட்டறிந்தார். இந்த நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பால்ராஜ் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
தமிழ்நாடு முதல்வரின் அறிவுறுத்தலின் பேரில்,இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சரின் வழிகாட்டுதலோடு பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெறுவதற்கு வாக்கிங் வித் எம்எல்ஏ என்ற நிகழ்வின் மூலம் இன்று (செப்12) மாலை 5 முதல் 7 மணி வரை புதுகை மாநகாரட்சி 10வது வார்டு முழுவதும் பொதுமக்களின் இல்லங்களுக்கு நடந்தே சென்று புதுகை எம்எல்ஏ டாகடர்.வை.முத்துராஜா பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார்.
விராலிமலை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் செம்மன் கடத்துவதாக விராலிமலை போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது செம்மன் கடத்திய லாரியை பறிமுதல் செய்த விராலிமலை போலீசார் பாரப்பட்டியை சேர்ந்த ஆரோக்கியசாமி (வயது+49) என்பவரை கைது செய்தனர்.
திருக்கோகர்ணம் அய்யனார் திடலில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகளின் பராமரிப்பு தொடர்பான முகாமை தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சற்றுமுன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அருணா மற்றும் துறை தொடர்புடைய அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு பயன்படும் டிராக்டர்களை எவ்வாறு பராமரிப்பது, ஜேசிபி இயந்திரங்கள் பராமரிப்பது போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது.
திருமலைராயன் சமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட சூளைமேடு பகுதியில் உள்ள சேத்தி குளத்தில் வாலிபர் சடலம் கிடப்பதாக கணேஷ் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. பின்னர் அங்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு, கொலையா? தற்கொலையா? என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் போலீசார் இந்த நபர் எந்த கிராமத்தை சேர்ந்தவர் என பொது மக்களிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Sorry, no posts matched your criteria.