India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
1904ஆண்டில் தமிழ்நாட்டில் முதன் முதலில் நீராவி பேருந்து இயங்கியது. திருச்சியில் இருந்து புதுகைக்கு ஓட்டிய முதல் பேருந்து பிரான்ஸ் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. திருச்சியில் இருந்து புதுக்கோட்டை செல்லும் பாதையில் இந்த பேருந்து உபயோகத்திற்கான ஆங்காங்கே பெரிய தொட்டிகளில் தண்ணீர் வைக்கப்பட்டிருக்கும். இந்த பேருந்தை வாங்கியது புதுகை மன்னர் தான். ஷேர் செய்யவும்
புதுக்கோட்டை மங்களாபுரம் பிரீத்தி, கரம்பக்குடி வெட்டன் விடுதி நந்தினி, நடுப்பட்டி தீபா, காட்டு மருதம்பட்டி ரேணுகா, அன்னவாசல் சுமித்ரா ஆகிய 5பேரும் வீட்டில் இருந்து கடைக்கு வெளியே செல்வதாக கூறியவர்கள் வீடு திரும்பவில்லை. இது குறித்து அந்தந்த பகுதி காவல் நிலையத்தில் அவர்களது பெற்றோர்கள் அளித்த புகார் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதையடுத்து பெற்றோர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
ஜெகதாபட்டினம் மீனவர்கள் 14 பேர் 3 விசைப்படகுகளில் எல்லை தாண்டி வந்தாக கூறி கடந்த 8 ஆம் தேதி இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு14 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர். இதையடுத்து மீனவர்கள் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தபட்டனர். வழக்கை விசாரித்த நீதிபதி நளினி சுபாஷ்கரன், அக்டோபர் இரண்டு வரை சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து மீனவர்கள் 14 பேரும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.
விராலிமலை முருகன் கோவில் அடிவாரத்தில் 20க்கும் மேற்பட்ட சிலைகள் இரண்டாவது முறையாக உடைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து ஆலயத்தில் சிசிடிவி கேமரா வைக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இந்த சிலை உடைப்பு விராலிமலை மட்டுமல்லாது முருக பக்தர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிவன்,முருகன்,பெருமாள்,விநாயகர் சிலைகள் உடைக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் தற்போது செயல்பாட்டில் உள்ளது. ஒரு பயனாளிக்கு 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000, கறவை மாடு ஒன்றுக்கு ரூ.60,000 வழங்கப்படும். திரும்ப செலுத்தும் காலம் 3 ஆண்டுகள், வட்டி விகிதம் 7 சதவீதம், மேலும் பயனாளியின் பங்கு 5 சதவீதம். இதனை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு அறிவிக்கப்படுகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (10.09.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை டவுண் வள்ளிகன்னு, திருக்கோணம் சண்முகம், கணேஷ் நகர் ரவி, வெள்ளனூர் சண்முகம், ஆதனக்கோட்டை பிரபு ஆகிய காவலர்கள் ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் தொடர்பு தொடர்புக்கு 100 அல்லது 9498100730 என்ற புதுக்கோட்டை மாவட்ட காவல்துறை எண்ணை அணுகவும்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 4 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்த காரணத்தினால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். மீனவர்கள் நான்கு பேருக்கு அக்டோபர் இரண்டாம் தேதி வரை சிறை தண்டனை விதித்து இன்று இலங்கை நீதிமன்றம் உத்தரவுவிட்டுள்ளது. இதனால் சமூக அமைப்புகள் கண்டனத்தை தெரிவித்துள்ளனர். மீனவர்கள் மத்தியில் கலக்கம் ஏற்பட்டு வருகிறது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அருணா அறிக்கையின் கூறியிருப்பதாவது: பொருளாதாரத்தில் பின் தங்கிய பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பை சார்ந்த சலவை தொழிலில் ஈடுபட்டு வரும் 1200 நபர்களுக்கு திரவ பெட்ரோலிய வாயு மூலம் இயங்கும் தேய்ப்பு பெட்டிகள் வழங்கப்பட உள்ளன. தேவை உள்ளவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு ஆட்சியர் அறிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், குப்பையன்பட்டியைச் சேர்ந்த புதுக்கோட்டை ஒன்றியக் திமுக கழக முன்னாள் செயலாளர், முன்னாள் ஒன்றியதலைவர் வைகோ. இராஜனை தமிழக சுற்று சூழல் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன் இன்று அவரது இல்லத்தில் நேரில் சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். இந்நிகழ்வில் திமுக நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
அறந்தாங்கி ராஜேந்திரபுரம் பஜாரில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பதாக வந்த தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அறந்தாங்கி காவல்துறையினர் எலக்காக்கோட்டையை சேர்ந்த ரவி சட்டவிரோத லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் ரூ.1740 ரொக்கம், ஆன்லைன் லாட்டரி சீட்டுகள் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sorry, no posts matched your criteria.