India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மணமேல்குடி ஊராட்சி ஒன்றியம், தண்டலை ஊராட்சி, அய்யனார்கோவில், காட்டுகொல்லை குடியிருப்பு பகுதியில், வடகிழக்கு பருவமழை முன்னிட்டு பெய்த கனமழையின் காரணமாக தேங்கியுள்ள மழைநீரினை, மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று (19.11.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் திருநாளூர் வடக்கு அரசு உயர்நிலைப் பள்ளியில் நபார்டு திட்டத்தின் கீழ் ரூபாய் 206.80 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக 7 வகுப்பறையுடன் கூடிய கட்டிடங்கள் கட்டுவதற்கான இடத்தை தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆலங்குடி சட்டமன்ற தொகுதி, கீரமங்கலம் பேரூராட்சி மேலக்காடு முஸ்லிம் ஜமாத்தார்களின் கோரிக்கையை ஏற்று பெண்கள் தனியாக தொழுகை நடத்துவதற்கு ஏதுவாக செட் அமைப்பதற்கான இடத்தை, தமிழக அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ஊராட்சி ஒன்றியக்குழு மகேஸ்வரி சண்முகநாதன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
கிண்டியில் மருத்துவர் தாக்கப்பட்ட நிகழ்வை தொடர்ந்து மருத்துவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என நடத்திய போராட்டத்தின் எதிரொலியால், புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மெட்டல் டிடெக்டர் கருவின் மூலம் காவலர்கள், நோயாளிகளையும், பொதுமக்களையும் சோதனை செய்த பின்னர் அனுமதித்து வருகின்றனர். இது மருத்துவர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வரும் 22ஆம்தேதி விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நடைபெறுகிறது. அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ளும் இந்தக் கூட்டத்தில் விவசாயிகள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் கலந்துகொண்டு தங்கள் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுகை மாவட்டத்தில் உள்ள 760 வருவாய்க் கிராமங்களிலும் மின்னணு முறையில் பயிர் சாகுபடி கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருவதாக கலெக்டர் மு.அருணா தெரிவித்தார். நேற்று திருமயம் வட்டம் மணவாளன்கரை கிராமத்தில் நடைபெறும் கணக்கெடுப்பு பணியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் வேளாண்மை இணை இயக்குநர் (பொ) ரவிச்சந்திரன், துணை இயக்குநர் (தோட்டக்கலை) கு.அழகுமலை உள்ளிட்ட அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தின் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள 1,561 வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் நீக்கல் சிறப்பு முகாம் 2 நாட்காளக நடைபெற்றது. இதில் புதிய வாக்காளர்கள் ஆர்வமுடன் விண்ணப்பித்தனர். இரண்டு நாட்களில் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 12,889 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கறம்பக்குடி அருகேயுள்ள தட்டாவூரணியைச் சேர்ந்தவர் வீ.தர்மராஜ்(55). கொத்தனாரான இவர் நேற்று மாலை வீட்டில் ஏற்பட்ட மின்பழுதை சரிசெய்தபோது மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். விவசாய வேலைக்கு சென்று வீடு திரும்பிய அவரது மனைவி பானுமதி அவர் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், தகவலறிந்து வந்த கறம்பக்குடி போலீசார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் இரவு 7 மணி வரை சில 4 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு 7 மணி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் செயல்படுத்தப்படும் கடன் திட்டங்களான தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கு சிறுதொழில் கடன், கைவினை கலைஞருக்கான கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதில் சிறுபான்மையினர் கடன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.