India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் கொடி நாள் விழா நேற்று நடைபெற்றது. இதில் கலெக்டர் அருணா நிதி வழங்கி கொடிநாள் நிதி வசூலை தொடங்கி வைத்தார். இதில் ஒரு கோடியே 82 லட்சத்து 95 ஆயிரத்து 133 ரூபாய் நிதி வசூல் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் மாவட்ட துணைத்தலைவர் கர்னல் (ஓய்வு) அருட்செல்வம், உதவி இயக்குனர் கேப்டன் விஜயகுமார் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
பொதுப்பெயர் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில் மக்களுக்கு கிடைக்க செய்யும் வகையில், முதல் கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகம் தொடங்கப்படும் என முதல்வர் அறிவித்திருந்தார். அதன்படி புதுக்கோட்டையில் முதல்வர் மருந்தகம் அமைக்க விருப்பமுள்ளவர்கள் பி.பார்ம், டி.பார்ம் சான்று பெற்றவர்கள் இணையதள முகவரியில் வரும் 10ஆம் தேதி வரை விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் அலுவலக சமூக நலன் மற்றும் உரிமை துறை சார்பில் தமிழ்ப்புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் குறித்து மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் அருணா தலைமை தாங்கினார். இதில் தமிழ் புதல்வன் முதன்மைப் பெண் திட்டத்தில் புதுக்கோட்டையில் 17,392 மாணவ, மாணவிகள் பயனடைந்துள்ளதாக மாவட்ட கலெக்டர் அருணா தெரிவித்துள்ளார்.
புதுகையில் நேற்று திருநங்கைகளுக்கான மாதாந்திர சிறப்பு குறை தீர்ப்புக் கூட்டம் கலெக்டர் மு.அருணா தலைமையில் நடைபெற்றது. இதில் வீட்டுமனைப்பட்டா, சிறு தொழில் கடன் உள்ளிட்டவை குறித்து இதில் பங்கேற்ற 60 திருநங்கைகள் கோரிக்கை மனுக்களை அளித்தனர். அதிகாரிகளிடம் கலந்து பேசி மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் உறுதியளித்தார். இதில் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் அம்பேத்கர் நூல் வெளியிட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த விழாவில் புதுக்கோட்டை வேங்கைவயல் விவகாரத்தை அச்சப்படாமல் வெளியே கொண்டு வந்த பெண்கள் உட்பட 4 பேருக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பொன்னாடை போற்றி, அம்பேத்கர் நூலை வழங்கி கௌரவித்தார். இதுகுறித்து கருத்துக்களை கமெண்ட் செய்யவும்
இலுப்பூர் அருகே கோத்திராப்பட்டியை சேர்ந்தவர் கோபால் (22). இவர் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர், சிறுமியை கட்டாயப்படுத்தி உடலுறவு கொண்டதில் சிறுமி கர்ப்பமாகியுள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட சிறுமி இலுப்பூர் மகளீர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் கோபால் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (05.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட / மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் (அ) 100 ஐ டயல்அப் செய்யலாம். புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுகை சோலார் தெருவிளக்கு அமைப்பதில் முறைகேட்டில் ஈடுபட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒப்பந்தக்காரர்கள் உள்ளிட்ட 13 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அறந்தாங்கி அரிமளம் கரம்பக்குடி திருமயம் திருவரங்குளம் மணமேல்குடி குன்றாண்டார் கோவில் கந்தர்வகோட்டை பகுதிகளில் வேலை பார்க்கும் BDO கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் மற்ற துறை அரசு அலுவலகங்கள் பீதியில் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே புதுக்கோட்டை மாவட்ட அனைத்து காவல் அதிகாரிகளுடன் சட்டம் ஒழுங்கு பணி தொடர்பான மாதாந்திர குற்ற ஆய்வுக் கூட்டம் நடத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். குற்ற வழக்குகளில் சிறப்பாக பணிபுரிந்த காவல் அதிகாரிகள் மற்றும் ஆளினர்கள் மொத்தம் 38 நபர்களை (04.12.2024) இன்று நேரடியாக வரவழைத்து பாராட்டினார்.
புதுக்கோட்டையில் மின்சார வாரிய இயக்குதலும், காத்தலும் செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை காலை 10:30 மணி அளவில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை, இலுப்பூர், கந்தர்வகோட்டை பகுதிகளுக்கான மின் நுகர்வோர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து மின்வாரிய சம்பந்தமான குறைகளை தெரிவிக்கலாம் என மின்சார வாரிய அலுவலகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.