India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
உயர் நீதிமன்ற தீர்ப்பின் படி மனித கழிவுகளை மனிதன் அகற்றுவது குற்றமாகும். மாவட்டத்தில் ஊராட்சி பகுதிகளில் இது போன்ற சம்பவங்கள் ஏதேனும் நடைபெற்றால் அது குற்றம் எனவும் இது சம்பந்தமாக துறை சார்ந்த வட்டார வளர்ச்சி அலுவலரிடம் எழுத்துப்பூர்வமாக புகாரை பொதுமக்கள் வழங்கலாம் என ஆட்சியர் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
ஆவுடையார் கோவில் ஆண்டி குளம் அருகே நேற்று (டிச.27) மதியம் 2 மணிக்கு ஆவுடையார் கோவில் போலீசார் ரோந்து பணி மேற்கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கூரிய வகையில் நின்றுகொண்டிருந்த 17 வயது சிறுவனை பிடித்து சோதனை செய்ததில் கஞ்சா விற்றது தெரியவந்தது. இதையடுத்து சிறுவனை கைது செய்த போலீசார் 2.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (27.12.2024) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் மேலே உள்ள புகைப்படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இரவு நேரத்தில் ஏதேனும் அசம்பாவிதம் நடைபெற்றால் இந்த எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள சிறு, குறு விவசாயிகளுக்கு பழைய திறனற்ற மின் மோட்டார்களுக்குப் பதிலாக மானியத்துடன் கூடிய புதிய மின் மோட்டார்கள் நுண்ணீர் பாசன இணைப்புடன் வழங்கப்பட உள்ளது. வேளாண்மை துறையின் மூலம் 90 பேருக்கு தலா ரூ.15 ஆயிரம் வீதம் ரூ.13.50 இலட்சத்திற்கு மானியம் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
புதுகை அரிமளம் சாலையில் பிரிட்டிஷ் காலத்து கல்வெட்டினை தமிழ் துறை மற்றும் தொல்லியல் வரலாற்று பேராசிரியர் காளிதாஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர் இதில் “ஒற்றை புலி குடியிருப்பு 2 பர்லாங்” என்று எழுதப்பட்டுள்ளது 1680 முதல் 1948 ஆண்டுக்குள் கல்வெட்டு அமைக்கப்பட்டுள்ளதாகவும் பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவை ஆண்டாலும் தமிழில் எழுத்துக்கள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
புதுகை பொன்நகரை சேர்ந்த ஆசிரியை அமல் லாரோ மியா, கிறிஸ்மஸ்துக்காக நேற்று முன்தினம் கீரனூரில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தார். நேற்று இரவு வீட்டுக்கு வந்த போது வீட்டின் கதவு உடைந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்க்கையில் 20 சவரன் நகையும் ₹50,000 பணமும் மர்ம நபர்கள் கொள்ளையடித்து தெரிய வந்தது. அவர் கொடுத்த புகாரின் பேரில் கணேஷ் நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.
புதுக்கோட்டை திமுக மாநகர செயலாளர் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதியின் கணவர் செந்தில் காலமானார். இந்நிலையில், தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி. செழியன் இன்று அவரது இல்லத்திற்கு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
மணமேல்குடி ஊராட்சியில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் நாளை (டிச.27) காலை 9 மணியில் இருந்து கோலேந்திரன், சாத்தியடி, கோட்டைப்பட்டினம், வெட்டிவயல் ஆகிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்கள் மற்றும் புதிய ஆழ்குழாய் கிணறு துவக்க விழா நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியானது மணமேல்குடி ஒன்றிய பெருந்தலைவர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற உள்ளது என ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அறிவுறுத்தினார்.
கறம்பக்குடி அருகே ஆத்தங்கரைவிடுதி தெற்குப்பட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் என்பவர் கொட்டகை போடுவதற்காக வீட்டின் முன்பு பள்ளம் தோண்டியுள்ளார். இதில் மழைநீர் தேங்கி இருந்துள்ளது. இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கணேசன் மகன் அஸ்வின் (12), பழனிவேல் மகன் புவனேஸ்வரன் (9) இருவரும் விளையாடிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் தவறிவிழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தனர். இதுகுறித்து மழையூர் போலீசார் விசாரித்தனர்.
வேங்கைவயல் குடிநீர் தொட்டியில் அசுத்தம் கலந்த விவகாரத்தில் 2 ஆண்டுகள் ஆகியும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. இந்த வழக்கு தொடர்பாக புலன் விசாரணை நடந்து வருவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், வேங்கைவயல் வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவது எப்போது? வழக்கு எப்போது முடிவுக்கு வரும் என்பதே கேள்விக்குறியாக உள்ளதாக பல்வேறு தரப்பினர் கருத்து தெரிவித்துெள்ளனர்.
Sorry, no posts matched your criteria.