Pudukkottai

News October 26, 2024

குழந்தையின் வயிற்றுக்குள் சிக்கிய கிளிப் 

image

பதுகை மாவட்டம் மதகுபட்டியை சேர்ந்த ஆனந்தியின்  2 வயது குழந்தை வைரன். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு தலையில் அணியும் கிளிப்பை விழுங்கியது. இதனால் மூச்சுவிட திணறிய குழந்தையை சிகிச்சைக்காக மதுரையில் உள்ள பிரபல மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் கைவிரித்த நிலையில்,  பொன்னமராவதி துர்கா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வயிற்றில் இருந்த கிளிப் அகற்றப்பட்டது. 

News October 26, 2024

புதுகை ஆட்டுச்சந்தையில் ரூ.2 கோடிக்கு விற்பனை

image

புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட சந்தைப்பேட்டையில் நடைபெறும் ஆட்டுச்சந்தையில் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் வியாபாரிகள் வந்து கலந்து கொள்வது வழக்கம். இந்நிலையில் நேற்று நடைபெற்ற ஆட்டுச்சந்தையில் ரூ 2 கோடிக்கு விற்பனை நடைபெற்றதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தீபாவளி பண்டிகையையொட்டி வருகின்ற புதன்கிழமை (அக்.30) ஆட்டுச்சந்தை நடைபெறும் என மாநகராட்சி அறிவித்துள்ளது.

News October 26, 2024

இந்தியில் கடிதம், அப்துல்லா எம்.பி. எதிர்ப்பு

image

புதுக்கோட்டையை சேர்ந்த எம்.பி. அப்துல்லா தனது எக்ஸ் தளத்தில், ரயில்வே இணை அமைச்சரின் அலுவலகத்தில் இருந்து எப்போதும் இந்தியில் தான் கடிதம் வருகிறது. அவரது அலுவலக அதிகாரிகளை அழைத்து எனக்கு இந்தி தெரியாததால் ஆங்கிலத்தில் கடிதத்தை அனுப்புங்கள் என்று கூறியும், மீண்டும் மீண்டும் இந்தியில் கடிதம் வருகிறது. அதனால், அவர்களுக்கு புரியும்படி தமிழில் கடிதம் எழுதியுள்ளேன்” என தெரிவித்துள்ளார். 

News October 26, 2024

புதுகை அருகே 3 பேர் கைது

image

கறம்பக்குடி அருகே இலைகடி விடுதி வடக்கு பட்டி பகுதியை சேர்ந்த தனபால் (32),  பிரேம்குமார் (22) அதே பகுதியை சேர்ந்த கனகராஜ் (22) ஆகிய மூவரும் போலீசார் கிடுக்குப்பிடி விசாரணையில் இலைகடிவிடுதி, மயிலாடி தெரு,கரும்புளிகாடு பகுதிகளில் ஆடு திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து10 ஆடுகளை பறிமுதல் செய்தனர்.

News October 24, 2024

புதுகை: முன்னாள் அமைச்சர் வழக்கு ஒத்திவைப்பு

image

தமிழக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்பு துறையினால் வழக்கு பதிவு செய்யப்பட்டு புதுகை நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இவ்வழக்கு நவம்பர் 22 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து புதுகை முதன்மை நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

News October 24, 2024

சட்டசபை பொது கணக்கு குழு நாளை வருகை

image

தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில் அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, காந்திராஜன், பொது நிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார், அக்கினி, கிருஷ்ணமூர்த்தி, அப்துல் சமது, ராமச்சந்திரன், எழிலரசன், ஐயப்பன், சந்திரன், சரஸ்வதி, சிவக்குமார், செந்தில் குமார் உள்ளிட்டோர் நாளை புதுகையில் நடந்து வரும் வளர்ச்சி திட்டங்களை ஆய்வு செய்ய உள்ளனர் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

News October 23, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் அக்டோபர் 2024 ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் 29.10.2024ஆம் தேதி அன்று காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளுக்கு பதில் அளிக்க உள்ளார்கள். ஷேர் செய்யவும்

News October 23, 2024

அரசுத் திட்டம் தெய்வத்தின் பெயரிலேயே செய்யப்படும் வினோதம்

image

திருக்கோகர்ணம் ஸ்ரீ பிரகதாம்பாள் மன்னர்களின் குலதெய்வமாக விளங்கியது. மன்னர் ராமச்சந்திர தொண்டமான் காலத்தில் 1839-1886 எல்லா அரசு காரியங்களும் ஸ்ரீ பிரகதாம்பாள் பேரிலேயே செய்யப்பட்டன. ஆரம்ப காலத்தில் ஆட்சி செய்த தொண்டமான் மன்னர்கள் ஸ்ரீ ரங்கநாதரின் பெயரிலேயே ஒப்பந்தங்களையும் மூச்சலிக்கைளையும் நிறைவேற்றி கையொப்பமிட்டனர். ஸ்ரீரங்கநாதர் என்பது திருமயத்தில் உள்ள அனந்தசயன மூர்த்தியாகும். “காலச்சுவடு”

News October 23, 2024

புதுக்கோட்டையில் வேலைவாய்ப்பு முகாம்

image

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதாரம் இயக்கம் சார்பில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 26ஆம் தேதி பிரகாதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற உள்ளது. இந்த  முகாமில் 8ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படித்த 18 வயது முதல் 40 வயது உள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். SHAREIT

News October 23, 2024

புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் ரயில் ரத்து

image

வங்கக் கடலில் உருவாகும் தானா புயல் ஒடிசா மேற்குவங்க மாநிலம் நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இதையடுத்து ஒடிசாவிற்கு இயக்கப்படும் சில எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக இயக்கப்படும் நெல்லை- ஷாலிமார் சிறப்பு ரயில், புவனேஸ்வரில் இருந்து வரும் ராமேஸ்வரம் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்

error: Content is protected !!