India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
கந்தர்வகோட்டை அருகே கருப்புடையான்பட்டியைச் சேர்ந்தவர் குஞ்சான் மகன் தங்கராஜ்(53). இப்பகுதியில் ஆடு மேய்த்து வந்த இவர் நேற்று பிசானத்தூர் பேருந்து நிறுத்தம் அருகேயுள்ள கொட்டகையில் ஆடுகளை அடைத்தார். பிறகு சாலையை கடக்க முயன்ற போது பைக் மோதியதில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தங்கராஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து கந்தர்வகோட்டை போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுக்கோட்டையில் வருகின்ற நவ.8ஆம் தேதி காலை 9 மணி அளவில் புதுக்கோட்டையைச் சேர்ந்த திமுக எம்.பி. அப்துல்லா ஏற்பாட்டில் பல்வேறு நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் ஸ்ரீ பாரதி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது. கிராமப்புறத்தைச் சேர்ந்த அனைத்து மாணவ, மாணவிகள் இதில் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என எம்.பி. அறிவித்துள்ளார்.
அன்னவாசல் அருகே உள்ள கண்டைக்கோன்பட்டியை சேர்ந்தவர் முத்துக்கண்ணு (65) இவர் அன்னவாசல் அருகே உள்ள தாண்றீஸ்வரத்தில் நடந்த கோவில் விழாவில் சாமி கும்பிட்டு விட்டு அங்கு கோவில் திடலில் நடந்த அன்னதானத்தை வாங்குவதற்கு வரிசையில் நின்ற போது அங்கு வந்த மர்ம நபர்கள் முத்துக்கண்ணு கழுத்தில் இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை திருடியுள்ளனர் இதுகுறித்து முத்துக்கண்ணு அன்னவாசல் போலீசில் புகார் அளித்துள்ளார்
புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் உள்ள குழந்தைகள் இல்லங்கள், முதியோர் இல்லங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான இல்லங்கள், குழந்தைகளுக்கான விடுதிகள் ஆகியவை செயல்பட்டு வருகின்றது. இதில் பதிவு செய்யப்படாமல் இயங்கும் அனைத்து இல்லங்கள் மற்றும் விடுதிகள் உடனடியாக ஒரு மாத காலத்திற்குள் விண்ணப்பிக்க வேண்டும் என விண்ணப்பிக்க தவறும் பட்சத்தில் அந்த இல்லங்களுக்கு சீல் வைக்கப்படும் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
விராலிமலை அடுத்த கொடும்பலூரை சேர்ந்த தம்பதி பழனிச்சாமி( 69), அழகம்மாள் (54 ). இருவரும் கொடும்பலூரில் வசித்து வந்தனர். இந்நிலையில் நேற்று விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டனர். இதுகுறித்து அவரது மகன் சிவசக்தி வேல் (33) அளித்த புகாரின் அடிப்படையில் தற்கொலைக்கான காரணம் குறித்து விராலிமலை போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
புதுக்கோட்டை திட்டமில்லா பகுதிகளில் 01.01.2011-க்கு முன்னர் கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவன கட்டடங்களுக்கு வரன்மறைப்படுத்தும் திட்டத்தின் கீழ் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க 31.01.2025 வரை கால நீட்டிப்பு செய்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் www.tcp.org.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்யலாம் என ஆட்சியர் அறிவித்துள்ளார். ஷேர் செய்யவும்
கீரமங்கலம் மேற்கு பேட்டை பகுதியை சேர்ந்தவர் கூலித்தொழிலாளி அப்துல் ஜபார் மனைவி பிச்சையம்மாள். இவர் தனது குடும்ப வருமானத்திற்காக கடந்த ஒரு வருடமாக 9 செம்மறி ஆட்டுக்குட்டிகளை வாங்கி வளர்த்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு ஆடுகளை வீட்டில் கட்டி வைத்துள்ளார். இன்று காலை வெறி நாய்களால் கடிபட்டு, தோல் கிழிந்து, குடல் வெளியே வந்தும் ஆடுகள் இறந்து கிடப்பதை அவர் பார்த்து கதறி அழுதார்.
புதுக்கோட்டையில் தேசிய அளவில் பதக்கங்கள் பெற்று சிறந்து விளங்கும் 2 ஆண் பெண் விளையாட்டு வீரர்கள், 2 சிறந்த உடல் கல்வி இயக்குனர், ஆசிரியர்களுக்கான முதலமைச்சர் மாநில விளையாட்டு விருது பரிசாக தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான தங்கப்பதக்கங்கள் ஆகியவை வழங்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட விளையாட்டு அலுவலர் அலுவலகத்தில் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஷேர் செய்யவும்
திருச்சி ரயில் நிலையம் அருகே ரயில்வே மேம்பால பணிகள் நடைபெறுவதால் ரயில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த வகையில் புதுக்கோட்டை வழியாக காரைக்குடி – திருச்சி இடையே இயக்கப்படும் டெமு பயணிகள் ரயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியிலிருந்து காலை 9:40 மணிக்கு திருச்சி புறப்படும் ரயில் (வண்டி எண்06888) நாளை (புதன்கிழமை) முதல் 21ஆம் தேதி வரை ரத்து செய்யப்படுகிறது.
புதுக்கோட்டையில் தொண்டைமான் மன்னர்களால் கிழக்கிந்திய கம்பெனியின் பார்வைக்காக 1813 இல் ஓர் புள்ளிவிவரக் கணக்கு பனை ஓலையில் தயாரிக்கப்பட்டது. இத்தொகுப்பு 1625 ஏடுகளை கொண்டது. இது தற்போது புதுக்கோட்டை அருங்காட்சியத்தில் உள்ளது. இதில் புதுக்கோட்டை சமஸ்தான எல்லைக்குள் கண்ட கிராம வாரியான புள்ளி விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. Way2News “காலச்சுவடு” தொடரும்..
Sorry, no posts matched your criteria.