Pudukkottai

News February 15, 2025

வீட்டில் கஞ்சா செடி வளர்த்தவர் கைது

image

திருமயம் அருகே உள்ள ஒரு வீட்டில் சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்ப்பதாக ஆலங்குடி மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அந்த வீட்டில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது கல்லூர் நடுத்தெருவைச் சேர்ந்த சண்முகம் (53) என்பவர் தனது வீட்டில் கஞ்சா செடி வளர்த்து வந்தது தெரிய வந்ததையடுத்து, அந்த கஞ்சா செடியை அழித்து, சண்முகத்தை கைது செய்து, புதுக்கோட்டை சிறையில் அடைத்துள்ளனர்.

News February 14, 2025

அஞ்சல் துறையில் வேலை… உடனே அப்ளை பண்ணுங்க

image

அஞ்சல் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த பணியிடங்களுக்குத் தேர்வு கிடையாது. 10ஆம் வகுப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலேயே பணி நியமனம் வழங்கப்படும். சென்னை மாவட்டத்தில் மட்டும் 33 <><காலியிடங்கள்><<>> நிரப்பப்பட உள்ளன. ரூ.10,000 – ரூ.30,000 வரை சம்பளம் வழங்கப்படும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ளவர்கள் மார்ச் 3ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். ஷேர் பண்ணுங்க

News February 14, 2025

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் தேதி அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 21-ந் தேதி காலை 10.30 மணியளவில் புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது. எனவே, புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் தொடர்புடைய கோரிக்கைகளை தெரிவித்து பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். இந்த தகவலை விவசாய நண்பர்களுக்கு பகிருங்கள்…

News February 13, 2025

கோல் இந்தியா நிறுவனத்தில் 434 காலிப்பணியிடங்கள்

image

மத்திய அரசின் கோல் இந்தியா நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 434 மேனேஜ்மெண்ட் டிரைய்னி பணியிடங்கள் உள்ளன. கணினி வழி தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். ரூ.50,000 – ரூ.1,60,000 வரை சம்பளம் வழங்கப்படும். 1 வருட பயிற்சிக்கு பின்னர் ரூ.60,000 – ரூ.1,80,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்படும். நாளைக்குள் (பிப்.14) <>லிங்கை<<>> க்ளிக் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

News February 13, 2025

கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க அறிவுறுத்தல்

image

புதுகை மாவட்டத்தில் அரசு உதவி பெறும் தொழில் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சீர் மரபினர் பிரிவை சேர்ந்த மாணவ, மாணவிகள் PM YASASVI திட்டத்தின் கீழ் தங்களது மேற்படிப்புக்காக கல்வி உதவித் தொகை பெறலாம். மேலும், கல்லூரியில் மூன்றாண்டு படித்தவர்கள், முதுகலை பாலிடெக்னிக் போன்றவற்றில் படிக்கும் மாணவ மாணவியர் இதற்கு விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News February 12, 2025

அரசு பள்ளி ஆசிரியர் போக்சோவில் கைது

image

திருப்பூர் நொய்யல் வீதி மாநகராட்சி உயர்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்பு கணித ஆசிரியராக பணிபுரியும் சுந்தர வடிவேலு (48) என்பவர் மாணவிகளிடம் அநாகரிகமாக நடந்து கொண்டதாக சைடு லைனில் கொடுக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் அவர் மீது திருப்பூர் கே.வி.ஆர் நகர் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. தலை மறைவான அவரை திருப்பூர் தனிபடை போலீசார் புதுகையில் நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

News February 12, 2025

கூலித்தொழிலாளியை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2வது நபர் கைது

image

புதுகை, செப்பிளாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்த சென்ட்ரிங் தொழிலாளி ராஜ்குமார் (29) என்பவரை, ஜோயல் (21), கார்த்திக் (24), சிவா (24) ஆகியோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தாக்கி, ஜோயல் ராஜ்குமாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் மாத்தூர் போலீசார் ஜோயலை கைது செய்து, தலைமறைவாக இருந்த கார்த்திக் மற்றும் சிவா ஆகிய இருவரையும் போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று கார்த்திக்கை கைது செய்தனர்.

News February 10, 2025

புதுக்கோட்டையைச் சேர்ந்தவர்கள் சென்ற வாகனம் விபத்து

image

புதுக்கோட்டை, திருப்புனவாசலை சேர்ந்த 11 பேர் சரக்கு மினி வேன் ஒன்றில் பழனிக்குச் சென்று விட்டு சொந்த ஊருக்கு திரும்பியுள்ளனர். அப்போது இவர்கள் சென்ற வாகனம் ராமநாதபுர மாவட்டம் திருவாடானை தாலுகா மங்கலக்குடி அருகே சென்றபோது சாலையோரம் இருந்த புளியமரத்தின் மீது மோதியதில் 11 பேர் காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் உதவியுடன் காயமடைந்தவர்கள் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

News February 10, 2025

புதுக்கோட்டையில் இன்று வேலைநிறுத்தம்

image

புதுக்கோட்டை மாவட்டம் டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் காலவரையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. கிரஷார் ஏற்றும் பொருட்களுக்கு டிரான்சிட் பாஸ் கட்டணம் இல்லாமல் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்தம் நடைபெறுவதால் அனைத்து டிப்பர் லாரி உரிமையாளர்கள் கலந்து கொண்டு இன்று வேலையை நிறுத்த ஈடுபட உள்ளனர். 

News February 9, 2025

புதுக்கோட்டை: குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்

image

தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் தினம் ஒவ்வொரு ஆண்டும் இரு சுற்றுக்களாக நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படுகிறது. அதன்படி வருகின்ற 17ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் தேசிய குடற்புழு நீக்க மாத்திரை வழங்கும் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த குடற்புழு நீக்க மாத்திரை உட்கொள்வதன் மூலம் ரத்த சோகை சரி செய்யப்பட்டு குழந்தையின் ஊட்டச்சத்து நிலையில் முன்னேற்றம் என மாவட்ட கலெக்டர் அருணா தெரிவிப்பார்.

error: Content is protected !!