India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுகை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை (11.09.25) புதுகை 29, 31 வார்டு காமராஜபுரம் சமுதாயக்கூடம், அறந்தாங்கி 20, 21, 27, வார்டு எல்.என்புரம் ராமகாந்தி திருமண மஹால், இலுப்பூர் வடுகர் தெரு ஏ ஆர் மஹால், கந்தர்வகோட்டை 7 ஊராட்சிக்கு தச்சங்குறிச்சி சமுதாய கூடம், பொன்னமராவதி 10 ஊராட்சிக்கு பழனி ஆண்டவர் திருமண மண்டபம், நடைபெற உள்ளது என கலெக்டர் அருணா தெருவித்துள்ளார்.

பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க ரேஷன் கார்டு, மொபைல் எண், ஆதார் அட்டை, வங்கிக் கணக்குப் பாஸ்புக், மற்றும் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் ஆகிய ஐந்து ஆவணங்கள் போதுமானது. இந்த <

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று இரவு 10-மணி முதல் நாளை காலை 6-மணி வரை
இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

பொன்னமராவதியில் நேற்று (செப்.8) நடைபெற்ற நலம் காக்கும் ஸ்டாலின் முகாமில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு ரத்த அழுத்த பரிசோதனை, ரத்த அணுக்களின் எண்ணிக்கை, சிறுநீரக செயல்பாடு (யூரியா கிரியாட்டினின்) பரிசோதனை செய்யப்பட்டது. இசிஜி 453, ஸ்கேன் 99, இருதய பரிசோதனை 1190, மேல் சிகிச்சை 142 பேரும் என 1480 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

உங்களுடன் ஸ்டாலின் முகாம் நாளை 10/9/2025 புதுகை வார்டு எண் 34 35 கலிப் நகர் பள்ளிவாசலிலும், அரிமளம் பகுதியில் விசாலாட்சி திருமணம் மண்டத்திலும், ஆவுடையார் கோவில் 8 ஊராட்சி ஒன்றியம் கரூர் யாதவ திருமண மண்டபத்திலும், மணமேல்குடி 9, ஊராட்சி பகுதிகளுக்கு கிராம சேவை கட்டிடத்திலும் நடைபெற உள்ளது. இதில் பொதுமக்கள் தங்களுக்கு தேவையானவற்றை மனுவாக அளித்து பயன்படலாம் என ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார்.

புதுகை மக்களே சமீப காலமாக மிஞ்சாரம் பாய்ந்து அசம்பாவிதங்கள் நடந்து வருகிறது. உங்கள் பகுதிகளில் மழைக்காலங்களில் மழை நீரில் மின் வயர் அறுந்து விழுதலோ, டிரான்ஸ்பார்மர் தீப்பற்றி எரிதலோ, எதிர்பாராத மின்தடை, விட்டில் ஏற்படும் மின்சார பிரச்சனைகளுக்கு தமிழ அரசின் மின் நுகர்வோர் சேவை மையம் மூலம் ‘9498794987’ என்ற எண்ணில் உங்கள் வீட்டில் இருந்தே புகார் கொடுக்கலாம். இதை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

புதுகை இளைஞர்களே பொதுத்துறை வங்கியான கனரா வங்கியில் காலியாகவுள்ள பல்வேறு பணியிடங்கள் நிரப்படவுள்ளது. டிகிரி முடித்தால் போதும் நீங்களும் வங்கி வேலைக்கு போகலாம். விருப்பமமுள்ளவர்கள் 06.10.2025 தேதிக்குள் இங்கே <

புதுகை மாவட்டத்தில் நவீன வேளாண் கருவி சாகுபடி தொழில்நுட்பங்கள் கண்டுபிடிக்கும் விவசாயிகளுக்கு மாநில அளவில் முதல் பரிசாக ரூ.2,50,000 வழங்கப்பட உள்ளது. இதில் பங்கேற்கும் விவசாயிகள் உழவர் செயலின் மூலம் தங்கள் பெயரை பதிவு செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தைத் தங்கள் பகுதி வேளாண் உதவி இயக்குநர் அலுவலகத்தில் வழங்கி பதிவுக் கட்டணம் ரூ.150 செலுத்த வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அரங்கில பசுமை குழு சார்பில்
மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதில், சாலை விரிவாக்கத்திற்கு பசுமைக் குழு அனுமதி பெறாமல் மரம் வெட்டினால் ஒரு மரத்திற்கு ரூ.5000 கட்ட வேண்டும் என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த கூட்டத்தில் பசுமை குழு தலைவர் கண்ணன் மற்றும் துறை அதிகாரிகள் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,8) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.