India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நில உரிமையாளர்கள் தங்களது நிலங்களை அளவிட செய்ய சம்பந்தப்பட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனர். இந்நிலையில், வட்ட அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் https://tamilnilam.tn.gov.in/citizen என்ற இணையவழியில் விண்ணப்பிக்க புதிய வசதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் துவங்கி வைத்தார். இந்நிலையில் மாவட்டத்தில் நிலங்களை அளவிட இசேவை மையங்களில் விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அருணா அறிவித்துள்ளார்.
கடந்த சில தினங்களாக வறண்ட வானிலை நிலவியது. அதைத் தொடர்ந்து தமிழகத்தில் வரும் 11ஆம் தேதி புதுக்கோட்டை, திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சை, நாகை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள பொதுமக்கள், விவசாயிகளுக்கு அறிவுறுத்தபட்டுள்ளது.
தமிழக மருத்துவ தேர்வாணையம் பார்மசிஸ்ட் பிரிவில் உள்ள 425 காலியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடைபெறும். ஊதியம் ரூ.35,000 – ரூ.1,30,400ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. எனவே டி.பார்ம், பி.பார்ம், பார்ம்.டி படிப்பை முடித்தோர் <
புதுக்கோட்டை மாவட்டம் உடையாளிப்பட்டி காவல் நிலையத்திற்குட்பட்ட கிள்ளுக்கோட்டை வனதுர்க்கை அம்மன் கோவிலுக்கு எதிரே உள்ள வனத்துறைக்கு சொந்தமான காட்டில் சுமார் 40 முதல் 45 வயது மதிக்கதக்க அடையாளம் தெரியாத ஆண் பிரேதம் அழுகிய நிலையில் தூக்கில் தொங்குவதை பொதுமக்கள் பார்த்தவுடன் உடையாளிப்பட்டி காவல் துறைக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்து பிரேதத்தை கைப்பற்றி காவல் துறை தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் சார்பில், இதில் தொழில்முனைவோருக்கான ஒருநாள் “ChatGPT”பயிற்சி வகுப்பு நாளை (மார்ச்.08) திருச்சி, அரியமங்கலம் சேஷசாயி தொழில்நுட்ப நிறுவனத்தில் நடைபெற உள்ளது. இதில் ஸ்டார்ப் நிறுவனர்கள், தொழிமுனைவோர் கலந்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு www.editn.in என்ற இணையம், 9894920819/ 9080609808 எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். SHARE NOW.
புதுகை மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டாட்சியரகங்களிலும் நாளை (மார்ச்.08) பொது விநியோகத்திட்ட குறைகேட்பு கூட்டங்கள் நடைபெறுகின்றன. காலை 10 மணிமுதல் பகல் 1 மணி வரை நடைபெறும் இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்க்கை, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை செய்துகொள்ளலாம் என கலெக்டர் மு.அருணா அறிவுறுத்தியுள்ளார். உங்களுக்கு தெரிந்தோர் பயன்பெற SHARE பண்ணுங்க..
விராலிமலை அருகே நார் கம்பெணியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. உடனே அருகில் இருந்தவர்கள் இலுப்பூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர், தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு துறையினர் தீயை போராடி அனைத்து வருகின்றனர். தீயை அணைத்த பிறகு எதனால் இந்த தீபத்து என்ற விவரம் தெரிய வரும்.
விராலிமலை ஊராட்சி ஒன்றியம் பகுதியில், ரூ. 1.91 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலக திறப்பு நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் மு.அருணா, இ.ஆ.ப., கலந்துகொண்டார். உடன் இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.அ.அக்பர்அலி, மாவட்ட பதிவாளர் (நிர்வாகம்) திருமதி.கு.சுசிலா, சார்பதிவாளர் (விராலிமலை) திருமதி.உமாசங்கரி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
விவசாயிகள் அரசின் பல்வேறு திட்ட பலன்களை பெறுவதில் ஏற்படும் காலதாமதத்தினை தவிர்க்கும் வகையில் அரசின் திட்டங்களில் விவசாயிகள் குறித்த நேரத்தில் பயன்பெற ஏதுவாக விவசாயிகள் அடையாள எண் பெற பொது சேவை மையங்களில் பதியலாம் என்றும், இதற்கு வருகின்ற 31ஆம் தேதியே கடைசி நாள். ஆகவே, புதுக்கோட்டை விவசாயிகள் இதனை சரியாக பயன்படுத்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அருணா அறிவுறுத்தியுள்ளார்.
கூட்டுறவு சங்கத்தில் பண மோசடியில் ஈடுபட்டதாக புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரஹ்மத்துல்லா (58) மற்றும் கணேசன் என்பவரும் கடந்த 2015-ம் ஆண்டு கைது செய்யப்பட்டு, பின்னர் ஜாமீனில் வெளியே வந்து வழக்கு விசாரணைக்கு புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜராகி வரும் நிலையில், நேற்று நீதிமன்றத்திற்கு ஆஜராக வந்த ரஹ்மத்துல்லாவிற்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.
Sorry, no posts matched your criteria.