India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டையில் உள்ள வட்டாட்சியர் அலுவலகங்களில் தொடர்புடையை தனி வட்டாட்சியர், வட்ட வழங்கல் அலுவலர்கள் முன்னிலையில் இன்று (செப்.,13) குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் உள்ள பொதுமக்கள் தங்கள் குடும்ப அட்டைகளில் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், முகவரி மாற்றம் மற்றும் புதிய குடும்ப அட்டை உள்ளிட்டவற்றிற்கான மனுக்களை கொடுக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அருணா தெரிவித்துள்ளார். SHARE IT

புதுக்கோட்டை மக்களே கிரைண்டர் வாங்க போறீங்களா? தமிழக அரசு கொடுக்கும் 5,000 மானியத்தை புடிங்க. தமிழக அரசு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள், ஆதரவற்றோர், கைம்பெண்கள் மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் உங்கள் வயது 25க்கு மேல் இருந்தால் தாராளமாக APPLY பண்ணலாம். தஞ்சை மாவட்ட சமூக நல அலுவரிடம் உங்கள் ஆவணங்களை சமர்பித்து விண்ணப்பிக்க மறந்துடாதீங்க. மற்றவர்களுக்கும் SHARE செய்து APPLY பண்ண சொல்லுங்க!

அரிமளம் அருகே உள்ள கே.புதுப்பட்டியிலிருந்து காரைக்குடிக்கு மீனாள் (35) ஸ்கூட்டியில் சென்றுள்ளார். அப்போது,கே.புதுப்பட்டி அடுத்த அணிக்கனி பாலம் அருகே நாய் குறுக்கே வந்ததால் பைக்கிலிருந்து தவறி விழுந்த அவர் படுகாயம் அடைந்தார். மேலும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அவரது தாய் ராக்கம்மாள் (58) அளித்த புகாரில் கே.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் விடுமுறை நாட்களில் எங்கே போகணும்னு தெரியலையா? புதுக்கோட்டையில் நீங்கள் பார்க்காத சில இடங்கள் இருக்கிறது? அது என்ன என்பதை பார்க்கலாம்.
✅அருங்ககாட்சியகம்
✅குண்டார்கோயில்
✅காட்டுபாவா பள்ளி வாசல்
✅குடுமியான் மலை
✅மலையடிப்பட்டி
✅கொடும்பாலூர்
✅ஆவுடையார் கோயில்
✅சித்தனவாசல்
✅திருமயம் கோட்டை
உங்கள் நண்பர்களுக்கும் SHARE செய்து Trip-க்கு கூப்பிடுங்க!

புதுக்கோட்டை மக்களே கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க! அதாவது, What’s App, SMS மூலம் போக்குவரத்து விதிமுறை அபராதம் எனக் கூறி வரும் போலி இ-சலான் செய்திகள் மீது நம்பிக்கை வைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகைய SMS-ல் உள்ள இணைப்புகளை அழுத்தினால் வங்கி கணக்குகள் காலியாகும் அபாயம் உள்ளது. எனவே உஷாராக இருங்க மக்களே (ஏமாற்றத்திற்குள்ளானவர்கள் 1930-க்கு புகாரளிக்கலாம்) SHARE IT

அன்னவாசல் அருகே உள்ள குடுமியான்மலையில் சவரிமுத்து அருள்தாஸ் நினைவு அறக்கட்டளை நிறுவனர் ரவிச்சந்திரன் வீட்டில் இன்று சிபிசிஐடி போலிசார் அதிரடி சோதனை நடத்தினர். இதில் முக்கிய ஆவணங்களான டைரி, காசோலைகள், பாஸ்புக், செக்புக், பாஸ்போர்ட் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (செப்.,12) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் குறித்து மாவட்ட காவல்துறை நிர்வாகம் அறிந்துள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது.

புதுகை மக்களே வங்கியில் வேலை வேண்டுமா? இந்த வாய்ப்பை தவற விடாதீங்க. SBI வங்கியில் காலியாக உள்ள 122 Specialist Officer பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு BE, டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு கிடையாது. சம்பளமாக ரூ.64,820 முதல் ரூ.1,05,280 வரை வழங்கப்பட உள்ளன. விருப்பம் உள்ளவர்கள் <

புதுக்கோட்டை மாவட்டத்தின் முன்னாள் திமுக எம்பி க வீரையா நினைவு தினம் இன்று செப்டம்பர் 12 அனுஷ்டிக்கப்பட்டது. முன்னதாக உழவர் சந்தை எதிரில் உள்ள அவரது நினைவிடத்தில் திமுக நிர்வாகிகள் மாவட்ட திமுக பொருளாளர் லியாகத் அலி அவைத்தலைவர் வீரமணி முன்னாள் எம்எல்ஏ கவிதை பித்தன் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் தந்தை வேதமூர்த்தி (80) உடல் நலக்குறைவால் காலமானார். சென்னை கொட்டிவாக்கம் AGS காலனியில் உள்ள அவர்களது வீட்டிற்கு நேரில் சென்று புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர் கே.கே.செல்ல பாண்டியன் இன்று அஞ்சலி செலுத்தினார். மேலும் திமுக முக்கிய நிர்வாகிகள், தலைவர்கள், கழக நிர்வாகிகள், ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
Sorry, no posts matched your criteria.