India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை சேர்ந்த தமிழக ஆதிதிராவிட நலத்துறை அமைச்சராக சுப்ரமணியன் அதிமுக ஆட்சியில் இருந்து வந்தார். வேலை வாங்கி தருவதாக 20 பேரிடம் 65 லட்சம் லஞ்சம் பெற்றதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது குறித்து சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் விசாரணை நடத்தி அதன் உண்மை தன்மையை அறிந்து, எக்ஸ் அமைச்சர் சுப்பிரமணியன் அவரது மகள் லாவன்யா மீது 4 பிரிவின் சேலம் விஜிலென்ஸ் போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
புதுகை மாவட்ட ஆட்சியர் அருணா பேரில் முகநூல் ஒன்றை ஏற்படுத்தி அதில் பழைய பர்னிச்சர் பொருள் விற்பதாக பதிவிட்டிருந்தார் இது குறித்து மாவட்ட நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் வடநாட்டு கும்பல் ஏற்படுத்திய போலி முகநூல்-லை புதுகை சைபர் கிராம் போலீசார் இன்று முடக்கி வைத்தனர். மேலும் இந்த போலி முகநூல் கணக்கை யார் ஏற்படுத்தினார்கள் என்பது குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் மலையிலேயே குடைந்து செய்யப்பட்ட 14 குடைவரைக் கோவில்கள் உள்ளன. இம்மாவட்ட கலை வரலாற்றில் இது தனிச்சிறப்பு. தமிழகத்தில் கோவில் கலை வரலாற்றின் படிப்படியான வளர்ச்சியினை காளியாப்பட்டி, பனங்குடி, திருக்கட்டளை, நார்த்தாமாலை, கொடும்பாளூர் ஆகிய இடங்களில் உள்ள கோயில்கள் பரைசாற்றுகின்றன. இது வேறு எந்த மாவட்டத்திலும் காணப்படாத தனிச்சிறப்பு இம் மாவட்டத்தின் “பெருமை வாய்ந்த சிறப்பு”
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை மட்டும் தெரிவித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.
குட்கா முறைகேடு வழக்கில் முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மற்றும் சென்னை முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்டோர் அக்.14ல் நேரில் மீண்டும் ஆஜராக சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் குட்கா முறைகேடு வழக்கில் குற்றப்பத்திரிகை தயாராக உள்ளது என சிபிஐ தரப்பில் நீதிமன்றத்தில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு புதுக்கோட்டை மாவட்ட ஆட்சி அரங்கத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம் கோரிக்கையை மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி அருணா பெற்றுக் கொண்டு மனுக்களை படித்துவிட்டு சரி செய்யுமாறு அதிகாரிக்கு அறிவுரை கூறினார்.
ஆசிரியர்கள் கூட்டமைப்பான டிட்டோ ஜாக் வரும் செப்.30, அக்.1-ஆம் தேதிகளில் போராட்டம் நடைபெறும் என தெரிவித்தது. இந்நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியுடன் ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பாக பேச்சுவார்த்தை நடத்தி உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து தற்காலிகமாக போராட்டம் ஒத்தி வைக்கப்படுவதாக ஆசிரியர் இயக்கங்களின் புதுக்கோட்டை கூட்டு நடவடிக்கை குழு அறிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வ கோட்டை ஒன்றியத்தில் மாற்றுத்திறனாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில தலைவர் ரெ.தங்கம் அவர்களின் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திற னாளி முன்னேற்ற சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ரகமதுல்லா அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையை விரிவுபடுத்திய முதலமைச்சருக்கு அனைத்து மாற்றுத்திறனாளிகள் சார்பாகவும் நன்றி தெரிவிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
08.02.1900 ஆம் ஆண்டு புதுக்கோட்டையில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டது. இது 30 வினாடி தொடர்ந்து இருந்தது, ஆனால் அழிவுகள் ஏதும் ஏற்படவில்லை. 26.12.2004 தமிழகத்தை சுனாமி தாக்கிய பொழுது, புதுக்கோட்டை அருகே குடுமியான்மலை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாறை குளங்களில் லேசாக அதிர்ந்தது, ஆனால் அது நிலநடுக்கம் இல்லை என பின்னர் தெரிய வந்தது.
பொன்னமராவதியை சேர்ந்த இளங்கதிர் இளங்கோவன் உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024ஆம் ஆண்டுக்கான போட்டியில் உலகதரவரிசையில் 14ஆவது இடத்தை பெற்றுள்ளார். இத்தாலி நாட்டில் ரோம்நகரில் நடந்த உலக ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் 2024ஆம் ஆண்டுக்கான போட்டியில் இந்தியா சார்பில் விளையாடி தாய்த்திரு நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார். இவருக்குபல்வேறு அமைப்புகள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்.
Sorry, no posts matched your criteria.