India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று ( 10.09.2024 ) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு டவுண் உமாமகேஸ்வரி, அறந்தாங்கி ராஜகோபால், கீரனூர் கண்ணன், பொன்னமராவதி சரண்யா, கோட்டைபட்டணம் முருகையன், ஆலங்குடி காந்திமதி, இலுப்பூர் அருணகிரி, ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட மற்றும் தொடர்பு கொள்ள வேண்டிய உதவி எண்கள் அல்லது 100 தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிடை மாற்றம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் புதுக்கோட்டை, கறம்பக்குடி, அரிமளம், அறந்தாங்கி கந்தர்வகோட்டை, பொன்னமராவதி, திருமயம் விராலிமலை உள்ளிட்ட 10 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நிர்வாக நலன் கருதி பணியிட மாறுதல் வழங்கி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் செப்டம்பர் 27ஆம் தேதி (நாளை) வெள்ளிக்கிழமை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது. புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயம் சம்பந்தமான கோரிக்கைகளை தெரிவித்து பயனடைய மாவட்ட ஆட்சியர் அருணா அழைப்பு விடுத்துள்ளார்.
விராலிமலை கோவில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இந்த பணி தஞ்சை அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கவிதா தலைமையிலும், புதுக்கோட்டை தேவஸ்தான செயல் அலுவலர் முத்துராமன், ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணப்பட்டது. இதில் பக்தர்கள் காணிக்கையாக ரூ.19 லட்சத்து 29 ஆயிரத்து 150ஆம், 19.300 கிராம் தங்கம், 944.300 கிராம் வெள்ளியும் வந்துள்ளது.
திருக்கோகர்ணம் காவல் நிலையத்தில் ரைட்டராக பணியாற்றிய பாலசுப்பிரமணியன் வெள்ளனூர் காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். இந்நிலையில் முகமது காசிம் என்பவரின் புகாருக்கு போலியான சிஎஸ்ஆர் ஆவணம் தயாரித்து வழங்கி உள்ளார். இதையடுத்து எஸ்ஐ சுப்பிரமணியன் மற்றும் போலி ஆவணம் தயாரிக்க கூறிய மூக்கையா இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
திருச்சி காரைக்குடி தேசிய நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை மாவட்டம் பூசத்துறை அருகே இளங்குடிப்பட்டி நகர சிவ மடம் அருகே சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நபர்கள் 5 பேர் காரில் சடலமாக உள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்திய முதற்கட்ட விசாரணையில் கடன் தொல்லையால் கடிதம் எழுதி வைத்துவிட்டு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.
புதுக்கோட்டை அருகே நமணசமுத்திரம் என்ற இடத்தில் கார் ஒன்று நெடு நேரமாக நின்று கொண்டிருந்தது. இது குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் நேரில் வந்து பார்க்கும் பொழுது ஐந்து பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் விஷமருந்து தற்கொலை செய்து கொண்டதாக முதல் கட்ட தகவல் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெறும் அரசு நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்கள் பொதுமக்கள் அறிந்து பயன் பெறும் வகையில் முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இதற்க்கு களங்கம் விளைவிக்கும் வகையில் சில நபர்கள் புதுக்கோட்டை கலெக்டர் பெயரில் போலி முகநூல் கணக்குகளை உருவாக்கியுள்ளனர். இதுபோன்று போலி கணக்குகள் உருவாக்கப்பட்டிருந்தால் பொதுமக்கள் கலெக்டரின் நேர்முக உதவியாளர் 9445008146 தெரிவிக்கலாம்.
புதுக்கோட்டை என்றதும் நினைவுக்கு வருவது 1738 ஆம் ஆண்டு தொண்டமான் மன்னர்களால் அச்சடிக்கப்பட்டு தசரா போன்ற பண்டிகைகளுக்கு ஏழை எளிய மக்களுக்கு தானமாக அளிக்கப்படும் அம்மன் காசு. ஒரு பக்கத்தில் திருக்கோகர்ணம் பிரகதாம்பாள் உருவம் மற்றொரு பக்கம் விஜய என்ற தெலுங்கு எழுத்தும் காணப்படும். திவான் சேஷாத்திரி காசை வடிவமைத்து லண்டனில் இருந்து அச்சடித்து வெளியிட்டார். 1948 வரை புழக்கத்தில் இருந்தது.
அறந்தாங்கி கோட்டத்திற்குட்பட்ட துணை மின் நிலையங்களில் வரும் 26ஆம் தேதி மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுகிறது. அழியாநிலைஸ கீரமங்கலம் துணை மின் நிலையத்திற்குட்பட்ட மறமடக்கி, ராஜேந்திரபுரம், கீரமங்கலம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என மின்சாரத்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
Sorry, no posts matched your criteria.