Pudukkottai

News January 19, 2026

புதுக்கோட்டை: காங்கிரஸ் கமிட்டிக்கு புதிய தலைவர் நியமனம்

image

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் புதிய மாவட்டத் தலைவர்களின் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் வெளியிட்டுள்ளது. அதில் கட்சி அமைப்பிலான 71 மாவட்டங்களுக்கு புதிய தலைவர்களை நியமித்து தலைமை உத்தரவிட்டுள்ளது. இந்நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு புதுக்கோட்டை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக எஸ். மணிகண்டன் என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு காங்கிரஸார் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர்.

News January 19, 2026

புதுக்கோட்டை: கம்பெனி CALL-களை தடுக்க சூப்பர் வழி!

image

புதுக்கோட்டை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

News January 19, 2026

புதுகை: இளைஞர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

புதுகை: இளைஞர்களுக்கு உதவித் தொகை – ஆட்சியர் அறிவிப்பு

image

புதுகை மாவட்டத்தில், வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கும் திட்டத்தின் கீழ், தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் பதிவு செய்துள்ள வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மாத மாதம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. இதில், 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.300, +2 வகுப்பு முடித்தவர்களுக்கு ரூ.400, பட்டதாரிகளுக்கு ரூ.600 வழங்கப்பட உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

புதுக்கோட்டை: குளத்தில் விழுந்த முதியவர் பரிதாப பலி

image

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அமரக்குளத்தில் நேற்று அரிதாஸ்(67) என்பவர், குளத்தில் படித்துறையில் அமைர்ந்து குளித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக குளத்தினுள் தவறி விழுந்து உயிரிழந்தார். இதுகுறித்து அவரது மகன் பாலு கீரனூர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News January 19, 2026

புதுக்கோட்டை: இனி Gpay, Phonepe தேவையில்லை!

image

புதுகோட்டை மக்களே, இனி உங்களது போனுக்கு ரீசார்ஜ் செய்ய அலைய வேண்டாம்! வாட்ஸ்ஆப் மூலமாக உங்களது சிம் கார்டின் ரீசார்ஜ், டேட்டா இருப்பு உள்ளிட்டவற்றை அறிய புதிய வழி அறிமுகமாகியுள்ளது. இதற்கு ஜியோ (70007 70007), ஏர்டெல் (24828 20000), Vi (96542 97000) என்ற எண்ணில் ‘HI’ என மெசேஜ் அனுப்பினால் போதும், Gpay, Phonepe, Paytm இல்லாமலேயே உங்கள் போனுக்கு ரீசார்ஜ் செய்யலாம். SHARE பண்ணுங்க.

News January 19, 2026

புதுக்கோட்டை: ஜல்லிக்கட்டில் 31 பேர் காயம்

image

புதுக்கோட்டை அருகே வடமலாப்பூரில் கருப்பர் கோவில் பொங்கல் விழாவையொட்டி, நேற்று ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. காலை முதல் நடந்த போட்டியில் 592 காளைகள் பங்கேற்றனர், 151 மாடுபிடி வீரர்கள் களமிறங்கினர். இந்நிலையில், இப்போட்டியில் மொத்தம் 31 பேர் காயமடைந்தனர். மேலும் காயமடைந்தவர்களில் 14 பேர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 300க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

News January 19, 2026

புதுகை: இரு தரப்பினர் இடையே மோதல் – மக்கள் போராட்டம்

image

கறம்பகுடி அருகே மஞ்சுவிடுதி கிராமத்தில் நேற்று முன்தினம் பொங்கல் விழா நடைபெற்ற போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்படுள்ளது. இதில் வெளியூரை சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட பகுதி மக்கள் பகுதியில் புகுந்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து இருதரப்பினரும் கறம்பக்குடி காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், நேற்று அம்மக்கள் தங்கள் பகுதியில் தாக்குதல் நடத்தியவர்களை கைது செய்யக்கோரி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

News January 19, 2026

புதுக்கோட்டை: நாளை மின்தடை அறிவிப்பு!

image

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் துணை மின்நிலையத்தில் நாளை(ஜன.20) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே இங்கிருந்து மின்வினியோகம் பெறும் மாத்தூர், இண்டஸ்ட்ரியல் பகுதி, கைனாங்கரை, சிட்கோ இண்டஸ்ட்ரில எஸ்டேட், , தேவளி, ஆவூர், ஆம்பூர் பட்டி, பிடாம்பட்டி, திருமலை சமுத்திரம், வங்காரம் பட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. SHARE IT!

News January 19, 2026

புதுகை: இரவு ரோந்து பணி காவலர்கள் விவரம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.18) இரவு 10 மணி முதல் இன்று(ஜன.19) காலை 6 மணி வரை, இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

error: Content is protected !!