India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று (ஜன.17) இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்ட காவலர்கள் மற்றும் அவர்களை தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் வெளியிடப்பட்டுள்ளது. எனவே தேவையுள்ளவர்கள் இதனை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட காவல்துறை அறிவித்துள்ளது. இதனை மற்றவர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்!

▶️ திருவப்பூர் முத்துமாரியம்மன் கோயில்
▶️ புவனேஸ்வரி அம்மன் கோயில்
▶️ கொன்னையூர் முத்துமாரியம்மன் கோயில்
▶️ நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோயில்
▶️ தென்னலூர் முத்துமாரியம்மன் கோயில்
▶️ அறந்தாங்கி வீரமாகாளியம்மன் கோயில்
▶️ ஆலங்குடி நாடியம்மன் கோயில்
▶️ மனோன்மணியம்மன் கோயில்
உங்கள் பகுதியில் பிரசித்தி பெற்ற கோயில்களை கமெண்ட் பண்ணுங்க. இத்தகவலை SHARE பண்ணுங்க!

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் வல்லத்திராகோட்டையில் 4 பேர், கறம்பக்குடியில் 4 பேர், மழையூரில் 5 பேர், மழையூர் அருகே கண்டியான்பட்டியில் 4 பேர் என 17 பேர் கைது செய்யப்பட்டு ரூ.4,220, 208 சீட்டு அட்டைகள் கைப்பற்றப்பட்டன. பின்னர் அனைவரும் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என எஸ்.பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

புதுக்கோட்டை மக்களே, தேசிய விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி வங்கியில் (NABARD) காலியாக உள்ள 162 Development Assistant பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகி உள்ளன. 21 – 35 வயதுகுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் <

புதுக்கோட்டை மக்களே, தமிழ்நாடு அரசு சார்பில் இலவச மின் இணைப்பு வழங்கப்படுகிறது. அவ்வகையில் இத்திட்டத்தில் மோசடிகளை தடுக்கவும், 100 யூனிட் மின்சாரம் மக்களுக்கு முறையாக கிடைக்கவும் மின் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைப்பதை அரசு கட்டாயமாக்கியுள்ளது. இதுவரை இணைக்காதவர்கள் <

புதுகையைச் சேர்ந்த ஆனந்த் (25), அவருடைய நண்பர் பிரசாத் (30), இருவரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கோட்டூர் அருகே பேரையூரில் உறவினரை பார்ப்பதற்கு ஜன.14 பைக்கில் செல்லும் போது நிலை தடுமாறி கீழே விழுந்ததில் ஆனந்த் அதே இடத்தில் உயிரிழந்தார். பிரசாத் புதுகை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலன் இல்லாமல் நேற்று இரவு உயிரிழந்தார். இது குறித்து நமண சமுத்திரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தற்போதைய நவீன காலகட்டத்தில் அரசின் பல்வேறு நலத்திட்டங்களுக்கு இ-சேவை மையங்கள் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தமிழகத்தில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்கும் வகையில் சொந்தமாக இ-சேவை மையங்கள் தொடங்கிட அரசு அனுமதிக்கிறது. இதில் விருப்பமுள்ளவர்கள் <

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று (ஜன.16) புதுகை நகர்ப்பகுதி, வல்லத்திராக்கோட்டை, வெள்ளனூர், வட காடு, பனையப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபடும் பொழுது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டது. இது தொடர்பாக ஐந்து பேர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டனர் என எஸ்பி அலுவலகம் தெரிவித்துள்ளது.

சத்யவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரத் திட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின்தங்கிய பெண்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகிறது. ஆண்டுக்கு ரூ.72,000-க்கும் கீழ் வருமானம் ஈட்டுபவர்கள் தங்கள் அருகில் உள்ள இ-சேவை மையம் மூலமாக இதற்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு புதுகை மாவட்ட சமூக நலத்துறை அலுவலகத்தை அணுகவும். இந்த தகவலை SHARE செய்யவும்.

விராலிமலை பேருந்து நிலையம் அருகே அனுமதி இன்றி மது விற்கப்படுவதாக விராலிமலை காவல் நிலையத்திற்கு கிடைத்த தகவல் எடுத்து அப்பகுதியில் சென்று கண்காணிக்க பணியில் ஈடுபட்ட போது டாஸ்மார்க் அருகே மணமேடு பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணியன் (52), மாதிரிபட்டி டாஸ்மார்க் கடை அருகே மதுவிற்ற திருநல்லூர் ராமலிங்கம் (31) ஆகிய இரண்டு பேரை கைது செய்து, அவர்களிடமிருந்து 106 மதுபாட்டில்களைப் பறிமுதல் செய்தனர்.
Sorry, no posts matched your criteria.