India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
இலுப்பூர் மதர் தெரசா கலை அறிவியல் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவிற்கு மதர் தெரசா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் சின்னத்தம்பி தலைமை தாங்கினார் தாளாளர் உதயகுமார் முன்னிலையில் வகித்தார் இயக்குனர் திருமா பூங்குன்றன் வாழ்த்துரை வழங்கினார். இதில் முன்னாள் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்டம் இளையாவயல் கிராமத்தை சேர்ந்த தேவி என்ற கர்ப்பிணிக்கு பிரசவ வலி ஏற்பட்டு கீரனூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் புதுகை ராணியார் மருத்துவமனைக்கு அழைத்து வரும்போது வழியில் அதிகவலி ஏற்பட்டு நேற்று சுகப்பிரசவத்தில் ஆம்புலன்ஸிலேயே பெண்குழந்தை பிறந்தது. புதுகை ராணியார் மருத்துவமனையில் தாயும் சேயும் நலமுடன் உள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற எம்பி தேர்தலில் மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்ற தொகுதிகளில் விராலிமலை தொகுதியில் 80.49 சதவீத வாக்குப்பதிவும், ஆலங்குடியில் 73.62 சதவீதமும், திருமயத்தில் 65.85 சதவீதமும், அறந்தாங்கியில் 68.80 சதவீதமும், புதுக்கோட்டையில் 67.83 சதவீதமும், கந்தர்வகோட்டையில் 73.76 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதில் 13,45,361 வாக்காளர்களில் 9,62,496 பேர் வாக்களித்தனர்.
ஆயங்குடி தெற்குகிராமத்தை
சேர்ந்தவர் சங்கர். எஸ்.பி. பட்டினத்தை சேர்ந்தவர் முரளி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் நேற்று ஒரே மோட்டார் சைக்கிளில் எஸ்.பி.பட்டினத்தில் இருந்து அறந்தாங்கி சென்றபோது புறங்காடு என்ற இடத்தில் சாலையின் குறுக்கே இருந்த வேகத்தடையில் மோட்டார் சைக்கிள் ஏறி இறங்கியது. இதில் நிலைதடுமாறிய 2 பேரும் சாலையில் விழுந்து படுகாயம் அடைந்த நிலையில் இருவரும் பலியாகினர்.
புதுக்கோட்டை,கந்தா்வகோட்டை ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் திருச்சி மக்களவைத் தொகுதியிலும்,விராலிமலை சட்டப் பேரவைத் தொகுதி கரூா் மக்களவைத் தொகுதியிலும்,அறந்தாங்கி சட்டப்பேரவைத் தொகுதி ராமநாதபுரம் மக்களவைத் தொகுதியிலும்,ஆலங்குடி திருமயம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகள் சிவகங்கை மக்களவைத் தொகுதியிலும் வருகின்றன. மக்களவைத் தோ்தலில் விறுவிறுப்பான வாக்குபதிவில் புதுக்கோட்டையில் 71.72% பேர் வாக்களித்தனா்
தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நேற்று காலை 7 மணி தொடங்கி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி 39 தொகுதிகளிலும் 72.09 சதவீத
வாக்குகள் பதிவாகியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள 4 எம்பி தொகுதிகளின் வாக்குப்பதிவு நிலவரம்- திருச்சி 71.20 சதவீதமும், சிவகங்கை 71.05 சதவீதமும், கரூர் 74.05 சதவீதமும், ராமநாதபுரத்தில் 71.05 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளது.
சிவகங்கை லோக்சபா தொகுதி புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகா தேக்காட்டூர் ஊராட்சியில் சிவபுரம்,கீழ,,மேலத்தேமுத்துப்பட்டி,இளங்குடிப்பட்டி,சத்திரம், மழுக்கன்பட்டி ஆகிய கிராமங்களை புதுக்கோட்டை மாநகராட்சியுடன் இணைக்க பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து தேர்தல் புறக்கணிப்பு செய்தனர். அனைத்து கட்சிகள், கிராம மக்கள் முடிவுசெய்து ஓட்டுப்போட 4 பேரைத்தவிர யாரும் வராததால் வெறிச்சோடி கிடந்தது.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து புதுகை மாவட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. பணம், பரிசு பொருள்கள் கொண்டு செல்வதை தடுப்பதற்காக பறக்கும்படை, நிலையான மற்றும் விடியோ கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன. இதில் மாவட்டம் முழுவதும் மொத்தம் 20 தேர்தல் நடத்தை விதிமீறல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம் துவார் ஊராட்சிக்கு உட்பட்ட கெண்டையன்பட்டியில் காலை முதல் வாக்குப்பதிவு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இங்கு ஜாதி அடிப்படையில் மாற்று கட்சியினர் இருப்பதனால் பதட்டமான சூழல் நிலவுகிறது. இதனால் அதிகாரிகள் உடனுக்குடன் வந்து ஆய்வு செய்து வருகின்றனர். 800க்கும் மேற்பட்ட வாக்குகள் இருக்கும் நிலையில் தற்போது 40 வாக்குகள் பதிவாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில், புதுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையங்களுக்கு, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் அனுப்பி வைக்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று பார்வையிட்டார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, வட்டாட்சியர் பரணி உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.
Sorry, no posts matched your criteria.