India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டையில் மின்சாரம் பாய்ந்து பெண் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்
புதுக்கோட்டை பாரதி நகரை சேர்ந்தவர் சுபா. இவர் நேற்று வீட்டில் மோட்டாருக்கான சுவிட்சை போட்டார். அப்போது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே சுபா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து கணேஷ் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பனையப்பட்டி கிராமத்தில் புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரியில் இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராமத்தில் தங்கி விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை குறித்து செயல் விளக்க பயிற்சி நேற்று நடத்தினர். இந்த செயல் விளக்கத்தில் பனையப்பட்டி கிராமத்தில் வசித்து வரும் விவசாயி பழனியப்பன் தங்களின் அனுபவத்தை மாணவிகளிடம் பகிர்ந்து கொண்டார். மேலும் அந்த கல்லூரி மாணவிகள் வேளாண் திட்டங்கள் பற்றி கூறினர்.
புதுக்கோட்டை- தஞ்சாவூர் சாலையில் உள்ள கிராமம் ஆதனக்கோட்டை. ஊருக்குள் நுழையும்போதே முந்திரி மணம் மூக்கைத் துளைக்கிறது. அந்த வகையில் புதுக்கோட்டை ரயில் நிலையத்தில் தயாரிப்பின் கீழ் முந்திரி விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இங்கு குடிநீர், பேரீச்சை, ராவா லட்டு, நட்ஸ் & பிற ஸ்நாக்ஸ் வகைகளும் விற்பனை செய்யப்படுகிறது.
புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சித்ரா பௌர்ணமியை முன்னிட்டு கீழ 5ம் வீதி மரக்கடை வீதியில் அருள்பாளித்து வரும் ஸ்ரீ நல்ல வீரப்பசுவாமி, முப்பலி கருப்பர் கோவிலில் 16ம் ஆண்டு அன்னதான விழாவினை மாநகராட்சி துணை மேயர் மு.லியாகத் அலி துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் அரசு ஒப்பந்ததாரர் விஜய் முருகேசன் மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் உடன் இருந்தனர்.
அன்னவாசல் பகுதிகளில் அரசு அனுமதியின்றி மது பாட்டில்கள் விற்கப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல்கள் வந்தன. இதனையடுத்து அன்னவாசல் போலீசார் நேற்று சீகம்பட்டி மலையடி அருகே மது விற்ற அண்ணாமலை, தனியார் திருமண மண்டபம் அருகே மது விற்ற முத்துக்குமார், சித்தன்னவாசல் பெரியகுளம் அருகே மது விற்ற சின்னத்துரை ஆகியோரை கைது செய்து அவர்களிடம் இருந்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்
சென்னையை சேர்ந்த ராஜாமணி. இவரது உறவினர்கள் உள்ளிட்ட 7 பேர் ஒரு காரில் திருப்பத்தூரில் இருந்து நேற்று காலை சென்னைக்கு சென்றபோது புதுக்கோட்டை சிப்காட் அருகே சாலையை கடக்க முயன்ற பெண்மீது மோதாமல் இருக்க காரை திருப்பியபோது கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் தனிஷ்சாய் என்ற 2 வயது குழந்தை பலியானது. மேலும் 6 பேர் படுகாயம் அடைந்தார்.
புதுக்கோட்டை தமிழ்ச் சங்கத்தின் முதலாம் ஆண்டு ‘சீனு சின்னப்பா இலக்கிய விருதுகள்-2024’ பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. இதில் 10 பிரிவுகளில் நூல்கள் பெறப்பட்டு, விருதுபெறும் படைப்புகள் மற்றும் படைப்பாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில் விருதுப்பட்டியலை அருண் சின்னப்பா வெளியிட எழுத்தாளர் நா.முத்துநிலவன் பெற்றுக்கொண்டார். இதில் தலைவர் கவிஞர் தங்கம்மூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று கோவை, திருவாரூர், தஞ்சாவூர், திருப்பூர், தேனி, தென்காசி, நெல்லை, சிவகங்கை,புதுகை, மதுரை, நீலகிரி, விருதுநகர், ராமநாதபுரம், குமரி ஆகிய 14 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை, ஆலங்குடி அருகேயுள்ள வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழா ஞாயிற்றுக்கிழமை இரவு காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது. இதையொட்டி, சிறப்பு அலங்கார முத்துமாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, ஏராளமான பெண்கள் ஆரத்தி குடங்களுடன் செல்ல அம்மன் வீதியுலா நிகழ்ச்சியும், அன்னதானமும் நடைபெற்றது.
புதுகை மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சுமார் 800 ஆண்டுகளுக்கு முற்பட்ட இலுப்பூர் சொர்ணாம்பிகை சமேத பொன்வாசிநாதர் தேர்த்திருவிழா நேற்று நடைபெற்றது. கடந்த 13 ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி மண்டகப்படிதாரர்கள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற தேர்த்திருவிழாவில் ஏராளமனான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம்வந்து நிலையை அடைந்தது.
Sorry, no posts matched your criteria.