Pudukkottai

News March 27, 2024

புதுக்கோட்டை அருகே பயங்கர விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

திருச்சி பாலக்கரையை சேர்ந்தவர் ரமேஷ்.இவர் தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று ரமேஷ்  மோட்டார் சைக்கிளில்  விராலிமலை அருகே  சென்றபோது அவ்வழியாக வந்த கார் மோட்டார்  சைக்கிள் மீது மோதியது.இதில் டாக்டர் ரமேஷ்  பலியானார்.காரில் வந்த லோஙராஜ்,சரண்யா, சித்ரா ஆகியோர் படுகாயம் அடைந்தனர்.விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

News March 27, 2024

புதுக்கோட்டை அருகே சரமாரி வெட்டு

image

வடகாடு அருகே புள்ளான்விடுதி
சேர்ந்தவர் கணேசன் இவரது உறவினர் ராஜேந்திரன் மகன் சுதாகர் (34). இவர்கள் இருவருக்கும் இடையே
இடப்பிரச்சினை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் நேற்று கணேசனுக்கு சொந்தமான இடத்தில் உள்ள மரங்களை சுதாகர் வெட்டியுள்ளார். இதனை தட்டிக்கேட்ட கணேசனை, அரிவாளால் சுதாகர் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் படுகாயமடைந்த கணேசன்
வடகாடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்

News March 27, 2024

புதுக்கோட்டையில் மழைக்கு வாய்ப்பு!

image

தமிழ்நாட்டில் 8 மாவட்டங்களில் இன்று(மாரச் 27) காலை 10 மணி வரை மழைபெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குமரி, தஞ்சாவூர், மயிலாடுதுறை, நாகை, ராம்நாடு, நெல்லை, திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

News March 27, 2024

புதுகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம்

image

ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி புதுக்கோட்டை ,பொன்னமராவதி ஒன்றியத்தில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் 47 பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டது. இந்த கற்பித்தல் மையங்களில் கற்பித்தல் பணியை மேற்கொண்ட தன்னார்வலர்களுக்கு பாராட்டு விழா பொன்னமராவதி வட்டார வளமையத்தில் 26.3.2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை வட்டார கல்வி அலுவலர்கள் ராமதிலகம் மற்றும் இலாஹி ஜான் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

News March 26, 2024

புதுகையில் மருத்துவக் கல்லூரியில் எம்எல்ஏ ஆய்வு

image

புதுகை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த இரண்டு தினங்களாக பல்வேறு கோரிக்கைகளை தொலைபேசி வாயிலாக பொதுமக்கள் தெரிவித்து வந்த நிலையில், இன்று நேரடியாக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று கோரிக்கை வந்தவர்களிடம் அது குறித்து கேட்டறிந்து அவற்றை நிவர்த்தி செய்ய மருத்துவ பணியாளர்களை அறிவுறுத்தினார் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா உடன் நிர்வாகிகள் மருத்துவர்கள் இருந்தனர்.

News March 26, 2024

புதுகை அருகே ரூ.2 லட்சம் பறிமுதல்

image

திருச்சி மக்களவைத் தொகுதிக்குள்பட்ட கந்தா்வகோட்டையில் தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகில் நேற்று(மார்ச்.25) தோ்தல் பறக்கும் படையினா் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம்  சாவக்காடு என்ற இடத்தைச் சோ்ந்த க.மோகன்தாஸ் என்பவா் உரிய ஆவணங்கள் இன்றி ரூ.2 லட்சம் எடுத்துச் சென்றது தெரியவந்தது.பின்பு பறக்கும் படையினா் அவற்றை பறிமுதல் செய்தனர்.

News March 26, 2024

புதுகை அருகே பத்தாம் வகுப்பு பொது தேர்வு- கலெக்டர் ஆய்வு

image

புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தேர்வு மையத்தில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறுவதை,
மாவட்ட ஆட்சித்தலைவர்
ஐ.சா. மெர்சிரம்யா, இ.ஆ.ப., இன்று (26.03.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் இலுப்பூர்
வருவாய் கோட்டாட்சியர் தெய்வநாயகி, வட்டாட்சியர் சூரிய பிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

News March 26, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பதாவது- 2023 ஆம் ஆண்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் (ஐடிஐ) சேரவும், அரசு உதவிபெறும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் மற்றும் சுயநிதி தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர்ந்திடவும் விண்ணப்பங்கள் மே 24 ஆம் தேதிமுதல் பெறப்பட்டு வந்தது. தற்போது காலக்கெடு ஜீன் 20 ஆம்
தேதிவரை நீட்டிக்கப்பட்டுள்ளது. என கூறியுள்ளார்.

News March 26, 2024

புதுகை: 22,835 பேர் தேர்வு எழுதுகின்றனர்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று முதல் நடைபெறும் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வினை 22,835 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். பத்தாம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கான பொதுத்தேர்வு தமிழ் பாடத் தேர்வுடன் தொடங்கி வருகிற ஏப்ரல் 8-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. கண்காணிப்பு அலுவலராக மேல்நிலைக்கல்வி இணை இயக்குநர் கோபிதாஸ் அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

News March 25, 2024

அதிமுக வேட்பாளர் மனு தாக்கல்

image

சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் சேவியர் தாஸ் இன்று நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர், மாவட்ட செயலாளர் ஆகியோருடன் தேர்தல் நடத்தும் அலுவலர் மாவட்ட ஆட்சியரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். இதில் கூட்டணி கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் படை சூழ கலந்து கொண்டனர். திருமயம், ஆலங்குடி சட்டமன்ற தொகுதிகள் இதில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!