Pudukkottai

News September 8, 2024

முத்துப்பட்டினத்துக்கு வருகை தந்த ஈ.பி.எஸ்

image

முத்துப்பட்டினம் ராமச்சந்திரன் இல்ல மணவிழாவில் கலந்து கொள்ள தமிழக எதிர்க்கட்சி தலைவரும், அதிமுக பொது செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று வருகை தந்தார். இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட ஏராளமான அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இதனால் புதுக்கோட்டை-ஆலங்குடி சாலை மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது.

News September 8, 2024

திருமயம் அருகே காண்டாமிருகம் கொம்பு பறிமுதல்

image

திருமயம் அருகே காண்டாமிருக கொம்பு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுவதாக வனத்துறை தனிப்பிரிவினருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து வனத்துறையினர் மற்றும் வனத்துறை தனிப்படையினர் பரளி என்ற இடத்தில் காண்டாமிருகம் கொம்பை கொண்டு சென்ற மூன்று நபர்களை பிடித்து, கொம்பை பறிமுதல் செய்து, காரைக்குடியைச் சேர்ந்த மூன்று பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News September 8, 2024

விராலிமலை அருகே 10 பவுன் நகை திருட்டு

image

மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் சேசுராஜ். இவரும் இவரது மனைவியும் அப்பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்றுள்ளனர். பின்னர் மீண்டும் வீட்டுக்கு வந்து பார்த்த போது பீரோ திறக்கப்பட்டு 10 பவுன் நகை, 250 கிராம் வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

News September 7, 2024

புதுக்கோட்டையில் இரவு பணியில் ஈடுபடும் காவல்துறை

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் காவல்துறை அதிகாரிகள் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்படி DSP கௌதம் கோட்டைப்பட்டினம் டவுன் ரமேஷ் கந்தர்வகோட்டை சுகுமாரன் இன்ஸ்பெக்டர் அறந்தாங்கி ராஜகோள்பால் பொன்னமராவீதி சக்திவேல். மேலும் பொதுமக்கள் புகார் செய்ய 949801800730 என்ற எண்னை தொடர்பு கொள்ளவும்.

News September 7, 2024

புதுக்கோட்டை மீனவர்கள் 14 பேர் கைது

image

ஜெகதாபட்டினத்தில் இருந்து 3 விசைப்படகுகளில் மீன்பிடிக்க சென்ற 14 மீனவர்களை, நெடுந்தீவு அருகே எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் தற்போது கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்ட 14 மீனவர்களை காங்கேசன் கடற்படை முகாமிற்கு அழைத்து சென்று, இன்று இரவு அல்லது நாளை காலை மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

News September 7, 2024

மணமேல்குடியில் கடத்தி செல்லப்பட்ட 188 கிலோ கஞ்சா பறிமுதல்

image

மணமேல்குடி கடற்கரையிலிருந்து இலங்கை பேச்சாளை கடற்கரைக்கு கடல் வழியாக கடத்திச் செல்லப்பட்ட ரூ. 75 லட்சம் மதிப்பிலான 188 கிலோ கஞ்சா பொட்டலங்களை நடுக்கடலில் வைத்து இலங்கையை சேர்ந்த படகில் மாற்ற முயன்ற போது, இலங்கை கடற்படை ரோந்து படகை கண்டதும் தமிழக மீன்பிடிப்படகில் இருந்த கடத்தல் காரர்கள் கஞ்சா மூட்டைகளை கடலில் வீசி சென்றுள்ளனர்.

News September 7, 2024

புதுக்கோட்டையில் விளையாட்டு போட்டிகள் தொடக்கம்

image

புதுக்கோட்டையில் முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் வரும் 10-ஆம் தேதி முதல் கலைஞர் கருணாநிதி மாவட்ட விளையாட்டு திடலில் நடைபெற உள்ளது. பல்வேறு பிரிவுகளாக நடைபெறும் இந்த போட்டியில் கலந்து கொள்ள முன்பதிவு செய்தவர்கள் தவறாமல் இப்போட்டிகளில் கலந்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

உரங்களை அதிக விலைக்கு விற்றால் கடும் நடவடிக்கை

image

விவசாயிகளுக்கு வழங்கப்படும் உரங்களின் தரம் குறித்து உர ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொள்ளும் போது, உரங்களை அதிக விலைக்கும், விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மானிய உரங்களை விற்பனை செய்தல், உரம் கடத்தல், பதுக்கல் ஆகிய செயல்களில் ஈடுபடுவது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மீறினால் உர உரிமம் ரத்து செய்யப்படும் என புதுக்கோட்டை வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

News September 7, 2024

புதுக்கோட்டையில் எலுமிச்சை விலை கடும் சரிவு

image

புதுக்கோட்டை மாவட்டத்தின் வடகாடு, மாங்காடு, நெடுவாசல், கீரமங்கலம், செரியலூர், சேந்தன்குடி உள்ளிட்ட பகுதிகளில் எலுமிச்சை அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. ஒரு நாளைக்கு 5-10 டன் முதல் கொள்முதல் செய்யப்படும் நிலையில், வரத்து அதிகரிப்பால் விலை கடுமையாக சரிந்துள்ளது. கிலோ ரூ.100-க்கு விற்பனையான எலுமிச்சை தற்போது 50 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

News September 6, 2024

முதல்வர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் ஆலோசனை

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக்கூட்டரங்கில், தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட அளவில் சிறப்பாக நடத்துவது தொடர்பாக, மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுக் குழு மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்புக் குழு ஆலோசனை கூட்டம், கலெக்டர் அருணா, தலைமையில் இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன், முதன்மைக் கல்வி அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!