Pudukkottai

News March 22, 2024

புதுக்கோட்டை: வலையில் 2500 கிலோ காலா மீன்

image

கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் பகுதியில்
500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் உள்ளன. இதில் தினந்தோறும் ஆயிரத்திற்கும் அதிகமான மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம் அதேபோல் நேற்று முன்தினம் வழக்கம் போல் மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க சென்று விட்டு நேற்று கரைத்திரும்பினர் . அப்போது கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் வலையில் 2,500 கிலோ காலா மீன்கள் சிக்கியிருந்தது.

News March 22, 2024

புதுக்கோட்டை: கிணற்றில் குதித்து பெண் தற்கொலை முயற்சி

image

ஆலங்குடியை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி சத்யா. இவர் குடும்ப பிரச்சினை காரணமாக மனமுடைந்து இருந்து வந்த நிலையில், நேற்று மேலநெம்மக்கோட்டையில்
உள்ள கிணற்றில் சத்யா குதித்து தற்கொலைக்கு முயன்றார்.
இதைப்பார்த்த அருகில் இருந்தவர்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பேரில், தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து சத்தியாவை உயிருடன் மீட்டனர். இதுகுறித்து ஆலங்குடி போலீசார் விசாரணை

News March 22, 2024

புதுக்கோட்டையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பும் பணி!

image

புதுக்கோட்டை ஆட்சியரக வளாகத்திலுள்ள வாக்குப்பதிவு இயந்திரத்தின் பாதுகாப்பு வைப்பறையில் நேற்று மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தலைமையில் 6 சட்டமன்ற தொகுதிகளுக்கும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ளும் கருவி (விவிபேட்) ஒதுக்கீடு செய்து பிரித்து அனுப்பும் பணி நடைபெற்றது. இதில் அங்கிகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

News March 21, 2024

புதுகை அருகே மீன்பிடித் திருவிழா கோலாகலம்

image

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா கொன்னையூர் அருள்மிகு முத்துமாரியம்மன் கோவில் பூ திருவிழா மற்றும் அக்னி பால்குட திருவிழாவை முன்னிட்டு கொன்னைப்பட்டி கொன்னை கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெற்றது. திருவிழாவை முன்னிட்டு சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு கண்மாயில் இறங்கி ஊத்தா தூரி கச்சா இவைகளை பயன்படுத்தி மீன்களைப் பிடித்துச் சென்றனர்.

News March 21, 2024

புதுகையில் ஆட்சியர் அறிவுறுத்தல்

image

மக்களவைத் தேர்தலையொட்டி புதுகையில் உள்ள திருமண மண்டபங்களில் உரிமையாளா்கள் மற்றும் அடகுக்கடை நடத்துவோருடன் மாவட்ட தோ்தல் அலுவலா் ஐ.சா.மொ்சி ரம்யா நேற்று ஆலோசனை நடத்தினாா். தோ்தல் நடத்தை விதிகள் குறித்து அவா் அப்போது பேசியது, திருமண மண்டபங்களில் அரசியல் சாா்ந்த நிகழ்ச்சிகளுக்கு தோ்தல் அலுவலா்களிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா? என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என ஆட்சியர் அறிவித்துள்ளார்.

News March 21, 2024

கறம்பக்குடி வேட்பாளர் அறிவிப்பு 

image

கறம்பக்குடி தாலுக்கா குழந்திரான்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் அதிமுக மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் கருப்பையா, இவர் தற்போது புதுக்கோட்டை நகரில் வசித்து வருகிறார். கருப்பையா அரசு ஒப்பந்ததாரராக அதிமுக ஆட்சி காலத்தில் உருவெடுத்து தற்போது அரசு பணிகளில் ஒப்பந்தம் மூலம் பணிகள் செய்து வருகிறார். தற்போது அதிமுக சார்பில் இன்று திருச்சி திருச்சி மக்களவைத் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

News March 21, 2024

புதுக்கோட்டை அருகே விபத்து; சம்பவ இடத்தில் மரணம் 

image

சிவகங்கை மாவட்டம் கமுதி தாலுகா பங்களா புதுக்குடியை சேர்ந்தவர் சூரியா (21).இவரது நண்பர் சதீஷ்கண்ணன் (21).இருவரும் சிவகங்கை மன்னர் துரைசிங்கம் கல்லூரியில் படித்து வருகின்றனர். நேற்று இருவரும் மோட்டார்சைக்கிளில் புதுக்கோட்டை நோக்கி பைபாஸ் ரோட்டில் சென்றனர்.புதுக்கோட்டையில் இருந்து வந்த லாரி பைபாஸ் ரோடில் இவர்கள் இருசக்கர வண்டி மோதியதில் சூரியா சம்பவ இடத்திலேயே பலியானார்.

News March 21, 2024

புதுக்கோட்டையில் இன்று மழைக்கு வாய்ப்பு

image

அடுத்த மூன்று மணி நேரத்தில் புதுக்கோட்டை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. இந்தத் தகவலை சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. அதனால் புதுக்கோட்டை மாவட்ட மக்களே அதற்கான முன்னேற்பாடுகளை செய்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

News March 21, 2024

புதுக்கோட்டை:அஞ்சல் வாக்குப் பதிவு படிவங்கள் வழங்கல்

image

திருக்கோகா்ணம் அருங்காட்சியகம் அருகில் உள்ள பகுதியில், 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளா்களுக்கு அஞ்சல் வாக்குப் பதிவு செய்வதற்கான படிவங்கள் அவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வழங்கும் பணியை, மாவட்டத் தோ்தல் அலுவலா் ஐ.சா.மொ்சி ரம்யா புதன்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். புதுக்கோட்டை மாவட்டத்தில் 85 வயதுக்கு மேற்பட்டுள்ள 5,417 ஆண் வாக்காளா்களும் , 6,475 பெண் வாக்காளா்கள் உள்ளனர்.

News March 20, 2024

புதுக்கோட்டையில் தேர்தல் விழிப்புணர்வு ராட்சத பலூன்!

image

புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு வாசகங்களை கொண்ட ராட்சத பலூனை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா நேற்று பறக்க விட்டார். தொடர்ந்து நூறு சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தி துண்டுப் பிரசுரங்களை அங்கிருந்த பொதுமக்களிடம் வழங்கினார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, வருவாய்க் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, ஆணையர் சியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!