Pudukkottai

News March 18, 2024

புதுகையில் அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம்

image

ஆட்சியரகத்தில் அரசியல் கட்சிகள் கூட்டத்தில் நேற்று
மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்திருப்பது- சனிக்கிழமை முதல் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்து விட்டதால் நகரில் அரசியல் விளம்பரங்களை 48 மணி நேரத்தில் அகற்ற வேண்டும். தனியார் சுவர் விளம்பரங்களுக்கு அனுமதி கடிதம் வேண்டும். இடையூறு இல்லாமல் கூட்டம் நடத்த வேண்டும். பிரச்சார அனுமதிக்கு 48 மணி நேரம் முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்றார்.

News March 18, 2024

புதுக்கோட்டையில் நூல் வெளியீட்டு விழா!

image

புதுக்கோட்டையில் நேற்று தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத்தின் நகரக் கிளை சார்பில் எழுத்தாளர் சி.பாலையா எழுதிய ‘உறுதி கொண்ட நெஞ்சினாய் வா வா’ என்ற நூல் வெளியீட்டு விழா மூட்டாம்பட்டி ராஜூ தலைமையில் நடைபெற்றது. தமிழ்ச் சங்கத்தின் தலைவர் கவிஞர் தங்கம் மூர்த்தி நூலை வெளியிட்டு பேசினார். நானிலம் ஆசிரியர் மணிமொழி உள்ளிட்டோர் நூலை பெற்றுக் கொண்டனர்.
முன்னதாக நகரச்செயலாளர் அடைக்கலம் வரவேற்றார்.

News March 18, 2024

புதுக்கோட்டை அருகே 10 பேர் சிக்கினர் 

image

வடகாடு அருகே வாணக்கன்காடு முத்துமாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல்விழா நேற்று நடைபெற்றது. விழாவில் போலீசார் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு காளைகளை அவிழ்த்து விட்டதாக, கருக்காகுறிச்சி பகுதியை சேர்ந்த சுந்தர்ராஜன், ராஜேஷ், ராம்குமார்,அஜித், ஷீதரன் , வீரையா,குணா, பாலு, பாஸ்கர், தியாகராஜ் ஆகிய 10 பேர் மீது வடகாடு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

News March 18, 2024

புதுக்கோட்டை அருகே கோவில் திருவிழா 

image

பொன்னமராவதி அருகே கொன்னையூர் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. ஆண்டு தோறும் பங்குனியில் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும், ஊர்வலமாகவும் பூத்தட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.

News March 17, 2024

புதுகை அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம்

image

இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

News March 17, 2024

புதுகை வனப்பகுதிகளில் தீத் தடுப்பு அவசியம்

image

புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதிகளில் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பும் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அவசியம் என தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று(மார்ச்.16) நடைபெற்ற  வனப்பகுதிகளில் தீ கட்டுப்படுத்துதல் தொடா்பான அனைத்துத்துறை அலுவலா்களை கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.

News March 17, 2024

புதுகை: வீடுகளை தேடி பாஜகவினர் பிரச்சாரம்

image

புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பயனடைந்த பொதுமக்களின் பட்டியலுடன் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி. கணேசன் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் ஆகிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.

News March 17, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் ரூ 51.25 கோடியில் சாலைப் பணிகள்!

image

புதுக்கோட்டை அருகே நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேப்பரை பகுதியில் ரூ 38 கோடியில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலை, திருவரங்குளத்தில் ரூ 4.48 கோடியில், வடகாடு பகுதியில் ரூ 7.77 கோடியில், புதுக்கோட்டை ஆவணம் சாலை ரூ 51.21 கோடியிலுமான ரூ 51.25 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளையும், கொத்தமங்கலம் ஊராட்சியில்
ரூ 13.50 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.

News March 17, 2024

புதுக்கோட்டை: எம்எல்ஏ அலுவலகங்களுக்கு சீல் 

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.

News March 17, 2024

புதுகை மக்களே இந்த எண்ணை தொடர்பு கொள்ளவும்

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏற்கனவே 1950 டோல் ஃப்ரீ என் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 18004252735 டோல் ஃப்ரீ எண்ணுக்கும் அதேபோல் லேண்ட்லைன் நம்பரான 04322-229860, 229870, 229880 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.

error: Content is protected !!