India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொன்னமராவதி அருகே கொன்னையூர் பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. ஆண்டு தோறும் பங்குனியில் நடைபெறும் இவ்விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அலங்கரிக்கப்பட்ட வாகனங்களிலும், ஊர்வலமாகவும் பூத்தட்டு, பால்குடம், முளைப்பாரி எடுத்து வந்து அம்மனுக்கு சாத்தி வழிபட்டனர். அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதுக்கோட்டை, திருமயம், பொன்னமராவதி உள்பட பல்வேறு ஊர்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் பாராளுமன்ற பொதுத்தேர்தல் 2024 தொடர்பாக தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து அரசு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான மெர்சி ரம்யா தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை மாவட்ட வனப்பகுதிகளில் தீ விபத்துகளைக் கட்டுப்படுத்த அனைத்துத்துறை அலுவலர்களின் ஒத்துழைப்பும் மாவட்ட ஆட்சியா் ஐ.சா. மொ்சி ரம்யா அவசியம் என தெரிவித்தார். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் நேற்று(மார்ச்.16) நடைபெற்ற வனப்பகுதிகளில் தீ கட்டுப்படுத்துதல் தொடா்பான அனைத்துத்துறை அலுவலா்களை கொண்ட ஆலோசனைக் கூட்டத்தில் அவா் பேசி உள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுக்கோட்டையில் பாரதிய ஜனதா கட்சியினர் மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட திட்டங்களில் பயனடைந்த பொதுமக்களின் பட்டியலுடன் ஒவ்வொருவரின் வீடுகளுக்கும் சென்று பாஜகவினர் பிரச்சாரம் மேற்கொண்டனர். புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஏவிசிசி. கணேசன் பிரச்சாரத்தை துவங்கி வைத்தார், தரவு மேலாண்மை பிரிவு மாநில செயலாளர் கார்த்திகேயன் ஆகிய கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.
புதுக்கோட்டை அருகே நேற்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் கேப்பரை பகுதியில் ரூ 38 கோடியில் புதுக்கோட்டை அறந்தாங்கி சாலை, திருவரங்குளத்தில் ரூ 4.48 கோடியில், வடகாடு பகுதியில் ரூ 7.77 கோடியில், புதுக்கோட்டை ஆவணம் சாலை ரூ 51.21 கோடியிலுமான ரூ 51.25 கோடி மதிப்பிலான சாலைப் பணிகளையும், கொத்தமங்கலம் ஊராட்சியில்
ரூ 13.50 இலட்சத்தில் ஆழ்குழாய் கிணறு அமைக்கும் பணியையும் தொடங்கி வைத்தார்.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா கூறியிருப்பது, மக்களவைத் தேர்தல் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. அதனால் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகளுக்கு கோட்டாட்சியரிடம் அனுமதி பெற வேண்டும் என்றார். மேலும் புதுக்கோட்டையிலுள்ள எம்எல்ஏ அலுவலகத்தை தேர்தல் அலுவலர்கள் நேற்று பூட்டி சீல் வைத்தனர். அதைபோல் மாவட்டத்திலுள்ள அனைத்து எம்எல்ஏ அலுவலகங்களும் மூடப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, தேர்தல் தொடர்பான புகார்களை தெரிவிக்க ஏற்கனவே 1950 டோல் ஃப்ரீ என் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் 18004252735 டோல் ஃப்ரீ எண்ணுக்கும் அதேபோல் லேண்ட்லைன் நம்பரான 04322-229860, 229870, 229880 என்ற எண்ணிற்கும் புகார் தெரிவிக்கலாம் என தெரிவித்தார்.
கொப்பனாபட்டி அரசு உதவி பெறும் நாராயணன் செட்டியார் அரசுப்பள்ளியில் இன்று வனத்துறை , தீயணைப்பு, மருத்துவதுறை மற்றும் ஸ்டெப் அறக்கட்டளை சார்பில் கலை நிகழ்ச்சிகளுடன் வனத் மேலாண்மை விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு வனச்சரக அலுவலர் ராமநாதன் தலைமை வகித்தார்.பொன்னமராவதி தீயணைப்பு துறை நிலைய அலுவலர் மணிகண்டன், ஸ்டெப் அறக்கட்டளை இயக்குனர் பசுமை பாரதி உள்ளிட்டோர் உள்ளனர்.
விராலிமலை தனியார் பள்ளி பின்புறம் உள்ள குளக்கரையில் இருந்த செடி, கொடிகள் இன்று காலை (மார்ச்.16) தீப்பிடித்து எரிந்தது.இதனை கண்ட அப்பகுதியினர் இதுகுறித்து இலுப்பூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.பின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த இலுப்பூர் தீயணைப்பு நிலைய அலுவலர் மகேந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்தனர்.
மன்னராட்சிக் காலத்தில் நகரமைப்புக்குப் பெயா்போன நூற்றாண்டு கண்ட புதுக்கோட்டை நகராட்சி ஏறத்தாழ முழுமையாகப் பாழ்பட்டுப் போயிருக்கும் சூழலில்,மாநகராட்சியாகத் தரம் உயா்த்தப்பட்ட அறிவிப்பு மக்களிடம் ஏராளமான எதிா்பாா்ப்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறது.திட்டத்தை விரிவாக்க ரூ. 90 கோடிக்கு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.நகர விரிவாக்கத்துக்குப் பிறகு பெருந்தொகையுடன் சிறப்புத் திட்டம் தேவை.
Sorry, no posts matched your criteria.