India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட கீழ 4ம் வீதி தென்புறம் அமைந்திருக்கும் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவை விழாவை முன்னிட்டு இன்று (மார்ச்.31) நடைபெற்ற அன்னதான நிகழ்வினை புதுக்கோட்டை எம்எல்ஏ வை. முத்துராஜா துவக்கி வைத்து சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் மேயர் திலகவதி செந்தில், துணை மேயர் லியாக்கத் அலி, நகர்மன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் உடன் இருந்தனர்.
ராமநாதபுரம் தொகுதி வேட்பாளர் ஓபிஎஸ் மீது அறந்தாங்கி காவல்நிலையத்தில் 3 பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில் பெண்கள் ஆரத்தி எடுத்துபோது ஓபிஎஸ் பணம் வழங்கியதாக புகார் எழுந்தது. மேலும், அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு முன்பாகவே கூட்டம் நடத்தியது உள்ளிட்ட காரணங்களால் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
புதுக்கோட்டை நகர் மன்றத்தில் திருச்சி பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி மற்றும் கந்தர்வகோட்டை சட்டமன்ற தொகுதியில் வாக்குச்சாவடி தலைமை அலுவலர் மற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா இன்று தொடங்கி வைத்தார். அருகில் வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா உள்ளிட்ட அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை மக்களவையின் கீழ் வரும் அறந்தாங்கி பகுதியில் இன்று ஓபிஎஸ் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, ஆரத்தி எடுத்து வரவேற்ற பெண்ணுக்கு ஓபிஎஸ் பணம் கொடுத்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேர்தல் கண்காணிப்பு அலுவலர் அருண் அறந்தாங்கி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.அதேபோல், மாஜி அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்த நேரத்திற்கு முன்பாக கூட்டம் நடத்தியதாகவும் புகார் அளிக்கப்பட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரவின்படி, திருமயம் வட்டம் லேனா விளக்கு அருகில், பாராளுமன்ற பொதுத் தேர்தல் 2024 தொடர்பாக, 31-சிவகங்கை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட, 181-திருமயம் சட்டமன்ற தொகுதியில், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும்படை குழுவினர்களின் பணிகளை, மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா நேற்று நேரில் பார்வையிட்டார்.
மோடியின் ஆதிக்கத்தில் இருந்து நாடு விடுபட இந்தியா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் இந்தியா கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். நமக்கு சர்வாதிகாரம் தேவையில்லை என்றும் ஜனநாயகம்தான் தேவை என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
காட்டுப்பட்டியில் 100க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றனர்.இங்கு விவசாயம், கால்நடை வளர்ப்பு பிரதான தொழிலாக உள்ளது.
பல ஆண்டுகளாக கிராமத்தில் அடிப்படை வசதிகள் இல்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. அடிப்படை வசதிகள் செய்து தராததால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்கப் போவதாகவும், அரசியல் கட்சியினர் யாரும் ஓட்டு கேட்டு வரவேண்டாம் என இன்று நோட்டீஸ் வெளியிடபட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அடுத்த வடுகப்பட்டி பகுதியில் உள்ள உதய பாரதி என்பவருக்கு சொந்தமான 60 அடி ஆழம் உள்ள கிணற்றில் தவறி விழுந்த தேசிய பறவையான மயில் அதைப்பார்த்த கிராம மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்ததன் அடிப்படையில் அவர்கள் மயிலை பத்திரமாக மீட்டு வனத்துறையில் விட்ட கந்தர்வகோட்டை தீயணைப்பு துறையினர்..
புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே தனிப்படை போலீசார் நேற்று மாலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பொன்னாங்கண்ணப்பட்டி கிராமத்தை சேர்ந்த சிவசுப்பிரமணியன்
என்பவர் மளிகை கடையில்
புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து போலீசார்
சிவசுப்பிரமணியனை கைது செய்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இரும்பாளியை சேர்ந்தவர் ஆரோக்கியசாமி, இவருக்கு சொந்தமான வைக்கோல் போரில் நேற்று மார்ச் 28-ந்தேதி மாலை திடிரென தீ பிடித்தது. பின்னர் மலமலவென பிடித்த தீயினால் வைக்கோல் போர் கொழுந்துவிட்டு எரிய தொடங்கியது. இதனையடுத்து அருகில் இருந்தவர்கள் உடனடியாக சிப்காட் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர். பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத்துறையினா் போராடி தீயை அணைத்தனர்
Sorry, no posts matched your criteria.