India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
தனியார் பள்ளி பேருந்தில் மாணவர்களுக்கு ஏற்படும் பாலியல் தொல்லையை தடுக்க வழிகாட்டு நெறிமுறைகளை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது.அதில்,பள்ளியில் மாணவர் மனசு பெட்டி வைக்கப்பட்டு அதில் பெறப்படும் குறைகளை 24 மணி நேரத்தில் தீர்க்க வேண்டும். ஓட்டுநருக்கு போக்ஸோ சட்டம் குறித்து பயிற்சி வழங்க வேண்டும். ஓட்டுநர், உதவியாளர்கள் குறித்த விவரங்களை EMIS Portalஇல் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் தொடா்பான புகாா்களை இந்திய தோ்தல் ஆணையத்தின் சி-விஜில் என்ற செயலி மூலம் தெரிவிக்கலாம் என மாவட்டத் தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ஐ.சா. மொ்சி ரம்யா அழைப்பு விடுத்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டத்தில் தோ்தல் நடத்தை விதிமீறல்கள் குறித்த புகாா்களை பொதுமக்கள் தங்களின் கைப்பேசி வாயிலாக செயலி மூலம் தெரிவிக்கலாம் என கூறினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் மொத்தம் 13.45 லட்சம் வாக்காளா்கள் உள்ளனா் என ஆட்சியா் ஐ.எஸ்.மொ்சி ரம்யா தெரிவித்துள்ளாா். இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கடந்த ஜன.22-ஆம் தேதி வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு தோ்தல் அறிவிப்பு வரும் வரையிலும் வாக்காளா் சோ்க்கை மற்றும் நீக்கும் பணிகள் நடைபெற்றன.இதன்படி,புதிதாக 10,806 வாக்காளா்கள் சோ்க்கப்பட்டனா்.
கறம்பக்குடி அருகேயுள்ள வாணக்கன்காடு சோ்ந்த கோ.மூக்கன் இவரது மனைவி ஜீவிதா இவா்களுக்கு ஒரு மகன், இரு மகள்கள் உள்ளனா். தம்பதியினரிடையே அடிக்கடி குடும்பத் தகராறு காரணமாக நேற்று இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில்,மூக்கன் கட்டையால் தாக்கியதில் ஜீவிதா பலத்த காயமடைந்தாா். மயங்கிய நிலையில் அருகில் இருந்தவா்கள் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஜீவிதா உயிரிழந்தார்.
புதுக்கோட்டை நகராட்சி அடப்பன் வயல் பகுதியில் திருச்சி எம்பி தொகுதிக்குட்பட்ட புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வாக்காளர்களுக்கு வீட்டிற்கு நேரடியாக சென்று வாக்காளர் தகவல் சீட்டு (பூத் சிலிப்) வழங்கும் பணியினை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தொடங்கி வைத்தார். இதில் புதுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஐஸ்வர்யா, மக்கள் தொடர்பு அலுவலர் பிரேமலதா, வட்டாட்சியர் பரணி, ஆணையர் ஷியாமளா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கொன்னையூா் முத்துமாரியம்மன் கோவிலில் கடந்தமாா்ச் 24ஆம் தேதி காப்பு கட்டப்பட்டு, தினமும் மண்டகப்படிதாரர்கள் சாா்பில் சிறப்பு வழிபாடு மற்றும் அம்மன் வீதியுலா நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று அம்மன் வீதியுலாவின் போது இரு புறமும் ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் வரிசையாக நின்று சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இன்று(ஏப்.3)வெயிலின் அளவு 27 டிகிரி செல்சியஸ் முதல் 40 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரத்தில் 23 முதல் 36 மற்றும் 37 வரை இருந்து வந்த வெப்பநிலை தற்போது 3 டிகிரி செல்சியஸ் வரை உயர்ந்துள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஸ்வரன் தேசிய அளவில் நேற்று நடந்த பாரா ஒலிம்பிக் பவர் லிப்டிங் போட்டியில் 72 கிலோ எடை பிரிவில் தங்கப் பதக்கமும், மூன்று லட்சம் ரூபாய் ரொக்க பரிசும் வென்று சாதனை படைத்துள்ளார். இதனைத்தொடர்ந்து, மாணவனை ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் பாராட்டினர்.
“புதுக்கோட்டை மாவட்டத்தில் 100 சதவிகிதம் வாக்குப்பதிவுக்கான விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் திருநங்கை வாக்காளர்களின் விழிப்புணா்வு நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியை மாவட்ட வருவாய் அலுவலா் மா.செல்வி தொடங்கி வைத்தாா். இதில் வருவாய்க் கோட்டாட்சியா் பா. ஐஸ்வா்யா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
புதுக்கோட்டை மாவட்டம், சிவகங்கை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அரிமளம் ஒன்றியம், கல்லூர் ஊராட்சி, சுதந்திரமும் கிராம மக்கள் வரும் மக்களவைத் தேர்தலை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். கிராம பகுதிகளில் பல வகையான அடிப்படை வசதிகள் இன்றி சிரமப்படுவதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும், பேனர் வைத்து தேர்தலில் மக்கள் வாக்களிக்கப் போவதில்லை என தெரிவித்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
Sorry, no posts matched your criteria.