Pudukkottai

News June 23, 2024

புத்தகத் திருவிழா பிரசாரம்: அறிவியல் இயக்கம் முடிவு

image

புதுக்கோட்டையில் வரும் ஜூலை 27 முதல் ஆக 5 வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழா குறித்த தகவல்கள் மற்றும் புத்தக தேவை பற்றியான விழிப்புணர்வ்வை மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் அனைத்து ஒன்றியங்களிலும் இன்று முதல் பிரசாரப் பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அறிவியல் இயக்கம் முடிவு செய்துள்ளது.புதுக்கோட்டையில் நடைபெற்ற அறிவியல் இயக்கத்தின் மாவட்டச் செயற்குழுக் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது.

News June 23, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடமாற்றம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பிறப்பித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்க உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நாளை (ஜூன் 24) பணிபுரிய உள்ளனர். புதுகை, திருமயம், அறந்தாங்கி, விராலிமலை, அண்ணாவாசல், கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் பணியாற்ற உள்ளனர்.

News June 22, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் இடமாற்றம்

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் 20 வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா பிறப்பித்துள்ளார்.புதிதாக பொறுப்பேற்க உள்ள வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வரும் திங்கட்கிழமை (24-06-2024) பணிபுரிய உள்ளனர். புதுகை, திருமயம், அறந்தாங்கி, விராலிமலை, அண்ணாவாசல், கந்தர்வகோட்டை, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, திருவரங்குளம் ஆகிய பகுதிகளில் பணியாற்ற உள்ளனர்.

News June 22, 2024

புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை!

image

தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று (ஜூன் 22) தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதன்படி, புதுக்கோட்டை உள்ளிட்ட 22 மாவட்டங்களுக்கு இரவு 7 மணி வரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது .

News June 22, 2024

புதுக்கோட்டையில் ஊர்வலம்

image

தமிழகத்தையே உலுக்கிய கள்ளச்சாராயம் சம்பவத்தால் 55 பேர் பலியானதை எதிர்த்து இன்று காவல்துறையை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் புதுக்கோட்டையில் ஊர்வலத்தில் ஈடுபட்டுள்ளனர். கள்ளக்குறிச்சியில் 180க்கும் அதிகமாக கள்ள சாராயம் குடித்து அடுத்தடுத்து உயிர் சேதம் அதிகமாக போய் கொண்டு இருப்பதால் இந்த ஊர்வலம் நடைபெற்று வருகிறது.

News June 22, 2024

புதுக்கோட்டை அருகே 14 பேர் மீது வழக்கு

image

ஆலங்குடி கடைவீதியில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வந்தது. இதற்கிடையே கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பணிக்காக இந்த கடை மூடப்பட்டது. இந்த நிலையில் சிலர் ஆலங்குடியில் மூடப்பட்ட டாஸ்மாக் கடையை மீண்டும் திறக்க வேண்டும். என நேற்று முன்தினம் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, பொது மக்களுக்கு இடையூறாக சாலை மறியலில் ஈடுபட்ட தி.மு.க.பிரமுகர் முத்து உள்பட 14 பேர் மீது ஆலங்குடி போலீசார் வழக்குபதிவு செய்தனர்

News June 22, 2024

புதுக்கோட்டை அருகே பாஜக சார்பில் யோகாசனம்

image

கறம்பக்குடி அருகே ரெகுநாதபுரம் முருகன் கோயில் திடலில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு கறம்பக்குடி வடக்கு ஒன்றிய பாஜக சார்பில் வடக்கு ஒன்றிய தலைவர் பாலசுப்பிரமணியன் தலைமையில் யோகாசனம் பயிற்சி நடைபெற்றது. இதில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பங்கேற்று யோகாசனம் செய்து பயனடைந்தனர்.

News June 21, 2024

புதுக்கோட்டை கலெக்டர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் வருகின்ற ஜூன் 28ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 10.30 மணிக்கு விவசாயிகள் குறை கேட்புக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அனைத்துதுறை உயர் அலுவலர்களும் பங்கேற்க உள்ளதால் விவசாயிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்களின் விவசாயம் சார்ந்த கோரிக்கைகளைத் தெரிவித்து பயன் பெறலாம் என மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

News June 21, 2024

புதுக்கோட்டை ஆட்சியர் முக்கிய அறிவிப்பு

image

புதுக்கோட்டை மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு, தனியார்துறையில் பணியமர்த்த செய்யும் நோக்கத்தோடு சிறிய அளவிளான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் இன்று காலை 10 மணியளவில் புதுகை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இத்தகவலை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.

News June 20, 2024

புதுகை: மது விற்பனை குறித்த ஆய்வு கூட்டம்!

image

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில், சட்ட விரோதமாக மது விற்பனை மற்றும் மது அருந்துதல் குறித்து, சிறப்பு ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் இன்று நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வந்திதா பாண்டே, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முருகேசன் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் பங்கேற்றனர்.

error: Content is protected !!