India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி சுகாதாரத்துறை சிறப்பு பணி அதிகாரி மேரி ஜோசப்பின் சித்ரா நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் நர்சிங் ஆபிசர் பணியிடங்களை நிரப்புவதற்கான வரைவு நியமன விதிகள் வெளியிடப்பட்டுள்ளது அதன்படி பணியில் சேர 30 வயதுக்கு மேல் இருக்கக் கூடாது பிஎஸ்சி நர்சிங் படித்து நர்சிங் கவுன்சிலிங்கில் பதிவு செய்திருக்க வேண்டும் 100% நேரடி நியமனம் மூலமே நடைபெறும் என்று அவர் தெரிவித்துள்ளார்
கடலூரை சேர்ந்த துரைசாமி என்பவருக்கு நெட்டப்பாக்கம் பகுதியில் ஏராளமான விவசாய நிலம் உள்ளது. விவசாய நிலம் இருப்பதைப் பயன்படுத்தி, புதுச்சேரியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை ரூ. 1,40,700 உதவித்தொகை பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக துறை இயக்குநர் முத்துமீனா கோரிமேடு போலீசில் புகார் அளித்தார். போலீசார் நேற்று துரைசாமி மீது மோசடி வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
புதுச்சேரி நகராட்சி பகுதிகளில், பொதுமக்களுக்கு இடை யூறு செய்யும் வகையில் வைத்துள்ள பேனர்கள், கட்அவுட்களை அகற்ற ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், கட் அவுட், பேனர்கள், கொடிக்கம்பங்கள் வைத்துள்ளவர்கள் தானாக முன் வந்து, அகற்றி கொள்ள வேண்டும் என கலெக்டர் குலோத்துங்கன் தெரிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சுற்றுலாத்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனை சட்டப்பேரவையில் இன்று சந்தித்த இயக்குனர் பார்த்திபன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், திமுக அரசை விஜய் கடுமையாக விமர்சனம் செய்தாலும் அவர் செல்லும் பாதை சரியானது என்று தெரிவித்தார். பெரியார் என்றும் பெரியார் தான் அவரைப் பற்றி தெரியாதவர்கள் கூறும் கருத்துக்கு பதில் சொல்லத் தேவையில்லை என்றும் விளக்கம் அளித்தார்.
புதுச்சேரி எதிர்க்கட்சி தலைவர் சிவா இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இலங்கை இராணுவத்தினர் காரைக்கால் மீனவர்களை தாக்கி, துப்பாக்கி சூடு நடத்தி படகுடன் கைது செய்துள்ளனர். புதுவை முதல்வர் கடிதம் எழுதுவது, தொலைபேசியில் பேசுவதெல்லாம் கண்துடைப்பு, ஒன்றிய அரசின் மெத்தனத்திற்கு, முதல்வர் கண்டனம் தெரிவிக்க வேண்டும். மீனவ பெண்களின் கண்ணீருக்கு முதல்வர் பதில் சொல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
புதுவை அரியாங்குப்பம் சிவலிங்கபுரம் காந்தி வீதியை சேர்ந்த சிவனேசன் மனைவி பிரபாவதி இவருக்கும் பக்கத்து வீட்டை சேர்ந்த ஞானசேகரன் குடும்பத்துக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் பிரபாவதி வளர்த்து வந்த 2 நாய்கள் உணவில் விஷம் வைத்து சாகடிக்கப்பட்டன. இதற்கு ஞானசேகரன் குடும்பம் காரணம் என்று அரியாங்குப்பம் போலீசில் பிரபாவதி புகார் அளித்தார். போலீசார் நேற்று வழக்கு பதிந்தனர்.
புதுச்சேரி நகராட்சி ஆணையர் கந்தசாமி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் புதுச்சேரி நகராட்சிக்கு 2024-25ம் ஆண்டு வரை செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் திடக்கழிவு அகற்றும் கட்டணத்தை உடனே செலுத்தி, வட்டி மற்றும் ஜப்தி நடவடிக்கையை தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.நெல்லித்தோப்பு முதலியார் பேட்டை ஆகிய 4 இடங்களில் கணினி சொத்துவரி வசூல் மையங்கள் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை செலுத்தலாம்.
புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவல் துறை, பொதுப்பணித்துறை, தீயணைப்புத் துறை, மின்துறை உள்ளிட்ட பல அரசுத் துறைகளில் சுமார் 2,098 காலிபணியிடங்கள் நேரடித் தேர்வுகள் மூலம் நேர்மையாகவும் வெளிப்படையாகவும் நிரப்பப்பட்டுள்ளன என்று புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தெரிவித்துள்ளார்.
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளரும் ஆகிய அஜூய் குமார்.பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள புதுச்சேரிக்கு வருகை தந்துள்ளார்.அவரை மறைந்த முன்னாள் அமைச்சர் கண்ணன் அவரது மகனும் காங்கிரஸ் நிர்வாகியும் ஆன விக்னேஷ் கண்ணன் மரியாதை நிமித்தமாக சந்தித்து நினைவு பரிசு வழங்கினார்.உடன் மு.முதல்வர் நாராயணசாமி.நிர்வாகிகள் உடனிருந்தனர்.
வில்லியனூர் அருகே உள்ள பங்கூர் ஏரி கரையில் கஞ்சா விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் படி போலீசார் அங்கு விரைந்து சென்றனர் அப்போது அங்கிருந்த சிலர் தப்பி ஓட முயன்ற சிலரை சுற்றி வளைத்து கைது செய்தனர் அவர்களிடமிருந்து 11 பாக்கெட் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது விசாரணையில் கவியரசன் நிஷாந்த் ரியாஸ் அகமது ராகதேவன் ஜெயகாந்தன் ஹேமச்சந்திரன் ஆகியோரை போலீசார் நேற்று கைது செய்தனர்
Sorry, no posts matched your criteria.