India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
15-வது புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியை செயலாளர் ஜ. தயாளன் இன்று (ஜன.31) தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி தனியார் பள்ளிகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சில தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வகுப்புகளை நடத்துவதாகவும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடப்பதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. எந்த தனியார் பள்ளியும் எந்த ஒரு வேலை நாளிலும் மாலை 6:00 மணிக்கு மேல் கல்வி அல்லது சாராத வகுப்புகளை நடத்தக்கூடாது என்றார்.
புதுவை ஜிப்மரில் மருத்துவ தொழில்நுட்ப வல்லுனர், சவக்கிடங்கு உதவியாளர் உள்ளிட்ட சான்றிதழ் படிப்புக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கு படிப்பு காலத்தில் மாதம் ரூ.300, பயிற்சி காலத்தில் மாதம் ரூ.3713 வழங்கப்படும். இதற்கான விண்ணப்பங்களை வரும் பிப் 8 ஆம் தேதி மாலை 4:30க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் நேர்காணல் 13ஆம் தேதி காலை நடைபெறும் என மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் நாளை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பு, ஆதிதிராவிடா், பழங்குடியினருக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், நவயுகா ஆலோசனை சேவை மையம் ஆகியவை இணைந்து நாளை (பிப்.1) புதுச்சேரி நடேசன் நகா் 3-ஆவது குறுக்குத் தெருவில் உள்ள வாழ்வாதார சேவை மையத்தில் காலை 9 மணி முதல் 1 மணி வரை தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமை நடைபெறுகிறது.
புதுச்சேரியில் மாடலிங் செய்கின்ற இளம் பெண்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் FACK ID மூலமாக அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டிய, சென்னை தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பட்டதாரி வாலிபர் ரூபசந்திரன் (25) என்பவர் புதுச்சேரி இணையவழி போலீசார் நேற்று கைது செய்தனர்.
10 ஆண்டுகளுக்கு பின்னர் புதுச்சேரியில் தலைமை ஆசிரியர்களுக்குபதவி உயர்வு வழங்கப்பட்டதற்கான ஆணை வழங்கும் விழா இன்று கல்வித்துறை அலுவலகத்தில் நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் ரங்கசாமி, கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம் ஆகியோர் கலந்து கொண்டு பதவி உயர்வுக்கான ஆணையை வழங்கினார். அப்போது கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி உள்ளிட்ட அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்.
புதுச்சேரியில் மாடலிங் செய்கின்ற இளம் பெண்களுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து புகைப்படங்களை எடுத்து, மார்பிங் செய்து இன்ஸ்டாகிராம் fack ID ஐடி மூலமாக அதே பெண்களுக்கு அனுப்பி மிரட்டிய சென்னை தனியார் நிறுவனத்தில் மேலாளராக பணி புரியும் பட்டதாரி வாலிபர் ரூபசந்திரன் என்பவரை புதுச்சேரி இணையவழி போலீசார் இன்று கைது செய்தனர்.
புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில் 36 வது சாலை பாதுகாப்பு மாத நிறைவு விழா இன்று (ஜன.30) கம்பன் கலையரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் சிறப்பாக செயல்பட்ட காவலர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் மற்றும் அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி போக்குவரத்து துறை சார்பில், 36-வது சாலை பாதுகாப்பு மாதம் நிறைவு விழா கம்பன் கலையரங்கில் இன்று (ஜன.30) நடைபெற்றது. விழாவில் பேசிய முதல்வர் ரங்கசாமி சிறிய மாநிலமான புதுச்சேரியில் சாலை விபத்தில் ஆண்டுக்கு 200 பேர் பலியாகின்றனர். சாலை விபத்துகளை குறைக்க போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். போக்குவரத்து நெரிசலை குறைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
புதுச்சேரி அரசு சார்பு செயலர் ஜெய்சங்கர் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றி வரும் மேல்நிலை எழுத்தர்கள் எட்டு பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் அதன்படி விஜயன் பொதுப்பணி துறையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கும்ரோகினி சட்டத்துறையில் இருந்து தலைமைச் செயலகத்திற்கும்புவனேஷ் வணிகவரித் துறையில் இருந்து சட்டத்துறைக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்
Sorry, no posts matched your criteria.