India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுவை ஏம்பலம் அடுத்த கம்பிளிகாரன்குப்பம் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த வெங்கடேசன் இவர் நேற்று (பிப்.03) வீட்டு எதிரில் படுத்துக் கொண்டிருந்தார். அவரை அவரது மகள் பியுலா திட்டிக் கொண்டிருந்தார். அதனை வேடிக்கை பார்த்த பக்கத்து வீட்டைச் சேர்ந்த 4 சிறுவர்களை, வெங்கடேசன் அவதூராக திட்டி கல்லால் தாக்கினார் என்று கூறப்பட்ட புகாரின்படி கரிக்கலாம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி, நவமால்காப்பேரை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த ஓராண்டுகளுக்கு மேலாக எல்லைபிள்ளைச்சாவடியை சேர்ந்த பிரதாப் என்பவரின் வீட்டில் கார் ஓட்டி வந்தார். நேற்று (பிப்.1) காலை பணியில் இருந்த போது, திடீரென காரிலேயே சரவணன் மயங்கி விழுந்தார். அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரி காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. (பிப்.1) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மத்திய நிதிநிலை அறிக்கையில் புதுவை மாநிலம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. புதுவைக்கான முன்னேற்றத்துக்கு எந்தவித நிதியுதவியையும் வழங்கவில்லை. சுற்றுலாவில் புதுவை மாநிலம் மேம்பட்டு வருவதாகக் கூறும் நிலையில், ரயில், விமான நிலைய விரிவாக்கத்துக்கான சிறப்புத் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றார்.
மத்திய நிதியமைச்சர் தாக்கல் செய்துள்ள 2025-26ஆம் பட்ஜெட் மக்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்து, நாட்டின் வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வதற்கான பிரதமர் மோடி எண்ணங்களுக்கு செயல் வடிவம் கொடுப்பதை உறுதிப்படுத்துவதாக அமைந்துள்ளது. குறிப்பாக, முதுகெலும்பான வேளாண் துறைக்கு முக்கியத்துவம் அளித்து விவசாய உற்பத்தித்திறனை மேம்படுத்தும் பட்ஜெட் என புதுவை முதலமைச்சர் ரங்கசாமி பாராட்டியுள்ளார்.
புதுச்சேரியில் இன்று மத்திய பட்ஜெட் குறித்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி மாகாலட்சுமி ஆசிர்வாதம் ஒரு சதவீதம் மட்டுமே கிடைத்துள்ளது. மீதி உள்ள 99 சதவீதமும் ஏமாற்றம்தான். தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டால் புதுவைக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. புதுச்சேரி காரைக்காலுக்கு புதிய ரயில் திட்டங்கள் அறிவிக்கப்படவில்லை என்றார்.
புதுச்சேரி உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் நேற்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், நகராட்சி உரிமம் பெறாமல் அல்லது உரிமத்தை புதுப்பிக்காமல் வர்த்தகம் செய்பவர்கள் வருகிற 28ஆம் தேதிக்குள் உரிமம் பெற வேண்டும், ஏற்கனவே உரிமம் உள்ளவர்கள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் தவறும் பட்சத்தில் வர்த்தக உரிமம் இல்லாமல் இயங்கும் வியாபார நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
புதுவை பொதுப்பணித் துறையில் 112 பல்நோக்குப் பணியாளா்களுக்கு பதவி உயா்வுக்கான உத்தரவை முதல்வா் நேற்று வழங்கினாா். பொதுப் பணித் துறையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் 112 பல்நோக்குப் பணியாளா்கள் பதவி உயா்வு கோரி முதல்வரிடம் மனு அளித்தனா். அதன்படி, முதல்வா் உத்தரவின்படி பணி ஆய்வாளா்கள் 61 போ், மெக்கானிக் 51 போ் என பதவி உயா்வு அளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
புதுச்சேரி நிர்வாக சீர்த்திருத்த துறை சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர் மற்றும் தீயணைப்பு வாகன ஓட்டுநர் நிலை – 3 பணியிடத்திற்கான தேர்வு வரும் 9 ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்விற்கான ஹால்டிக்கெட்டினை htpps://recuitment.py.gov.in என்ற இணையதளத்தில் இன்று (ஜன.31) முதல் பதிவிறக்கம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. SHARE NOW!
15-வது புதுச்சேரி மாநிலத்தில் சட்டப்பேரவையின் ஐந்தாவது கூட்டத்தொடரின் இரண்டாவது பகுதி, 2025 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி புதன்கிழமை காலை 09.30 மணிக்கு சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள பேரவைக் கூடத்தில் கூடும் என்று சட்டப்பேரவைத் தலைவர் செல்வம் அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார் என்ற செய்தியை செயலாளர் ஜ. தயாளன் இன்று (ஜன.31) தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி பள்ளி கல்வித் துறை இயக்குநர் பிரியதர்ஷினி தனியார் பள்ளிகளுக்கு நேற்று அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், சில தனியார் பள்ளிகள் அனுமதிக்கப்பட்ட நேரத்திற்கு மேல் வகுப்புகளை நடத்துவதாகவும், வார இறுதி விடுமுறை நாட்களிலும் வகுப்புகள் நடப்பதாகவும் அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. எந்த தனியார் பள்ளியும் எந்த ஒரு வேலை நாளிலும் மாலை 6:00 மணிக்கு மேல் கல்வி அல்லது சாராத வகுப்புகளை நடத்தக்கூடாது என்றார்.
Sorry, no posts matched your criteria.