Pondicherry

News February 8, 2025

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் கைது

image

காரைக்கால் மீனவர்கள் கைது சம்பவம், பட்ஜெட்டில் புதுச்சேரி புறக்கணிக்கப்பட்டுள்ளதை கண்டித்து சட்டமன்றம் அருகே முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் இன்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத்திய, மாநில அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பி ஆளுநர் மாளிகை நோக்கி ஊர்வலமாக சென்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி முன்னாள் முதல்வர் உள்ளிட்ட காங் கட்சியினரை கைது செய்தனர்.

News February 8, 2025

புதுவை முன்னாள் முதல்வர் காட்டம் 

image

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே மத்திய மாநில அரசுகளை கண்டித்து காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது பேசிய முன்னாள் முதல்வர் நாராயணசாமி மத்திய பட்ஜெட்டில் புதுச்சேரி முழுமையாக வஞ்சிக்கப்படுகிறது. இந்த பட்ஜெட்டை முதல்வர் ரங்கசாமி பாராட்டி பேசுகிறார், நாற்காலி மட்டுமே முக்கியம், நாற்காலிக்காக கட்சியை கூட கலைப்பார் என்று கடுமையாக விமர்சனம் செய்தார்.

News February 8, 2025

உதவியாளர் தேர்வுக்கு இலவச பயிற்சி -14 ஆம் தேதி தொடக்கம்

image

புதுச்சேரி ஆதி திராவிட மற்றும் பழங்குடி இனத்தவருக்கான தேசிய வாழ்வாதார சேவை மைய துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி கோட்டூர் சாமி நேற்று விடுத்துள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் எஸ்சி, எஸ்டி வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்கான உதவியாளர் பணிக்கான எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கான இலவச பயிற்சி வகுப்புகள் வருகிற (பிப்.14) ஆம் தேதி தொடங்க உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

News February 8, 2025

புதுவையில் தீயணைப்பாளர் பதவிக்கு நாளை எழுத்து தேர்வு

image

புதுச்சேரி தீயணைப்பு துறையில், தீயணைப்பாளர் மற்றும் டிரைவர் நிலை-3 பணியிடத்திற்கான எழுத்து தேர்வு, நாளை (பிப்.9) ஆம் தேதி 5 மையங்களில் நடக்க உள்ளது. காலை 10 மணி முதல் மதியம் 12 மணிவரை நடக்கும் இந்த தேர்வை 2093 பேர் எழுத உள்ளனர். விண்ணப்பதாரர்கள் ஹால்டிக்கெட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பங்கஜ்குமார்ஜா தெரிவித்துள்ளார்.

News February 7, 2025

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் பொறுப்பேற்பு

image

காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மணிகண்டன், புதுச்சேரி ஆளுநர் அவர்களின் செயலாளராக மாற்றப்பட்டதை முன்னிட்டு இன்று காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய மாவட்ட ஆட்சியராக சோம சேகர் அப்பாராவ் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

News February 7, 2025

காரைக்காலில் நாளை விடுமுறை அறிவிப்பு

image

காரைக்கால் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற மஸ்தான் சாஹிப் வலியுல்லாஹ் தர்கா ஷரீஃப் கந்தூரி விழாவை முன்னிட்டு நாளை 08.02.2025 (சனிக்கிழமை) அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து காரைக்கால் மாவட்ட ஆட்சியர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். மேலும் அரசு தேர்வுகள் மற்றும் ஜவஹர்லால் நவோதயா வித்யாலயா நுழைவு தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 7, 2025

உடனடி கடன் செயலி மூலம் பல கோடி மோசடி – வாலிபர் கைது

image

உடனடி கடன் செயலி மூலமாக, பொது மக்களுக்கு கடன் கொடுத்து, கடன் மற்றும் வட்டித் தொகையை விட பல மடங்கு பணம் கட்டிய பிறகும், கடன் பெற்றவர்களின் புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைதளங்களில் பரப்பி விடுவேன் என மிரட்டி ரூ.465 கோடி மேல் ஒரு கும்பல் மோசடியில் ஈடுபட்டது புதுச்சேரி போலீசார் விசாரணை மேற்கொண்டு, கேரளா, மலப்புரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷரீப் என்பவரை நேற்று கைது செய்தனர்.

News February 7, 2025

புதுச்சேரியில் மது விற்பனைக்கு தடை

image

வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு வரும் (பிப்.11) ஆம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கி வரும் அனைத்து கள், சாராய மற்றும் பார் உள்ளிட்ட, அனைத்து மது கடைகளும் மூடி இருக்க வேண்டும் என கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் தெரிவித்துள்ளார். மேலும் தடையை மீறி மது விற்பனை செயல்பட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரித்துள்ளார். SHARE NOW !

News February 6, 2025

புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்

image

புதுச்சேரி போக்குவரத்து காவல் கண்காணிப்பாளர் செல்வம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், புதுச்சேரி கதிர்காமம் ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவில் செடல் திருவிழா நாளை நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு ராஜீவ் காந்தி சதுக்கம், வழுதாவூர் சாலை, மேட்டுப்பாளையம் சந்திப்பு இடங்களில் போக்குவரத்தில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். SHARE NOW !

News February 6, 2025

புதுவையில் மது கடைகளை மூட உத்தரவு

image

புதுச்சேரியில் 11.02.2025 அன்று வள்ளலார் ஜோதி தினத்தை முன்னிட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கிவரும் அனைத்து கள், சாராயம் மற்றும் பார் உட்பட அனைத்து வகை மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டுமென்றும், மது விற்பனை தடை செய்யப்படுகிறது என்று‌ம், மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கலால் துறை ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். SHARE NOW

error: Content is protected !!