Pondicherry

News February 27, 2025

குருதிக்கொடை வழங்க திமுக அமைப்பாளர் அழைப்பு

image

புதுச்சேரி திமுக அமைப்பாளர் எதிர்க்கட்சி தலைவருமான சிவா இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் ”தமிழ்நாடு முதல்வரின் பிறந்தநாளை முன்னிட்டு, புதுச்சேரி மாநில திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில், மாபெரும் குருதிக்கொடை வழங்கும் முகாம் நாளை (பிப்.28) வெள்ளிக்கிமை காலை 9.00 மணிக்கு சித்தன்குடி ஜெயராம் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது கழக நிர்வாகிகள் பங்கேற்க வேண்டும்” எனக் கேட்டுக்கொண்டுள்ளார்

News February 27, 2025

சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் பணிகள் தீவிரம்

image

புதுச்சேரி முழுவதும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சிசிடிவி கேமரா மற்றும் ஸ்மார்ட் கம்பங்கள் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. இவற்றை ஒருங்கிணைக்கும் கட்டுப்பாட்டு மையத்திலும் அனைத்து பணிகளும் முடிந்து தயார் நிலையில் உள்ளது. தற்போது இத்திட்டத்தின் முதற்கட்ட பணிகள் முடிந்து வருகிற மார்ச் 2வது வாரம் முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

News February 27, 2025

மாசி மகம்; புதுவையில் உள்ளூர் விடுமுறை

image

இந்தாண்டு மாசி மகத்தை முன்னிட்டு காரைக்காலில் மார்ச் 13 ஆம் தேதி வியாழக்கிழமையும், புதுச்சேரியில் மார்ச் 14 வெள்ளிக்கிழமையும் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குநர் சிவகாமி இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார். எனினும் பொதுத்தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News February 27, 2025

வாலிபர் மீது தாக்குதல் – விசாரணை

image

புதுவை கூனிச்சம்பட்டு ரஞ்சித்குமார், இவரது சொந்த நிலத்தில் நேற்று காலை வேலை செய்துவிட்டு வந்தபோது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் முன்விரோதம் காரணமாக ரஞ்சித்குமாரிடம் வாய் தகராறில் ஈடுபட்டு, தான் கையில் வைத்திருந்த மண்வெட்டியால் வெட்ட வந்தபோது ரஞ்சித்குமார் தலையில் அடிப்பட்டது, இது குறித்து ரஞ்சித் குமார் அளித்த புகாரின் பேரில் திருக்கனூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

News February 27, 2025

புதுச்சேரியில் மாபெரும் சுகாதாரத் திருவிழா

image

புதுச்சேரி சுகாதார மற்றும் குடும்ப நல வழித் துறை சார்பாக மாபெரும் சுகாதாரத் திருவிழா உலக சுகாதார தினத்தை முன்னிட்டு புதுச்சேரி, கருவடிக்குப்பம், சிவாஜி சிலை அருகில் உள்ள காமராஜர் மணி மண்டபத்தில் பிப்ரவரி மாதம் இருபத்தி எட்டாம் தேதி முதல் மார்ச் இரண்டாம் தேதி (28.02.25- 02/03/25) வரை நண்பகல் 3 மணி முதல் இரவு 9 மணி வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

News February 26, 2025

பட்டதாரி ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்க நடவடிக்கை

image

புதுவை பள்ளிக்கல்வி துணை இயக்குனர் வெர்பினோ ஜெயராஜ் நேற்று (பிப்.25) வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் அரசு பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு விரிவுரையாளர்களாக பதவி உயர்வு வழங்க திட்டமிடப்பட்டு அதற்கான பட்டியலை கல்வித்துறை வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் புதுவை, காரைக்காலில் 363 ஆசிரியர்களும், மாகியில் 39 ஆசிரியர்களும், ஏனாமில் 12 ஆசிரியர்களும் இடம்பெற்றுள்ளனர் என தெரிவித்துள்ளார்.

News February 25, 2025

புதுச்சேரி முன்னாள் முதல்வர் டெபாசிட் இழப்பார் – சபாநாயகர்

image

புதுச்சேரி சபாநாயகர் செல்வம் இன்று செய்தியாளர் சந்திப்பில் சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 10 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகி12 ஆம் முதல்வர் ரங்கசாமி 2025 -2026 ஆம் நிதிநிலை ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்கிறார். சபாநாயகர் டெபாசிட் இழப்பார் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி கருத்து தெரிவித்துள்ள நிலையில் அவரது சொந்த ஊரான மனவெளி தொகுதியில் போட்டியிட தயாரா என சவால் விடுத்துள்ளார்.

News February 25, 2025

புதுச்சேரி பட்ஜெட் கூட்டத்தொடர் 10- தேதி தொடங்குகிறது

image

புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து சபாநாயகர் செல்வம்
புதுச்சேரி 15-வது சட்டப்பேரவையின் 6-வது பகுதி பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற மார்ச் 10-ம் தேதி காலை 9.30 மணிக்கு துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உரையுடன் தொடங்கும். 12-ம் தேதி நிதி பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் ரங்கசாமி 2025-26ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். என்று தெரிவித்தார்

News February 25, 2025

புதுவை: மூதாட்டியிடம் 10 பவுன் நகை திருட்டு

image

புதுச்சேரி அரியாங்குப்பம் அரவிந்தா் நகா் பகுதியைச் சேர்ந்தவர் ஆழ்ந்துமரி செராா்தின் இவா் கடலூா் சாலை வழியாக வீடு திரும்பிக் கொண்டிருந்தார் அப்போது இருவா் அவரை மறித்து திருடர்கள் நடமாட்டமும் உள்ளதாகக் கூறி அவர் அணிந்திருந்த 10 பவுன் தங்க நகையை கழற்றித் அதை தாளில் மடித்து கொடுத்தனராம். வீடு சென்றதும் மூதாட்டி பொட்டலத்தைப் பிரித்த போது நகை இல்லை அவர் அரியாங்குப்பம் போலீசில் நேற்று புகார் அளித்தார்.

News February 25, 2025

விழுப்புரம் – புதுச்சேரி டோல்கேட் கட்டண வசூல் தொடக்கம்

image

விழுப்புரம், புதுவை வழியாக நாகப்பட்டினத்துக்கு 194 கிமீ தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. நெடுஞ்சாலையில் கெங்கராம்பாளையத்தில் டோல்கேட் கட்டணம் வசூலிப்பு நேற்று துவங்கியது. டோல்கேட் மேற்கூரை இல்லாமல் அவசர அவசரமாக கட்டணம் வசூலிக்க திறக்கப்பட்டதாக கிராம மக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாகனங்கள் செலுத்த வேண்டிய கட்டணம் குறித்த அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!