India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மத்திய அரசின் திட்டமான சாலை விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான கட்டணம் இல்லா சிகிச்சை திட்டம் தொடக்க விழா மற்றும் பயிற்சி முகாம் புதுச்சேரி காவல்துறை சார்பில் நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநில முதலமைச்சர் ரங்கசாமி, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பொதுப்பணித் துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான காவலர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (20-3-25) சட்டசபை கூட்டத்தொடரில் பேசிய நேரு எம்எல்ஏ, தமிழகத்தில், பென்சனர்கள் இருப்பிடத்திற்கே சென்று வாழ்நாள் சான்றிதழ் பெற ரூ.70 கட்டணத்தில் சேவை வழங்கப்படுகிறது. அதை பின்பற்றி புதுச்சேரியிலும் இதை நடைமுறைப்படுத்த அஞ்சல் துறையின் India Post Payments Bank உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை ஏற்படுத்தி பென்ஷனகளின் சிரமத்தை போக்க வேண்டும் என்றார்.
பட்ஜெட் மீதான பொது விவாதத்தின் நடுவே, குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திருமுருகன் நேற்று பேசும்போது, “தற்போது 2024 அக்டோபர் முதல் ஜனவரி 2025 வரை வாங்கப்பட்ட கேஸ் சிலிண்டர் ஒன்றுக்கு மஞ்சள் நிற அட்டைக்கு ரூ.150 வீதமும், சிகப்பு நிற அட்டைக்கு ரூ.300 வீதமும், அவரவர் வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. இதற்காக ரூ.11.50 கோடி செலவிடப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் அமைச்சர் நமச்சிவாயம் பேசுகையில், ஒவ்வொரு குடிமகனும், பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணிய வேண்டும். ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி அரசு பிரசாரமும் தொடங்கியுள்ளது. இதுவரை புதுவையில் ஹெல்மெட் அணியாத 37,107 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மாதமும் உச்சநீதிமன்றம் விபத்து மரணத்தை கண்காணித்து கேட்கிறது. இதனால் புதுவையில் மக்கள் அவசியம் தலைகவசம் அணிய வேண்டும் என பதில் அளித்தார்.
புதுச்சேரி சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு நிறுத்தப்பட்ட கேஸ் மானியம் மீண்டும் வழங்கப்படும் என்று அமைச்சர் திருமுருகன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மேலும் அடுத்த மாதத்தில் இருந்து அனைத்து சிவப்பு மற்றும் மஞ்சள் நிற அட்டைதாரர்களுக்கு மானியம் வழங்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
புதுச்சேரியில் சட்டப்பேரவைக் கூட்டம் பேரவைத் தலைவா் ஆா்.செல்வம் தலைமையில் புதன்கிழமை காலை தொடங்கியது. அப்பொழுது பேசிய முதல்வர் என்.ரங்கசாமி, புதுவையில் இலவச அரிசியுடன் 2 கிலோ கோதுமை வழங்கப்படும். சிவப்பு குடும்ப அட்டையுள்ள குடும்ப தலைவியருக்கு மாதம் ரூ.2,500 உதவித்தொகை வழங்குவது போல, மஞ்சள் குடும்ப அட்டைதாரா்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படும் என்றார்.
புதுச்சேரியில் நேற்று பட்ஜெட் மீதான பொது விவாதத்தில் எதிர்க்கட்சி தலைவர் சிவா பேசியதாவது:- தமிழகத்தை போல சிபிஎஸ்இ பாடத்திட்டத்தையும் எடுத்துவிட்டால் நன்றாக இருக்கும். இரயில், துறைமுகம் ஆகியவை நம் கையில் இருந்தால் வளர்ச்சி இருக்கும் என்று தெரிவித்தார். மேலும், பத்திர பதிவுத் துறையில் கோடி கணக்கில் முறைகேடு நடந்துள்ளதாக குற்றஞ்சாட்டினார்.
புதுச்சேரி அரசு குழந்தைகள் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு ஆணையத்தின் உறுப்பினராக புதுச்சேரி பத்திரிக்கையாளர் சங்கத்தின் தலைவரும் பாண்டி வாய்ஸ் பத்திரிகையின் ஆசிரியருமான சிவா முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலையில் சட்டசபையில் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் முதலமைச்சர் அமைச்சர் ஆகியோர் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்திய வம்சாவளியைச் சார்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது. இவரது மனவலிமை, தன்னம்பிக்கை, நிபுணத்துவம் போன்றவை மனிதகுலத்திற்கு புதிய உத்வேகத்தைத் தருகின்றன. சுனிதா வில்லியம்ஸ் நீண்ட ஆயுளோடு நலமாக வாழ புதுச்சேரி ரங்கசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி சட்டப்பேரவையில் பட்ஜெட் தாக்கல் 7ஆம் நாளான இன்று, அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் அவரவர் வீடுகளிலேயே ரேஷன் பொருட்கள் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு வெளியிட்டார். முன்பெல்லாம் பொருட்கள் வாங்க நீண்ட வரிசையில் காத்திருந்த நிலையில் இனி, ரேஷன் பொருட்கள் வீடுகளுக்கு வந்தடையும் நிலை ஏற்பட்டுள்ளதால் மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். இந்த ஹேப்பி நியூஸை SHARE பண்ணுங்க.
Sorry, no posts matched your criteria.