India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
பொதுப்பணித்துறையில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று புதுச்சேரி பொதுப்பணித்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா வலியுறுத்தினர். ஆனால் சபாநாயகர் இதனை ஏற்க மறுத்ததால் திமுக உறுப்பினர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக திமுக உறுப்பினர்களை வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். எதிர்க்கட்சித் தலைவர் சிவா குண்டுகட்டாக அவை காவலர்களால் வெளியேற்றப்பட்டார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில், கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் ‘ஹீட் ஸ்ட்ரோக்’ போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன. வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்கவும். தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என தெரிவித்துள்ளார். SHARE NOW
புதுச்சேரி தலைமை பொறியாளர் தீனதயாளன், காரைக்கால் சாலை மற்றும் கட்டட செயற்பொறியாளர் சிதம்பரநாதன் உள்பட 3 பேரை 7 கோடி ரூபாய் ஒப்பந்தத்திற்கு பல லட்சம் கமிஷன் பெற்றது விசாரணையில் காரைக்காலில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில் புதுச்சேரி பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அலுவலகத்துக்கு இன்று சிபிஐ சீல் வைத்து ஆவணங்கள் பறிமுதல் செய்தனர்.
ஆயிரங்காளியம்மன் கோயில் காரைக்கால் அடுத்த திரு.பட்டினத்தில் உள்ளது. இந்த அம்மன் ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே காட்சியளிப்பார். பேழையில் இருந்து கொலுசு சத்தம் கேட்ட பின்பே பேழை திறக்கப்படும். பேழையின் உள்ளே மாலைகள் வாடாமல் புதிதாகவே இருக்குமாம். இங்கு அம்மனுக்கு எதை படைத்தாலும் ஆயிரம் எண்ணிக்கையில் தான் படைப்பார்கள். எனவே தான் ஆயிரங்காளி எனப் பெயர் வந்தது. அம்மன் அருள்பெற SHARE செய்யவும்
புதுச்சேரி சுகாதாரத்துறை இயக்குநர் ரவிச்சந்திரன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கோடை காலத்தில் பரவக்கூடிய தோல், கண், செரிமான மண்டல தொந்தரவுகள், அம்மை நோய், இருமல் மற்றும் அதிக வெப்பநிலை காரணமாக வரக்கூடிய ‘ஹீட் ஸ்ட்ரோக்’ போன்ற நோய்கள் உருவாக அதிக வாய்ப்பு உள்ளன. வெப்ப பக்கவாதத்தின் போது ஐஸ் கட்டிகள், தண்ணீர் உதவியோடு உடலை குளிர்வித்து சிகிச்சை அளிக்கவும். தேவை இன்றி வெளியே செல்வதை தவிர்க்கவும்
பூந்தோட்டம் அருகே கூத்தனூரில் கல்வி தெய்வமாகிய சரஸ்வதிக்கு தனிக் கோயில் உள்ளது. இக்கோயிலில் விஜயதசமி வெகு விமர்சையாக கொண்டாடப்படும். பள்ளி சேர்க்கைக்கு முன்னர் குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க இக்கோயிலுக்கு அழைத்து செல்வது, பொதுத்தேர்வு எழுத செல்லும் மாணவர்கள் ஹால்டிக்கெட்டை இங்கு அர்ச்சனை செய்து பின்னர் தேர்வு எழுத செல்வது இங்கு வழக்கம். தேர்வு எழுத செல்லும் மாணவர்களுக்கு SHARE செய்யவும்
புதுச்சேரியைச் சேர்ந்த நபர் ஒருவர் சமீபத்தில், வெளி நாடுகளில் பணம் பரிவர்த்தனை, கிரிப்டோ கரன்சி தொடர்பாக மர்ம கும்பலிடம் தான் ஏமாந்ததாக, புதுவை சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு, தலைமறைவாக இருந்த பெங்களூரு, பலானாஹல்லி பகுதியைச் சேர்ந்த புனித் (24) என்பவரை, நேற்று (மார்ச் 22) கைது செய்து காலப்பட்டு சிறையில் அடைத்துள்ளனர்.
திலாசுப்பேட்டையை சேர்ந்த ஜெயக்குமார் என்பவர் ஆன்லைன் மூலம் வேலை தேடியபோது, சிங்கப்பூரில் உள்ள நிறுவனம் ஒன்றின் HR என்று மர்ம நபர் ஒருவர் ஜெயக்குமாரை தொடர்பு கொண்டு, அவரை உதவி மேலாளர் பணிக்கு தேர்வு செய்திருப்பதாகவும், இதற்காக சேவை கட்டணமாக ரூ.5000 செலுத்துமாறு கூறி பண மோசடி நடந்துள்ளது. இது தொடர்பாக சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இதனை SHARE செய்து விழிப்புணர்வை ஏற்படுத்துங்க…
சட்டசபையில் கேள்வி நேரத்தின்போது நேற்று நடந்த விவாதத்தில் பதில் அளித்து பேசிய முதல்வர் ரங்கசாமி, ‘தற்போது காலி பணியிடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. 226 செவிலியர் பணியிடங்களை நிரப்ப உள்ளோம். டாக்டர்கள், மருந்தாளுநர் பணியிடங்களும் நிரப்பப்படும். 305 ஆஷா பணியிடங்களை நிரப்ப மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் மூலம் சுகாதார நிலையங்களில் பணியாளர்கள் பிரச்னை தீரும்’ என தெரிவித்தார்.
புதுச்சேரி, மூலக்குளம், வில்லியனுார் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் சாந்தா அவரது வீட்டில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவர் கழுத்தில் அணிந்திருந்த 7 சவரன் நகை மாயமாகி இருந்தது.போலீசார் எழிலரசனை கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி பாலமுருகன், குற்றம் சாட்டப்பட்ட எழிலரசனுக்கு, 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.
Sorry, no posts matched your criteria.