India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மதுபானம் கொள்கையால் கடந்த மாதம் கைது செய்யபட்ட டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று முன்தினம் இடைக்கால ஜாமீனில் வெளியே வந்தார். இதையடுத்து, இதை கொண்டாடும் விதமாக நேற்று புதுச்சேரி ஆம் ஆத்மி கட்சியின் மாநில துணை ஒருங்கிணைப்பாளர் சாமி சண்முகசுந்தரம், கவுரவ தலைவர் சந்திரன், ஜெயராஜன் , ஜெயக்குமார், கமலா, மகாலட்சுமி, ஜெயா, மற்றும் பலரும் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர்
புதுவை முத்தரையர்பாளையம் முத்துகுமரன் . இவருக்கும் அஜய் மற்றும் அவரது நண்பர்கள் முன்விரோதம் இருந்து வந்தது. அவர்களுக்குள் நேற்று மீண்டும் தகராறு ஏற்பட்டு முத்துகுமரன் வீட்டு வாசலில் நின்ற அவரது பைக்கை, கத்தியால் வெட்டி சேதப்படுத்தினர். தட்டி கேட்ட முத்துகுமரனுக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். புகாரின் பேரில், மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து, அஜய் உட்பட 3 பேரை தேடி வருகின்றனர்
உலகில் பிறந்த ஒவ்வொரு உயிரினமும் முதலில் பேசும் வார்த்தையான “அம்மா” என்பது தாய்மையின் அம்சம். தாய்மை என்பது ஓர் உலக மொழி. தனது வாழ்நாள் முழுவதும் ஆதரவு, ஆறுதல் மற்றும் வழிகாட்டுதல்களை வழங்கி நம்மை ஆளாக்க தாய் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் எதையும் ஈடாகத் திருப்பிச் செலுத்த முடியாது என்று புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி அனைவருக்கும் எனது அன்பான அன்னையர் தின வாழ்த்து தெரிவித்தார்.
புதுச்சேரியில் 12 மற்றும் 10ஆம் வகுப்புப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்களுடைய கடின உழைப்பும் அர்ப்பணிப்பும் உங்கள் சாதனையின் அளவுகோல்.
மாணவர்கள் அனைவரும் இதே உற்சாகத்தோடும் நம்பிக்கையோடும் உயர்கல்வியிலும் வாழ்விலும் கவனம் செலுத்த வேண்டும் என ஆளுநர்
சி.பி. ராதாகிருஷ்ணன் இன்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்து ஆணையர் சிவக்குமார் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், புதுச்சேரி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில், வாகனப் பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெற்றுக்கொள்ளலாம் என விளம்பரங்கள் ஒட்டப்பட்டுள்ளது. விதிகளை மீறி, வாகன பதிவு சான்றிதழை அடமானம் வைத்து பணம் பெறுவதும், கொடுப்பதும் சட்டப்படி குற்றமாகும் அடமானம் வைத்து பணம் பெறுபவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறப்பட்டது.
காரைக்கால் மாவட்டத்தில் நலவழித்துறை சார்பில் புனித ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடும் முகாம் நலவழித்துறை கூட்ட அரங்கத்தில் நேற்று நடந்தது. புதுச்சேரி ஹஜ் கமிட்டி தலைவர் இஸ்மாயில் தலைமை தாங்கினார். நோய் தடுப்பு திட்ட அதிகாரி டாக்டர் தேனாம்பிகை முன்னிலை வகித்தார். முகாமில் காரைக்காலை சேர்ந்த 28 ஹஜ் பயணிகளுக்கு தடுப்பூசி மற்றும் சொட்டு மருந்து போடப்பட்டது.
வில்லியனூர் கணுவாப்பேட்டையில் 3 போ் கஞ்சா பொட்டலங்களை பதுக்கி வைத்திருப்பதாக நேற்று போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸாா் அங்கு சென்று சோதனையிட்டபோது 3 பேரிடம் இருந்த கஞ்சா பொட்டலங்களை கைப்பற்றினா். விசாரணையில் அவா்கள் ஒடிஸா மாநிலத்திலிருந்து கஞ்சாவை வாங்கி வந்து புதுவையில் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அவா்கள் 3 பேரையும் போலீஸாா் கைது செயது 3.5 கிலோ கஞ்சாவை பறிமுதல். செய்தனர்.
புதுச்சேரி, தாகூர் அரசு கலை அறிவியல் கல்லூரியில் நேற்று தேசிய தர நிர்ணயம் மற்றும் அங்கீகாரக் குழுவினர் ஆய்வு செய்தனர். கல்லூரியின் பசுமை வனம் ,புத்தர் தோட்டம், வீரமங்கை வேலு நாச்சியார் தோட்டம் முதலான ஆய்வுக்குழுவினர் பார்வையிட்டனர். இதனைத் தொடர்ந்து மதிப்பீட்டுக் குழுவினர் மதிப்பீட்டு அறிக்கையைக் கல்லூரி முதல்வரிடம் வழங்கினர். பிற்பகலில் மதிப்பீட்டுக் குழுவினருக்கு விடைதரும்விழா நடந்தது.
புதுச்சேரியில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதில், புதுச்சேரி கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் இன்று 96% டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவானதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரியில் இன்று 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. இந்நிலையில், புதுச்சேரி, காரைக்கால் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு, மே.13ஆம் தேதி முதல் விண்ணப்பங்கள் வழங்கப்படும். அந்த விண்ணப்பங்களை மே.22ஆம் தேதி மாலை 4 மணிக்குள் சமர்ப்பிக்கப்பட வேண்டும். ஜூன்.06 ஆம் தேதி முதல் 11-ம் வகுப்புகள் தொடங்கும் என்று புதுச்சேரி கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.