India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் மூலம் 2025 ஆம் ஆண்டுக்கான பிரதான் மந்த்ரி ராஷ்ட்ரிய பால புரஸ்கார் விருதுக்கான விண்ணப்பங்கள் இணையம் வழியாக https.//awards.gov.in 31.07.24 அன்று வரை பெறப்படும், இதில், புதுச்சேரி சார்ந்த வீர தீர செயல், விளையாட்டு, சமுக சேவை இவற்றில் சிறந்து விளங்கிய 5 வயது முதல் 18 வயது வரை உள்ள குழந்தைகள் விண்ணப்பிக்கலாம் என்று புதுவை அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
புதுச்சேரி பாரதியார் பல்கலைக் கூடத்தில் பாரத நாட்டியம் , ஓவியம், துணி வண்ண ஓவியம், சுடுமண் சிற்பம் ஆகிய பிரிவுகளுக்கு 6 மாத கால சான்றிதழ் பயிற்சி மாலை நேர வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. இதில், சேர விரும்புவோர் பல்கலைக்கூடத்தில் ரூ.100 கட்டணம் செலுத்தி விண்ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். https://bpk.py.gov.in என்ற இணையதளம் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் புதிய குற்றவியல் சட்டங்கள் குறித்து காவல்துறை மற்றும் சட்டத்துறை அதிகாரிகளுக்கான இரண்டு நாள் பயிற்சி முகாம் கதிர்காமம், இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவன கலையரங்கத்தில் இன்று தொடங்கியது. இதில் சிறப்பு விருந்தினராக துணைநிலை ஆளுநர் ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பயிற்சி முகாமை தொடங்கி வைத்தார்.
புதுவை கலிதீர்த்தாள்குப்பம் மணக்குள விநாயகா் தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வியில் சாதனை புரிந்த பேராசிரியா்கள், மாணவா்களுக்கு பாராட்டு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியில் சென்னை டிசிஎஸ் நிறுவன ஐஓடி & டிஜிட்டல் என்ஜினீயரிங் பிரிவு சா்வதேச மனித வளத் துறை தலைவா் லக்ஷ்மண் பிரகாஷ் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வேலைவாய்ப்பு பெற்ற மாணவா்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
காரைக்கால் மாவட்டத்தில் உள்ள கடலோர காவல்படை சார்பில் காரைக்கால் காமராஜர் உள்விளையாட்டு அரங்கில் கடலோர காவல் படை வீரர்களுக்கு இடையே டென்னிஸ் போட்டி நேற்று நடைபெற்றது. அதில் இந்திய கடலோர காவல் படை அமயா ரோந்து கப்பல் சேர்ந்த ஐந்து அணிகளாக பிரிந்து 50க்கும் மேற்பட்ட வீரர்கள் டென்னிஸ் போட்டியில் ஈடுபட்டனர். இந்த போட்டியில் உஜயா பிரதீக் கப்பல் அணியினர் முதலிடத்தில் வெற்றி பெற்றனர்.
காரைக்காலில் கல்வி நிறுவனங்களின் வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் வரும் ஜூன் 1,2 தேதிகளில் போக்குவரத்து துறை வளாகத்தில் நடத்தப்பட உள்ளது. இம்முகாமில் வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டு தகுதி சான்றிதழ் அளித்து வாகனத்தின் முகப்பில் ஒட்டப்படும். இந்த வாகனங்கள் மட்டுமே மாணவர்களுடன் பயணிக்க சாலையில் அனுமதிக்கப்படும். மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்
புதுச்சேரியை ஆளும் என்ஆர்.காங்கிரஸ் கூட்டணி அரசு பொறுப்பேற்றது முதல் அனைத்து துறையிலும் லஞ்சம், ஊழல் தலைவிரித்தாடுகிறது. அரசு துறைகளில் எந்த பணிகளாக இருந்தாலும், மக்கள் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் லஞ்சம் கொடுத்தால்தான் வேலை நடக்கும் என்ற நிலை உள்ளது இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள் என புதுவை மாநில அதிமுக துணை செயலாளர்,வையாபுரி மணிகண்டன் இன்று கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வட தமிழக கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் இன்று(மே 16) இரவு 11.30 மணி வரை கடல் சீற்றமாக இருக்கும் என்பதால், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த கட்டுமர மீன்பிடி படகு மீனவர்கள் அனைவரும் பாதுகாப்புடன் மீன்பிடிப்பில் ஈடுபடுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு புதுச்சேரி மாநில மீன்வளத்துறை இயக்குநர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதுச்சேரி போக்குவரத்துத் துறையின் பிஒய்-04 பி (ஏனாம்) வரிசையில் உள்ள எண்கள் பரிவாகன் இணையதளத்தில் மே 21 ஆம் தேதி வரை ஏலம் விடப்படுகிறது. ஏலத்தில் பங்கேற்க தேவையான பெயா், கடவுச்சொல்லை சம்பந்தப்பட்ட இணையதளத்தில் ‘நியூ பப்ளிக் யூசா்’ என்பதை கிளிக் செய்வதன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு போக்குவரத்துத் துறை தொலைபேசி 0413-2280170ஐ தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.
தமிழக பகுதிகளில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக புதுச்சேரி, காரைக்கால் மற்றும் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் இன்று(மே 16) காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் சில இடங்களில் மழைநீர் தேங்கலாம், போக்குவரத்து பாதிக்கப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Sorry, no posts matched your criteria.