India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையத்திற்கு செல்லும் அதிமுக முகவர்களின் ஆலோசனை கூட்டம் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அவர்கள் வாக்கு எண்ணும் மையங்களில் முகவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.
புதுச்சேரியில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் குறைந்துள்ளது. இதில் புதுச்சேரி கடற்கரைகள், சாலைகள் மற்றும் பேருந்து நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் குறைந்தே காணப்படுகிறது. இந்த நிலையில் புதுச்சேரியில் இன்று 94.8% டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகியுள்ளது.
புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 30 கிலோமீட்டர் முதல் 40 கிலோமீட்டர் வரை) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புதுவையில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளது.
புதுச்சேரி லாரி உரிமையாளர்கள் சங்க புதிய நிர்வாகிகளை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று மேட்டுப்பாளையம் லாரி உரிமையாளர்கள் சங்க கட்டிடத்தில் நடைபெற்றது. புதுவை தமிழ் சங்க தலைவர் முத்து தேர்தல் ஆணையராகப் பொறுப்பேற்று நடத்தினார். தேர்தலில் உரிமையாளர்கள் சங்க தலைவராக செந்தில்குமார், பொருளாளராக குமாரகிருஷ்ணன் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.
புதுவை அம்பேத்கர் சாலையில் தரமற்ற புதிய தார்சாலை அமைத்ததாக எழுந்த புகாரையொட்டி , அமைச்சர் லட்சுமிநாராயணன் தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தொடர்ந்து பெண்ணையாறு மற்றும் சங்கராபரணி ஆறுகளில் தடுப்பணைகள் கட்டி நீரினை சேமித்து சுத்திகரித்து குடிநீர் வினியோகத்துக்கு பயன்படுத்தும் சாத்தியக்கூறுகள் குறித்தும் மணமேடு, பிள்ளையார்குப்பம் பகுதிகளில் ஆய்வு செய்தார்.
புதுவை காமராஜ் நகர் டாக்டர் அழகம்மை, இவரது செல்போனில் மும்பையில் இருந்து சைபர் கிரைம் போலீஸ் அதிகாரி பேசுவதாக கூறி அவரது பெயரில் தைவான் நாட்டில் இருந்து 20 கிலோ போதை பொருட்கள் வந்ததாக கூறி அவரது வங்கி கணக்கு விவரங்களை கேட்டு அவரின் வங்கி கணக்கில் இருந்து ரூ.27 லட்சத்து 30 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டது. நேற்று அவர் கொடுத்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்
புதுச்சேரியில் 4ஆம் தேதி நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கை குறித்து திமுக சார்பில் கலந்தாலோசனைக் கூட்டம் கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தலைமையில் இன்று காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. இதில், புதுச்சேரி மாநில திமுக தலைமை அலுவலகத்தில் மாநில அமைப்பாளர் சிவா தலைமையில் எண்ணிக்கை முகவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். இதில் ஏராளமான திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து துறை அதிகாரிகள் மாணவ மாணவிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவர்கள் பயணம் செய்யும் கல்வி நிறுவன வாகனங்களை ஆய்வு செய்யும் சிறப்பு முகாம் இன்று நடத்தி வருகின்றனர். இதில் பள்ளி, கல்லூரி மற்றும் அரசின் மாணவர்களுக்கான இலவச பேருந்து என மொத்தம் 900 வாகனங்கள் அதிகாரிகளின் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. போக்குவரத்து ஆனையர் சிவகுமார் முன்னிலையில் 6 குழுக்கள் ஆய்வு செய்தனர்.
புதுச்சேரியில் போக்குவரத்து துறை சார்பாக 75 மின்சார பேருந்துகள் அறிமுகம் செய்ய உள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கருதி டெல்லி, கர்நாடகா போன்ற சில மாநிலங்களில் தற்போது டீசலில் இயங்கும் வாகனங்களை நிறுத்தப்பட்டு மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை அங்கு பயன்படுத்துகின்றனர். அதேபோல் புதுச்சேரியிலும் மாசு கட்டுப்பாட்டை கருத்தில் கொண்டு தற்பொழுது மின்சார இயக்க முடிவு செய்துள்ளனர்.
புதுவை சுற்றுலா வந்த சென்னை சேர்ந்த தேவராஜ், சஞ்சய், நித்ய ஆகிய 3 பேரும் மதுபோதையில் இன்று பாரதி பூங்கா பகுதியில் காரை நிறுத்தி இருந்தனர். அங்கிருந்த பெண் போலிஸ் அர்ச்சனா இங்கு காரே நிறுத்த கூடாது எடுங்கள் என கூறியதற்கு அவர்கள் எடுக்க முடியாது என்று வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவரை தாக்க முயற்சித்து மிரட்டினர். இதுபற்றி தகவல் அறிந்த பெரியகடை போலீசார் அங்கு வந்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர்.
Sorry, no posts matched your criteria.