India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி மக்களவைத் தொகுதியின் வாக்குகள் எனப்படுகின்றன. வாக்கு என்னும் மையத்தில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது காங்.வேட்பாளர் வைத்தியலிங்கம் முன்னணியில் உள்ளார்.
புதுச்சேரியில் முதல் கட்டமாக தபால் வாக்குகள் அந்தந்த தொகுதி வாரியாக ஒரே அறையில் வைத்து எண்ணும் பணி துவங்கியுள்ளது. இந்த தபால் வாக்கு எண்ணிக்கையில் தற்போது பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் முன்னணியில் உள்ளார்.
நாடே எதிர்பார்க்கும் மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை சற்றுமுன் தொடங்கியது. அதன்படி, புதுவை தொகுதியில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சுற்றுகளின் முடிவுக்காக அரசியல் கட்சி முகவர்கள், அரசியல் தலைவர்கள், தொண்டர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர். முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகின்றன.
புதுச்சேரியில் இன்னும் வாக்கு எண்ணிக்கை தொடங்காமல் தாமதமாகியுள்ளது. 2 வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு வாக்கு பதிவு இயந்திரங்களை எடுத்து செல்வதில் தாமதம் ஏற்பட்டதால் இந்த நிலை நீடிக்கிறது.
புதுச்சேரியில் வாக்கு எண்ணும் மையத்தில் துணைராணுவப் படையினருக்கும் காவல்துறைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வாக்கு எண்ணும் மையத்தில் துணை ராணுவப்படையினர் செல்போன் கொண்டுவந்ததற்கு, காவல்துறையினர் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இன்னும் சற்று நேரத்தில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
புதுச்சேரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகையும், பாஜக நிர்வாகியுமான நமீதா அவர், நாளை தேர்தல் முடிவுகள் வெளியாக உள்ள நிலையில் தான் மிகவும் மகிழ்ச்சியில் இருப்பதாகவும்
2019 ல் நான் பாஜகவில் சேர்ந்த போது தவறான முடிவு எடுத்ததாக பலரும் தெரிவித்தனர். ஆனால் நான் சரியான முடிவு எடுத்ததாக உறுதியாக நம்பினேன். தற்போது நாடு நல்ல முன்னேற்றத்திற்கு சென்றுள்ளது என்றார்.
2019இல் புதுச்சேரி மக்களவைத் தொகுதியில் திமுக-காங். சார்பில் போட்டியிட்ட வைத்திலிங்கம், 24.91% வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுக-என்ஆர் காங். சார்பில் போட்டியிட்ட ஆர்.அழகர்சாமி 1,97,025 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை 2024 மக்களவைத் தேர்தலில், திமுக-காங் சார்பில் வைத்திலிங்கம், அதிமுக சார்பில் தமிழ்வேந்தனும் போட்டியிட்டுள்ளனர். இவர்களில் வெற்றி பெறப்போவது யார்?
புதுச்சேரியில் மாணவர்கள் பள்ளி, கல்லூரிகளில் சேர்வதற்கு வருமானச் சான்றிதழ், இருப்பிடச் சான்றிதழ், ஜாதி சான்றிதழ் உள்ளிட்டவைகள் பெறுவதற்காக அலைக்கழிக்கப்படுவதை கண்டித்தும், சான்றிதழ் பெற வருபவர்களிடம் வருவாய்த்துறை அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக குற்றஞ்சாட்டி திராவிடர் விடுதலை கழகத்தினர் இன்று 100க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவ ஆராய்ச்சிப் படிப்புகளான பி.எச்டி. உயிரி வேதியியலில் – 2, தடுப்பு மற்றும் சமூக மருத்துவத்தில் – 1, மருத்துவ புற்றுநோயியலில் – 1, மகப்பேறியியலில் – 1 என மொத்தம் 5 இடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. வரும் ஜூலை 7 ஆம் தேதி ஆராய்ச்சிப் படிப்புகளில் சேருபவா்களுக்கான நுழைவுத் தோ்வு நடைபெறவுள்ளது.
புதுச்சேரியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் பணியின் முகவர்கள் பயிற்சி முகாம் இன்று புதுச்சேரியில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பாஜக வேட்பாளர் நமச்சிவாயம், பாஜக மாநில தலைவர் செல்வகணபதி, புதுச்சேரி அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமார், திருமுருகன், சாய் சரவணன், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
Sorry, no posts matched your criteria.