India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
புதுச்சேரி நகராட்சி இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுச்சேரியில் உள்ள நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 2023 – 2024 ஆம் ஆண்டிற்கான வீட்டு வரி மற்றும் சொத்து வரி செலுத்தாதவர்களுக்கு வரும் ஜூன்.17 ஆம் தேதி வரை காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வரி செலுத்த தவறும்பட்சத்தில் 10% வட்டி விதிக்கப்படும் என நகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.
புதுவை அமைச்சரவையில் மாற்றம் செய்ய முதல்வர் ரங்கசாமி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருவரது அமைச்சர் பதவியை பறிக்கவும், மற்றொரு அமைச்சரின் இலாகாவை மாற்றவும் ரங்கசாமி முடிவு செய்துள்ளார். இதுபோன்று பாஜகவிலும் அமைச்சர்களின் இலாகாக்களை மாற்ற முடிவு செய்துள்ளார். புதிதாக பொறுப்பேற்று உள்ள திருமுருகனுக்கு இலாகா வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது.
காரைக்காலில் புதுச்சேரி தொகுதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் அறிஞர் அண்ணா அரசு கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையில் இருந்து தேர்தல் அதிகாரி மணிகண்டன் முன்னிலையில் இன்று வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல்துறை பாதுகாப்புடன் ஆட்சியரகம் அருகே அமைந்துள்ள பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கப்பட்டது.
புதுவை திமுக அமைப்பாளரும், எதிர்கட்சித் தலைவருமான சிவா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், புதுவையில் ஆளும்கட்சி சுயபரிசோதனை செய்ய வேண்டும். முதலமைச்சர், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்கூட தங்கள் தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளை பெற முடியவில்லை. ஆட்சியாளர்கள் தங்களை திருத்தி கொண்டால் வரும் சட்டமன்ற தேர்தலில் டெபாசிட் வாங்கலாம். இல்லாவிட்டால் டெபாசிட் கூட பெற முடியாது எனத் தெரிவித்தார்.
காரைக்காலை அடுத்த அத்திப்படுகை கிராமத்தில் முதன்முறையாக சின்ன வெங்காயம் சாகுபடியில் விவசாயி பழனி வேல் என்பவர் தனது கால் ஏக்கர் நிலத்தில் ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் டெல்லியில் இருந்து சின்ன வெங்காயம் விதைகளை வாங்கி விதைத்தார். இந்த சின்ன வெங்காயமானது விதைத்த 90 நாளில் இருந்து 100 நாளில் அறுவடை செய்யக்கூடிய பயிராகும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
புதுவை பிஎஸ்என்எல் முதன்மை பொது மேலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுவை பிஎஸ்என்எல் சிறப்பு விற்பனை மூலம் இன்று (ஜூன்.6) முதல் (ஜூன்.8) வரை மூன்று நாட்கள் நடைபெற உள்ளது மேட்டுப்பாளையம் முதலியார்பேட்டை தபால் நிலையம் ரங்கப்பிள்ளை வீதி தொலைபேசி அலுவலகங்களில் முகாம் நடக்கிறது. இதில் வாடிக்கையாளர்கள் தற்போதைய எண்ணை மாற்றாமல் பைபர் தொழில்நுட்பத்திற்கு தங்கள் லேண்ட்லைன் எண்ணை இலவசமாக மாற்றலாம்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான அறிவிப்பை தேர்தல் கமிஷன் கடந்த மார்ச் 16-ந் தேதி வெளியிட்டது. அன்றில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் நாடு முழுவதும் அமலுக்கு வந்தது இந்த நிலையில் புதுச்சேரியில் ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று ஜூன் 4-ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட்டன தேர்தல் நடத்தை விதிகள் தொடர்ந்து அமலில் இருந்து வந்த நிலையில், இன்று நள்ளிரவோடு தேர்தல் நடத்தை விதிகள் திரும்பப் பெறப்படுகின்றன.
புதுச்சேரி நாடாளுமன்ற தொகுதியில் மொத்தம் 26 வேட்பாளர் களமிறங்கினர். தேசிய கட்சியான பாஜக, காங்கிரஸ், பகுஜன் சமாஜ், மாநில கட்சிகளான அதிமுக, நாம் தமிழர், சுசி கம்யூனிஸ்ட், ஒருங்கிணைந்த இந்திய குடியரசு கட்சிகளை தவிர மற்ற 19 பேர் சுயேட்சைகளாக போட்டியிட்டனர்.
இவர்களில் காங்கிரஸ், பாஜகவை தவிர அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
புதுச்சேரி சட்டப்பணிகள் ஆணைய உறுப்பினர் செயலரும், மாவட்ட நீதிபதியுமான அம்பிகா இன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் காரைக்கால் மாவட்ட நீதிமன்ற வளாகம், மாகே, ஏனாம் நீதிமன்ற வளாகங்களில் வரும் ஜூன்.8ஆம் தேதி காலை 10 மணிக்கு தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற உள்ளது. தங்கள் வழக்குகளை சமாதானமான முறையில் தேசிய மக்கள் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு பெற்று பயனடையுமாறு தெரிவித்துள்ளார்.
2024 மக்களவைத் தேர்தல்:
*காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கம் – 4,26,005 வாக்குகள்
*பாஜக வேட்பாளர் நமச்சிவாயம் – 2,89,489 வாக்குகள்
*நாதக வேட்பாளர் ரா.மேனகா – 39,603 வாக்குகள்
*அதிமுக வேட்பாளர் தமிழ்வேந்தன் – 25,165 வாக்குகள்
Sorry, no posts matched your criteria.