India's largestHyperlocal short
news App
Get daily news updates that are tailored for you based on your preferred language & location.
நீட் தேர்வு முடிவுகளில் முறைகேடு நடந்திருப்பதாக புகார் எழுந்துள்ளது. இந்த நிலையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் காமராஜர் சதுக்கத்தில் போராட்டம் இன்று நடைபெற்றது.
போராட்டதில் தந்தை பெரியார் திராவிடர் கழக தலைவர் வீரமோகன் தலைமை வகித்தார். போராட்டத்தில் நீட் தேர்வு முடிவு நகலை தீயிட்டு கொளுத்தினர்.
2025ம் ஆண்டு குடியரசு தினத்தன்று அறிவிக்கப்பட உள்ள பத்ம விருதிற்கான தகுதியாளர்களை தேர்வு செய்யவதற்கான நாமினேஷன் உரிய படிவத்தில், கூடுதல் விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களுடன் இயக்குனர், செய்தி மற்றும் விளம்பரத் துறைக்கு 31.07.2024 முன்பாக அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்விருத்திற்கென புதுச்சேரி அரசால் அமைக்கப்பட்டுள்ள உயர்மட்ட குழுவினரால் தேர்ந்தெடுத்து மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்படுவர்
ரெட்டியார் பாளையம் புதுநகரில் இன்று கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து வெளியான விஷவாயு வீடுகளின் கழிவறை வழியாக வெளியேறியதால் உயிரிழப்பு ஏற்பட்டது. மேலும் உடல்நலம் பாதிக்கப்பட்ட மேலும் சிலர் மருத்துவமனையில் அனுமதி. இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் சம்பவ இடத்திற்கு முதல்வர் ரங்கசாமி வந்து ஆய்வு செய்து விஷவாயு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்கப்படும் என அறிவித்தார்.
புதுச்சேரி வடக்கு உட்கோட்ட நடுவா் அா்ஜூன் ராமகிருஷ்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் சாலைகள், பொது இடங்களில் விளம்பரப் பதாகைகள் வைப்பதைத் தவிா்க்க வேண்டும் மேலும் திறந்தவெளி தடுப்புச் சட்டத்தின்படி, அரசு அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெறாமல், பொது இடங்களில் பதாகைகள் வைப்பது குற்றமாகும். அப்படி வைத்தால் சிறைத் தண்டனையோ அபராதமோ விதிக்கப்படும் என்றார்.
காரைக்காலில் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தால் நுகர்வோர் குறைதீர்ப்பு முகாம் ஜூன்.13ஆம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 11.00 மணியில் இருந்து 13.00 மணி வரை காரைக்கால் மின்துறை தலைமை அலுவலகத்தில் வருகை தந்து மின் நுகர்வோர் சேவை குறைபாடுகளை நேரடியாக கேட்க உள்ளது. அதனால் மின் நுகர்வோர் குறைபாடுகள் சம்பந்தமாக நேரடியாக புகார் அளிக்கலாம் என்று மின்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதுச்சேரியில் கடந்த மார்ச்.31ம் தேதி அன்று தேங்காய்திட்டு மரப்பாலம் மின் நிலையம் சுற்றுச்சுவர் ஒட்டியுள்ள வாய்க்கால் சீரமைக்கும் பணியின்போது சுவர் இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்த 5 பேரின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சத்தையும், காயமடைந்த மூன்று தொழிலாளர்களுக்கு தலா ரூ. 3 லட்சத்தை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி சட்டப்பேரவை வளாகத்தில் இன்று வழங்கினார்.
புதுச்சேரி சுகாதாரத்துறை ஊழியர்களின் வாரிசு தாரர்கள் நல சங்கத்தின் சார்பில் 8 ஆண்டுகளுக்கும் மேலாக நிரப்பப்படாமல் உள்ள கருணை அடிப்படையில் வழங்கப்படும் வாரிசுதாரர் பணி நியமனத்தை விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் 1 முறை தளர்வு அளித்து பணி வழங்க நடவடிக்கை எடுக்கக்கோரி அரசு ஊழியர் சங்கங்களின் ஆலோசனையின் பேரில் இயக்குநர் அலுவலக வளாகத்தில் இன்று ஊழியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக பதவியேற்றுக்கொண்ட மோடிக்கு முதல்வர் ரங்க சாமி வாழ்த்து தெரிவித்துள் ளார் .இதுகுறித்து வெளியிட்டுள்ள செய்தியில் வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெற்று, உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாட்டின் பிரதமராக மூன்றாவது முறையாக உலகின் வலிமைமிக்க தலைவராக மீண்டும் பரிணமித்துள்ள பிரதமர் மோடிக்கு, எனது மற்றும் புதுச்சேரி அரசு சார்பாக நல்வாழ்த்துக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுவை அரவிந்தர் வீதி நாராயணன் என்பவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு பங்குச்சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறலாம் என கூறி நாராயணனிடம் ரூ.3.69 லட்சத்தையும் மற்றும் ரெயின்போ நகர் பகுதியை சேர்ந்த சஞ்சய் ஜெயினிடம் 3.90 லட்சத்தையும் முதலீடு செய்ய சொல்லி ஏமாற்றி உள்ளனர் நேற்று அவர்கள் அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
புதுச்சேரியை அடுத்த கோட்டகுப்பம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் சார்பாக 10 மற்றும்12 வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் புதிய உறுப்பினர்களுக்கு உறுப்பினர் சான்றிதழ் வழங்கும் விழா நேற்று சிறப்பாக நடைபெற்றது. விழாவிற்கு தலைவர் அன்சர் பாஷா தலைமை தாங்கினார் வியாபார சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் என கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார்கள்.
Sorry, no posts matched your criteria.